29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
uityutyu
மருத்துவ குறிப்பு

கட்டாயம் இதை படியுங்கள்..குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத மருந்துகள்

ஆஸ்பிரின்
மருத்துவர் பரிந்துரைக்காவிட்டால், ஆஸ்பிரின் அல்லது ஆஸ்பிரின் கலந்த மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆஸ்பிரினால், குழந்தைகளின் சிறுநீரகமும், மூளையும் பாதிப்படையும். எனவே மருந்து கடைகளில் வாங்கும் அனைத்து மருந்துகளிலும் ஆஸ்பிரின் இருக்காது என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.

எப்போதும் மருந்து வாங்கும் முன், முதலில் அதன் லேபிளை நன்கு படித்து பின்னரே வாங்க வேண்டும். மேலும் சாலிசிலிக் அல்லது அசிடைல்சாலிசிலிக் அமிலம் என்ற பெயரைக் கண்டால், அதுவும் ஆஸ்பிரினையே குறிக்கும். காய்ச்சல் என்றால், 6 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பாராசெட்டமால் (paracetamol) அல்லது இபுப்ரோஃபெனைக் (ibuprofen) கொடுக்கலாம்.

இருமல் மற்றும் சளி மருந்துகள்
குழந்தை மருத்துவத்தின் அமெரிக்க அகாடமியில் உறுப்பினர்களாக இருக்கும் குழந்தை மருத்துவர்கள், கண்டிப்பாக குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் மருந்துகளை பரிந்துரைக்கமாட்டார்கள். ஏனெனில் அவை சளி மற்றும் இருமலை குணப்படுத்துவதில்லை. சில நேரம் அதிக அளவில் கொடுப்பதால், அது ஆபத்தை கூட விளைவிக்கும். அதிலும் தூக்க கலக்கம், வயிற்று வலி, சொறி, அதிகமான இதயத் துடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் ஒவ்வொரு வருடமும் வீட்டிலேயே சளி மற்றும் இருமல் மருந்து கொடுப்பதால் தான், ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
uityutyu
குமட்டலை தடுக்கும் மருந்துகள்
மருத்துவர்கள் பரிந்துரைக்காவிட்டால் கண்டிப்பாக குழந்தைகளுக்கு குமட்டலை தடுக்கும் மருந்துகளை கொடுக்கக்கூடாது. பொதுவாக குமட்டல் வந்தால், நீண்ட நேரம் இருக்காது. ஆகவே குமட்டல் ஏற்படும் போது, அதனை தடுக்க மருந்துகள் அவசியம் இல்லை. சாதாரணமாக இருந்தாலே, அவை குணமாகிவிடும். அதை விட்டு, மருந்துகளை கொடுத்தால், அது ஆபத்தை விளைவிக்கும். ஒருவேளை குழந்தை வாந்தி எடுத்தால், அவர்களுக்கு தேவையான அளவு நீராகாரம் கொடுத்தால், உடல் வறட்சியைத் தடுக்கலாம். கைமீறிப் போனால், மருத்துவரை அணுகுவது நல்லது.

Related posts

உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்து போராட இயற்கை சிகிச்சைகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…இளம் வயதினரையும் தாக்கும் இதயநோய்! அதை தடுக்க இதை மட்டும் சாப்பிடுங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த உறுப்புகள் இல்லையென்றாலும் உங்களால் உயிர் வாழ முடியும்!

nathan

மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க வேண்டுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க… மருத்துவ குணங்களை பெற்ற அபூர்வ மரங்களில் ஒன்றான இத்தி மரத்தின் நன்மைகள்!!

nathan

மன அழுத்தம் தருமா ஸ்டீராய்டு கிரீம்கள்?

nathan

உங்களுக்கு ஏழே நாட்களில் இரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan

ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சையால் இவ்வளவு பலன்களா..!?

nathan

தெரிஞ்சிக்கங்க… மீன் சாப்பிட்டதும் இதை கண்டிப்பாக சாப்பிட்டுவிடாதீர்கள்?.. இல்லையெனில் அவ்வளவு தானாம்..!

nathan