28.2 C
Chennai
Thursday, Jul 3, 2025
625.0.560.350.
முகப் பராமரிப்பு

ஆண்களே நீங்களும் வெள்ளையாக சூப்பர் டிப்ஸ்..!

ஆண்களுக்கு பெண்களை போன்று வெள்ளையாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இதனை அவர்கள் வெளியில் சொல்ல வெட்கப்படுவதுண்டு.

இருப்பினும் சிலர் அதற்காக பெண்களைப் போன்றே கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள்.

இது எப்பொழுதுமே நிரந்தர தீர்வினை வழங்குவதில்லை.

வெயிலில் அதிகம் சுற்றுவதால், ஆண்களின் சருமம் விரைவில் கருமையாகிவிடும்.

இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.625.0.560.350.

  • எலுமிச்சை சாற்றினை நீரில் சரிசம அளவில் கலந்து, சருமத்தின் மீது தடவி 10 நிமிடம் கழித்து கழுவலாம். இல்லாவிட்டால், எலுமிச்சை சாற்றுடன் சிறிது தேன் கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • கற்றாழை ஜெல்லை தினமும் முகத்திற்கு காலையிலும், மாலையிலும் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், சரும கருமை நீங்கி, சருமம் வெள்ளையாகும்.
  • கடலை மாவுடன் பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ, சருமத்தில் உள்ள கருமை நீங்கும். இந்த முறையை ஆண்கள் தினமும் பின்பற்றி வந்தால், கருமை நீங்குவதோடு, முகம் பொலிவு பெறும்.
  • சந்தனப் பொடி குளிர்ச்சிமிக்கது மற்றும் இது சரும கருமையைப் போக்கவல்லதும் கூட. அத்தகைய சந்தனப் பொடியுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உலர வைத்து கழுவ வேண்டும்.
  • வெள்ளரிக்காயைக் கொண்டு தினமும் முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, சருமத்தில் இருக்கும் கருமையை நீக்கும்.
  • 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர்ந்த பின் கழுவ வேண்டும்.

 

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த 10 பழக்கவழக்கங்கள் உங்களை என்றும் இளமையாக வைக்கும்…!

nathan

சரும அழகை பாதுகாக்க கொத்தமல்லி பேஸ் பக்

nathan

ஹோம் ஃபேஷியல் (சமையலறையில் இருக்கு ஃபேஷியல் அயிட்டம்)

nathan

சுருக்கம் வேண்டாம்; பளபளப்பு வேணும்!

nathan

உங்க சருமம் வெள்ளையாகணுமா அப்போ இதை 2 முறை முயன்று பாருங்கள்!

nathan

முகத்தை வெண்மையாக மாற்ற சர்க்கரை வள்ளி கிழங்கை இவ்வாறு பயன்படுத்துங்கள்!….

sangika

அழகான கொழுக்கொழு கன்னங்களை பெற சூப்பர் டிப்ஸ்….

nathan

சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் ஃபேஸ் பேக்குகள்!!!

nathan

கண்களுக்குக் கீழ் வீக்கம்… தடுக்க 7 எளிய வழிமுறைகள்!

nathan