27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
beautifullip
முகப் பராமரிப்பு

கருமையான உதடுகளை சிவப்பாக்க சூப்பர் டிப்ஸ்…!

பொதுவாக பெண்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்வது என்பது மிகவும் பிடித்தமான விடயம். பெண்களின் முகம் அழகு பெற உதடு ஒரு முக்கிய காரணமாகும். உதடுகளை பராமரித்து கொள்ள சில எளிய முறைகள் பற்றிப் பார்ப்போம்.

உதடு சிவப்பாக காலையில் பல் விளக்குவதற்கு முன்பு டூத் பிரஷைக் கொண்டு, லேசாக உதடுகளை தடவி விட்டால் போதும். உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். மேலும் உதடு சிவப்பாக மாறும்

உதடு சிவப்பாக முகத்துக்கு ஸ்க்ரப்பிங் பண்ணும்போது கடைசியாக உதடுகளில் ஒரு முறை தேய்த்தால் போதும். நல்ல தரமான லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் உபயோகித்தால் உதடுகள் நிறம் எப்போதும் மாறாமல் இருக்கும்.

உதடு சிவப்பாக மாற்ற, இரவு தூங்கும் முன் வெண்ணெய்யை உதட்டில் தடவி கொள்ளவும். பின்னர் காலை பல் துலக்கும் ப்ரஷ் வைத்து நன்றாக உதடுகளை தேய்க்கவும். தினமும் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக 3 நாள்களில் வித்தியாசம் தெரியும்.beautifullip

உதடுகளை சிவப்பாக மற்ற வெள்ளரிக்காயை வட்டவடிவில் மெல்லிய துண்டாக வெட்டி கொள்ளவும், பின் வெள்ளரி துண்டை நன்றாக உதட்டில் தேய்க்கவும். பின்னர் ஈரப்பதத்தை தக்கவைக்க தேன் தடவி கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் உதடு கருப்பாவதை தடுக்கபடுவதோடு உதடு சிவப்பாக மாறும்.

கறுத்துப் போன உதடுகளுக்கு க்ளிசரினை தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும் கூட நல்ல நிறம் கொடுக்கும். ஆனால் பிறவியிலேயே கருமை நிறத்தில் இருக்கும் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மட்டும்தான் சரியான வழி.

அதிக வேஸ்லின், லிப்க்ளாஸ் உபயோகம் கூட உதடுகளை கருப்படைய வைக்கும். இயற்கையான தயிர், பாலாடை கூட வேசலினுக்கு பதிலாக உபயோகிக்கலாம்.

Related posts

குளிர் காலத்தில் முகத்தை பராமரிக்க பழங்களை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்!…

sangika

கரும்புள்ளி, முகப்பரு, சுருக்கங்கள், கருமை போன்றவற்றைப் போக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க.!

nathan

பெண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்!…

sangika

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க – இயற்கை வைத்தியம்

nathan

முகத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்க உதவும் சமையலறைப் பொருட்கள்!!!

nathan

உப்பை கொண்டு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?

nathan

முகத்தில் உடனடியாக நிறம் தரும் சீரக நீரை எப்படி தயாரிக்கலாம்!

nathan

சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷ்ஷை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan

தேன் மற்றும் எலுமிச்சை மாஸ்க்

nathan