
சமையலறையில் இருக்கும் ஒருசில பொருட்களைக் கொண்டே கருவளையங்களைப் போக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.• தக்காளியை அரைத்தோ அல்லது வட்டமாக வெட்டியோ கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், கருவளையங்கள் மறைந்துவிடும்.• உருளைக்கிழங்கை சாறு எடுத்தோ அல்லது வட்டமாக வெட்டியோ கண்களின் மேல் வைத்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் தவறாமல் செய்து வர கருவளையம் காணாமல் போகும்.• க்ரீன் டீ பேக்கை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்த டீ பேக்கை ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, கண்களின் மேல் வைத்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், கருவளையம் மறைவதோடு, கண்களும் புத்துணர்ச்சி பெறும்.