27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
மருத்துவ குறிப்பு

இதய குழாய் அடைப்பை சரிசெய்யும் உணவுகள்

இதய குழாய் அடைப்பை சரிசெய்யும் உணவுகள்
தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய்யைத் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். தேங்காய் எண்ணெய் 85 சதவீதம் பூரிதமான கொழுப்புச் சத்து கொண்டது. தேங்காயில் உள்ள கொழுப்பு அமிலம் (Fatty acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. தினமும் 2 முதல் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வது இதயத்திற்கு மிகவும் நல்லது.• காபி : காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிக்காவிட்டால் பலருக்கு அன்றைய பொழுதே தொடங்காது. காபியில் உள்ள ‘கேஃபஸ்டால்’ (Cafestol), கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ‘அல்சர்’ மற்றும் ‘இதய நோய்’ உள்ளவர்கள், காபி அருந்துவதை நிறுத்திவிடுவது நல்லது. அதேசமயம், காபி சில நோய்களுக்குத் தடுப்பு மருந்தாகவும் இருக்கிறது என்பது உண்மை. இதில் உள்ள சில வேதிப்பொருட்கள் ‘பார்கின்சன்’ நோய் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன. இன்சுலின் சுரக்கச் செய்வதால், காபி குடிப்பவர்களுக்கு இரண்டாம் வகை டயாபடீஸ் வராமல் தடுக்கலாம்.• ஆரஞ்சு ஜூஸ் : ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். ஆரஞ்சுப் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தானது அதிகம் நிறைந்திருப்பதால் அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும். மேலும் உடலில் எப்போது பொட்டாசியம் சத்துக் குறைகிறதோ அப்போது தான் இதயத்தில் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவே, தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது நல்லது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இந்த பழத்தை தினமும் சாப்பிட்டால், வலுவான பற்களைப் பெறலாம்.• கிரீன் டீ :   ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது. இதய நோய் வராமல் தடுக்கிறது.

• மாதுளம் பழம் : மதுளையில் சுண்ணாம்பு சத்து, தாது உப்புக்கள், இரும்புச் சத்து என நோயை எதிர்க்கும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. அடிக்கடி மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உண்டாகும். தினமும் மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள், இதய பலகீனம் நிவர்த்தியாகும். இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது.

• கீரைகள் : கீரைகள் தினமும் எடுத்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம். பெண்களுக்கு 100 கிராம் ஒரு நாளைக்கு, ஆண்களுக்கு 40 கிராம் ஒரு நாளைக்கு, பள்ளி செல்லும் சிறு பிள்ளைகளுக்கு (4-6 வயது) 50 கிராம் ஒரு நாளைக்கு, 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம் ஒரு நாளைக்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• தர்பூசணி : தர்பூசணி நீர்ச்சத்து நிறைந்தது. கோடையில் உடல் வெப்பத்தை குறைக்கும் ஆற்றல் இப்பழத்திற்கு உண்டு. இதில் நீர்ச்சத்தும், வைட்டமின்களும் அதிக அளவில் உண்டு.  தர்பூசணி பழத்தில் இரும்புச் சத்து அதிகம் காணப்படுகிறது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ காணப்படுகின்றன. வைட்டமின் பி6, வைட்டமின் பி1 உள்ளன. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன. தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக சிட்ரூலின், அர்ஜினைன் எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

• மஞ்சள் மஞ்சள் பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது. வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் போக்குகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும், குடற்பூச்சிகளைக் கொல்லும். நீரிழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைத்திடும். சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தி மஞ்சளுக்கு அதிகம் உண்டு. மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்தநீர் சுரப்பதையும் கட்டியாவதையும் குணப்படுத்திவிடும். மணத்தக்காளி கீரையோடு, பூண்டு 4 பல், நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

Related posts

மஞ்சள் காமாலையை குணமாக்கும் கீழாநெல்லி

nathan

fatty liver grade 1 in tamil – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை

nathan

கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை கரைக்கும் இயற்கை வழிகள்

nathan

நரம்பு தளர்ச்சியை குணமாகும் வசம்பு

nathan

உங்களுக்கு தெரியுமா உடல்சூடு, வயிற்றுவலிக்கு நிவாரணம் தரும் வெந்தயம்

nathan

சர்க்கரை வியாதியும் பாலியல் பிரச்சனைகளும்

nathan

பழமா… விஷமா?

nathan

கால் விரல் நகம் சொத்தை வருவதற்கான காரணம்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த மாதிரி விஷயங்களை கர்ப்பிணி பெண்களிடம் மறந்து கூட பேசாதீங்க!

nathan