24.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
th
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா தக்காளி விதையால தான் இத்தனை நோய் நமக்கு வருதாம்! அப்போ எப்படி சாப்பிடலாம்!

ஒரு நாளின் மூன்று வேளைச் சமையலில் ஒரு வேளையாவது தக்காளி இல்லாமல் நம்மால் சமைக்க முடியாது. பழ வகையாக இருந்தாலும் காய்கறியுடன் ஒன்றிணையும் பண்பைக் கொண்ட தக்காளி சாறு நிறைந்த தன்மைக் கொண்ட ஒரு உணவுப்பொருள். பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தன்னிடம் கொண்டுள்ளது இந்த தக்காளி பழம்.

தினசரி சமையல் மட்டுமில்லாமல் கெட்சப், சாஸ் என்று பதப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு பரிமாணங்களில் மக்களைக் கவரும் தன்மைக் கொண்டது இந்த தக்காளி. தக்காளியின் தோல், சதைப்பகுதி, விதைகள் என்று எல்லா பகுதியும் சாப்பிடுவதற்கு ஏற்ற விதத்தில் உள்ளன. அனைத்துப் பகுதிகளும் பல்வேறு நன்மைகளை உடலுக்கு வாரி வழங்குகின்றன.

தக்காளி விதை
தக்காளியின் விதைகள் கொண்டுள்ள பல்வேறு அற்புத நன்மைகள் குறித்து காணவிருக்கிறோம். வீட்டிற்குள்ளேயே வளர்க்கும் விதத்தில் எளிமையான நிர்வகிப்பில் வளரக்கூடிய இந்த தக்காளியின் ஒவ்வொரு பகுதியும் சாப்பிடக்கூடிய நிலையில் உள்ளன. அதன் விதைகளையும் நாம் சாப்பிடுவதில் எந்த ஒரு தவறும் இல்லை. தக்காளி விதைகளைக் காய வைத்து, தூளாக்கி சாப்பிடலாம், இந்த விதைகளைக் கொண்டு எண்ணெய் தயாரித்து அழகு குறிப்புகளில் பயன்படுத்தலாம்.

என்ன பிரச்சினை
தக்காளி விதையின் வெளிப்புற ஓடுகள் கடினமாக இருக்கும் காரணத்தால் செரிமானம் ஆகாமல் இருக்கலாம். ஆனால் வயிற்றில் குடல் பகுதியில் இருக்கும் அமிலம் இந்த வெளிப்புற ஓடுகளையும் செரிமானம் செய்ய உதவுகிறது., பிறகு மலத்தின் மூலம் இந்த ஓடுகள் வெளியாகி விடுகிறது. தக்காளி விதைகள் குடல் வால் பகுதியில் அழற்சியை உண்டாக்கி அப்பெண்டிசிடிஸ் என்னும் குடல்வால் அழற்சி பாதிப்பை உண்டாக்குவதாக ஒரு தவறான கருத்து மக்களிடையே நிலவி வருகிறது.

வைட்டமின் ஏ மற்றும் சி சத்தின் ஆதாரமாக விளங்கும் இந்த தக்காளி விதைகள் நார்ச்சத்து அதிகமாகக் கொண்டுள்ளது . இதன் காரணமாக குடல் வால் பகுதியில் இவை அழற்சியை உண்டாக்குவதில்லை. ஆகவே குடல்வால் அழற்சிக்கு தக்காளி விதைகள் காரணம் இல்லை. தக்காளி விதைகள் எந்த வழியில் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன என்பதை மேலும் அறிந்துக் கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்..

இரத்த ஓட்டம்
ஐரோப்பாவில் உள்ள மருத்துவ நிபுணர்கள் நடத்திய மருத்துவ பரிசோதனையில் அறியப்பட்டது என்னவென்றால், தக்காளி விதைகளின் மேற்புறம் காணப்படும் இயற்கையான பசை இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது என்ற உண்மை. மேலும் தக்காளி விதைகள் இரத்தம் உறைவதைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இரத்தக் குழாய் வழியே இரத்தம் பாய்வதை அதிகரிக்கவும் உதவுகிறது.

இரத்தம் உறைதல்
அஸ்பிரின் மாத்திரையின் பண்புகளை ஒத்த பண்புகளைத் தக்காளி விதைகள் கொண்டிருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இதன் மூலம், தக்காளி விதைகள் இரத்தம் உறையும் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக அறியப்படுகிறது. இரத்த உறையும் அபாயத்தைத் தடுக்க தக்காளி விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.

அஸ்பிரின் பயன்படுத்தி வயிற்றுப் பகுதியில் இரத்தப்போக்கு, அல்சர் போன்ற பக்க விளைவுகளை ஏற்றுக் கொள்வதை ஒப்பிடும் போது தக்காளி விதைகள் எடுத்துக் கொள்வது சிறந்த பலனைக் கொடுக்கும்.

th

அஸ்பிரினுக்கு மாற்று
உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய பாதிப்பு உள்ள நோயாளிகளை தினமும் அஸ்பிரின் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அஸ்பிரின் மூலம் நிவாரணம் கிடைத்தாலும், நீண்ட நாட்கள் இதனை பயன்படுத்துவதால் அல்சர் போன்ற பக்க விளைவுகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

அதே சமயம், தக்காளி விதைகளில் அஸ்பிரின் போன்ற பண்புகள் காணப்படுகிறது ஆனால் அதன் பக்க விளைவுகள் இல்லாமல். தக்காளி விதைகளை எடுத்துக் கொண்ட மூன்று மணி நேரத்தில் ஒரு நபரின் இரத்த ஓட்டத்தில் மேம்பாடு தோன்றுவதாக சில ஆய்வின் முடிவுகள் விளக்குகின்றன. இதற்குக் காரணம் இவற்றில் காணப்படும் இயற்கை பசையாகும்.

இதய ஆரோக்கியம்
இந்த கூற்றை நிருபிக்க குறிப்பிட்ட முடிவுகள் இல்லை. உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் தக்காளி விதைகளின் தாக்கத்தை மெடிடரேனியன் டயட்டுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். மெடிடரேனியன் டயட் பின்பற்றுவதால் உண்டாகும் நன்மைகள் பல, தக்காளி விதைகளாலும் தக்காளியாலும் உண்டாகிறது. அவற்றுள் ஒன்று இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பது.

செரிமானக் கோளாறு
தக்காளி விதைகளில் நார்சத்து அதிகமாக உள்ளது. இதனால் எளிதான முறையில் செரிமானத்திற்கு உதவுகிறது. செரிமான அமினோ அமிலங்கள் மற்றும் TMEn ஆகியவற்றை போதுமான அளவு கொண்டிருப்பதால் செரிமானம் மேலும் மேம்படுகிறது.

பக்க விளைவுகள்
உடலுக்கு நன்மை தரும் பொருட்களுக்கு சில பக்க விளைவுகளும் இருக்க முடியும். இதற்கு தக்காளி விதைகள் விதிவிலக்கல்ல. ஒரு தனி நபரின் தற்போதைய உடல் நிலை, ஒவ்வாமை மற்றும் இதர காரணிகளைச் சார்ந்து சில எதிர்மறை விளைவுகளும் ஏற்படலாம்.

சிறுநீரக கற்கள்
தக்காளி விதைகள் உட்கொள்வதால் சிறுநீரக கற்கள் வளர்ச்சி அடைவது அறிவியல் பூர்வமாக நிருபிக்க்கப்படவில்லை என்றாலும், ஏற்கனவே சிறுநீரக கற்கள் பாதிப்பு கொண்ட நபருக்கு இந்த நிலையின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது. தக்காளி விதைகளில் ஆக்ஸலேட் அதிகம் இருப்பதால் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன, இந்த ஆக்ஸலேட் சிறுநீரகத்தில் கால்சியத்தை படிய வைக்க உதவுகிறது.

இதன் காரணமாக, சில வழக்குகளில் சிறுநீரக கற்கள் மோசமான வளர்ச்சி அடையலாம். சிறுநீரக கற்கள் பாதிப்பு கொண்ட நபர்கள் தக்காளி விதைகளைத் தவிர்ப்பதால், தீவிர அசௌகரிய நிலையைத் தவிர்க்கலாம்.

டைவர்டிகுலிடிஸ்
பாதிப்பு இதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட அறிவியல் ஆதாரமும் இல்லை என்றாலும், டைவர்டிகுலிடிஸ் பாதிப்பு உள்ளவர்கள் தக்காளி விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. தக்காளி விதைகள் குடல் பகுதியில் அழற்சியை உண்டாக்குவதாக ஒரு சில வழக்குகள் மட்டுமே அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. மற்றபடி, எல்லோருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை.

தக்காளி விதைகளை எப்படி சேர்த்துக் கொள்ளலாம்
தக்காளியின் சதைப் பகுதியை நீக்கி விதைகளை வெளியில் எடுக்கவும். இவற்றைக் காய வைத்து சாலடில் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி விதைகளில் சிறிதளவு உப்பு தூவியும் சாப்பிடலாம்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…வேப்ப எண்ணெயில் இவ்வளவு பலன் இருக்கா?

nathan

உங்களுக்கு 30 நொடிகளில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

அன்றாட பழக்கவழக்கம் உங்கள் விந்தணு உற்பத்தியை பாதிக்கிறதா??

nathan

பெண்களுக்கு ஏற்படும் இந்த ஆபத்தான பிரச்சனையை சரி பண்ண…

nathan

பருவம் அடையும் பெண்களுக்கு என்னென்ன சொல்லி தரவேண்டும்?

nathan

உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்!

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! கர்ப்பத்தால் ஏற்பட்ட ஸ்ட்ரெட்ச் மார்க்குளைப் போக்க சில டிப்ஸ்…

nathan

கொழுப்பு நல்லதா? கெட்டதா? தெரிஞ்சிக்கங்க…

nathan

Male Drinking – What’s the difference between female drinking?|ஆண் குடி – பெண் குடி என்ன வித்தியாசம்…

nathan