26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
ftytfy
அழகு குறிப்புகள்

இதோ எளிய நிவாரணம்..முகப்பருவை நீக்கவும், சரும மேன்மைக்கும் உதவும் கொத்தமல்லி

முகப்பருவை போக்குகிறது கொத்தமல்லி. அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

கொத்தமல்லி சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். அந்த வகையில் முகப்பருவை போக்க கொத்தமல்லியை பயன்படுத்தலாம்.

கொத்தமல்லி சாற்றுடன் 2 தேக்கரண்டி பால் சேர்க்கவும். இதேயளவு வெள்ளரி சாறு, 4 தேக்கரண்டி ஓட்ஸ் எடுத்து நன்றாக கலந்து முகத்தில் பூசி சுமார் 15 நிமிடங்கள் அளவில் வைத்து முகத்தினை குளிர்ந்த நீரால் கழுவினால் மென்மையான சருமத்தினை பெறலாம்.

200 மில்லிலிட்டர் நீரில் கொத்தமல்லி, செவ்வந்தி இதழ் அல்லது எண்ணெய் மற்றும் சிறிது லெமன்கிராஸ் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி தண்ணீரை குளிர வைத்தல் வேண்டும். பின் அவிந்துள்ள பொருட்களை அரைத்து அதை முக்கதில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், முகப்பருவினை விரைவில் போக்கலாம்.

மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் வந்தால் அதனை போக்குவதற்கு 1 தேக்கரண்டி கொத்தமல்லி சாற்றுடன் எலுமிச்சை சாற்றை கலந்து, கரும்புள்ளிகள் உள்ள பகுதியில் பூசி அரை மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவ, கரும்புள்ளிகள் நீங்கும்.

2 தேக்கரண்டி கொத்தமல்லி சாறு, 2 தேக்கரண்டி தக்காளி சாறு மற்றும் சிறிது ரோஸ்வோட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள் முகத்தில் வரும் சிவத்த பருக்கள் இருந்த இடமே தெரியாது போகும்.
ftytfy
கொத்தமல்லியில் உள்ள விட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள், முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எனவே கொத்தமல்லி சாற்றினை எடுத்து, தலையில் நன்கு படும்படி பூசி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் அலசினால் முடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

உதடு கருப்பாக இருப்பவர்கள் இரவில் படுக்கும் முன், கொத்தமல்லி இலை சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். நாளடைவில் சிறந்த மாற்றம் தெரியும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாற்றையும் கலந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சிறிது கொத்தமல்லி இலைகள், தயிர் மற்றும் கற்றாழை சாறு ஆகியவற்றை சரிசமமாக எடுத்துக் கொண்டு நன்றாக அரைத்து, அதில் 1 தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும்.

Related posts

முதன் முறையாக வேதனையுடன் கூறிய ரேவதி! திருமணத்தில் நான் செய்த தவறு இதான்!

nathan

அடடே..! மேக்கப் இல்லாமல் அக்கா நக்மாவுடன் நடிகை ஜோதிகா…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தமிழ் புத்தாண்டிற்கு விரும்பி அணியக்கூடிய பாரம்பரிய புடவைகள்!!!

nathan

கழுத்து பராமரிப்பு

nathan

பேஷியல் டிப்ஸ்

nathan

பாதங்கள் மென்மையாகவும், வெடிப்புகள் இன்றியும் அழகாக இருக்க சில வழி

nathan

முக‌ அழகை‌க் கூ‌ட்ட

nathan

பருக்கள் உங்க முகத்தையே கெடுக்குதா..? இனி அந்த கவலையை ஒட்டு மொத்தமா ஒழித்து கட்ட ஒரு எளிய வழி!…

sangika

மனிதனுக்கு பன்றி இதயம் பொருத்தி சாதனை!

nathan