விட்டமின்-சி என்பது கர்ப்பகாலத்தில் உட்கொள்ள வேண்டிய முக்கிய விட்டமின்களில் ஒன்றாகும். பொதுவாக கர்ப்பம் தரித்த பெண் ஒருவர் விட்டமின்-சி யை உட்கொள்ள வேண்டும் எனவும் உட்கொள்ள வேண்டிய அளவு தொடர்பிலும் வைத்தியர் அவர்களுக்கு பரிந்துரைப்பார்.
அதற்கேற்ப குறித்த விட்டமின்-சியானது உள்ளெடுக்கப்பட வேண்டும். எனினும், அளவுக்கு அதிகமாக விட்டமின் உள்ளெடுப்பது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புக்களை முற்றுமுழுதாக குறைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், எம்மில் பலர் இது தொடர்பில் அறிந்திருப்பததில்லை. அது எப்படி என்பது தொடர்பில் இப்போது பார்ப்போம்.
பெண் ஒருத்தி கர்ப்பம் தரிக்க வேண்டும் எனில், அவளது உடலில் புரொஜெஸ்டரோன் எனும் ஹோர்மோன் சுரக்க வேண்டும். இந்த ஹோர்மோன் சுரக்காத பட்சத்தில் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு குறைவடையும்.
அளவுக்கு அதிகமாக விட்டமின்-சியை உட்கொள்ளும் போது அதில் உள்ள அஸ்கோர்பிக் அமிலம் புரொஜெஸ்டரோன் உற்பத்தி செய்யப்படுவதை தடுக்கிறது. மேலும், விட்டமின்-சியில் உள்ள இந்த அமிலம் பெண்ணுறுப்பில் அதிகம் அமிலத் தன்மையை உருவாக்குகின்றது. இந்த அமிலத் தன்மையானது விந்துக்கள் உட்புகுந்தவுடனேயே அவற்றை அழிக்கும் தன்மை உடையது.
எனவே அதிகபட்ச விட்டமின்-சியானது கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பம் தரிக்கவுள்ள பெண்களுக்கு சிறந்ததல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதுவே பல பெண்கள் குழந்தையின்றி வாட காரணமாகின்றது.