25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
gjhjh
அழகு குறிப்புகள்

இத படிங்க உங்கள் சருமம் மற்றும் தலை முடியில் இந்த பழங்களை பயன்படுத்தலாமா?

கிரான்பெர்ரி எனது சிவப்பு நிற மற்றும் வட்ட வடிவில் இருக்கும். இதன் சுவை மனதிற்கு திருப்தி அளிக்க கூடியதாக இருக்கும். இது ஒரு சுவையான பெர்ரியாக மட்டுமல்லாமல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது. கிரான்பெர்ரியில் அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாவர ஊட்டச்சத்துகள் உள்ளன.

கிரான்பெர்ரி உண்பதால் நம் இருதயத்துக்கு நல்லது. இது உங்கள் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளை போக்கவும், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், சுவாச கோளாறு சம்மந்தமான நோய்களை தவிர்க்கவும், ஸ்கர்வி நோயைத் தடுக்கவும், எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்தவும் உதவுகிறது. முக்கியமாக இது எடை இழப்பிற்கு உதவுகிறது.

மேலும் மக்கள் கிரான்பெர்ரியை அப்படியே உண்பதை விட ஜூஸ், ஜாஸ் மற்றும் ஜாமாகவும் சாப்பிடவும் விரும்புகிறார்கள். இன்று பல பெண்களின் பிரச்சனையாக இருப்பது முகப்பரு மற்றும் தலை முடிப் பிரச்னை தான். இதற்கான தீர்வாக கிரான்பெர்ரிகள் உங்கள் முகம் மற்றும் தலை முடிகளில் சில நன்மை பயக்கும் விஷயங்களுக்கு உதவுகிறது.
முகப்பரு
gjhjh
நீங்கள் முகப்பரு பிரச்சனையால் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளீர்களா கவலை கொள்ள வேண்டாம். உங்கள் முகப்பரு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக கிரான்பெர்ரி உள்ளது. கிரான்பெர்ரிகளில் ஒரு அழற்சி எதிர்ப்புப் பண்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை வலி மற்றும் கறைகளுக்கு எதிராக செயல் பட்டு உங்கள் முகப்பரு பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. மேலும் கிரான்பெர்ரிகளில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. இது வடுக்கள் மற்றும் முகப்பருக்களை மறையச் செய்யும். சிறிதளவு கிரான்பெர்ரி ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் காட்டன் ஒன்றை நனைத்து பருக்கள் இருக்கும் இடத்தில தடவுங்கள். காய்ந்த பிறகு சுத்தமான நீரில் கழுவுங்கள்.

எண்ணெய் சருமம்

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் கிரான்பெர்ரிகளை உபயோகிக்கலாம். கிரான்பெர்ரிகளில் இயற்கை அமிலங்கள் உள்ளன. இவை முகத்தில் எண்ணெய் வடிவதை தடுத்து முகப்பரு வராமல் பாதுகாக்கிறது. கிரான்பெர்ரி ஜூஸ் எடுத்து அதில் காட்டனை நனைத்து முகத்தில் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து குளிர்ச்சியான நீரில் கழுவுங்கள்.
itgyhgiu
நிறமிழந்த சருமம்

கிரான்பெர்ரிகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உள்ளன. இவை நீங்கள் இழந்த சருமத்தின் நிறத்தை திருப்பி தரும். சிறிதளவு கிரான்பெர்ரி ஜூஸ் மற்றும் கடலைமாவு எடுத்துக் கொண்டு நன்றாக கலக்கி கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் முகத்தில் மாஸ்க் போல் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

ஒளிரும் சருமம்

கிரான்பெர்ரி உங்களுக்கு ஒளிரும் மற்றும் பளபளப்பான சருமத்தை பெறுவதற்கு உதவுகிறது. கிரான்பெர்ரிகளில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளது. மேலும் இவை வறண்ட மற்றும் தொய்வான சருமத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிகல்களுக்கு எதிராக போராடுகிறது. கிரான்பெர்ரி ஜூஸ் உடன் தயிர் எடுத்து கலக்கி கொள்ளுங்கள். முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து விட்டு குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனை நீங்கள் தினமும் செய்யலாம்.

உறுதியான சருமம்

நீங்கள் உறுதியான சருமத்தை பெற விரும்பினால் கிரான்பெர்ரிகளை பயன்படுத்தலாம். கிரான்பெர்ரிகளில் நிறைந்துள்ள வைட்டமின் சி சருமத்தின் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. கொலாஜன் என்பது சருமத்திற்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்த்துக்களை எடுத்துச் சென்று சருமத்தை உறுதி செய்கிறது. கிரான்பெர்ரி ஜூஸ் எடுத்துக் கொண்டு அதனுடன் ஆரஞ்சு ஜூஸ் கலந்து கொள்ளுங்கள். உங்கள் முகத்தில் தேய்த்து காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

உச்சந்தலை எரிச்சல்

சிலர் உச்சந்தலையில் எரிச்சலை உணருவீர்கள். கிரான்பெர்ரிகளில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்க்கும் பண்புகள் உள்ளன, அவை உச்சந்தலையில் எரிச்சலைத் தடுக்க உதவுகின்றன. கிரான்பெர்ரிகளின் ஜூஸ் எடுத்துக் கொண்டு அதனை முட்டையின் வெள்ளை கருவில் கலந்து உங்கள் முடியின் வேர்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். மேலும் இதனை வாரத்தில் இரண்டு முறை செய்யலாம்.

பளபளப்பான முடி

நம்மில் பல பேரின் ஆசை பளபளப்பான முடியை பெறுவதுதான். கிரான்பெர்ரிகளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் தலைமுடியை பளபளப்பாக மாற்ற உதவுகிறது. கிரான்பெர்ரி ஜூஸ் மற்றும் ஒரு கப் மயோனைஷ் எடுத்து கலந்து கொள்ளுங்கள். முடியின் வேர்களில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முடி பளபளப்பாக மாற்றி விடும்.

ஹேர் கலர்

உங்கள் முடியை இயற்கையான முறையில் கலரிங் செய்ய வேண்டுமா, அப்போ நீங்க கிரான்பெர்ரிகளை பயன்படுத்தலாம். இதில் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. சுத்தமான கிரான்பெர்ரி ஜூஸ் எடுத்து தண்ணீர் சேர்த்து கலக்கி உங்கள் முடியின் மேல் தடவி காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனை நீங்கள் அடிக்கடி செய்தால் உங்கள் முடி இயற்கையான முறையில் சிவப்பு நிறமாக மாறிவிடும்.

Related posts

பாதவெடிப்பு அதிக வலி திரும்ப வருகிறதே என கவலையாக இருக்கிறதா?

nathan

குழந்தைகள் பயறு கடலையை சாப்பிட மறுக்கிறார்களா? இப்படி செய்து கொடுங்கள்!…

sangika

இயற்கை பொருட்களை பயன்படுத்தினால் உங்களின் முகம் எப்போதும் இளமையாகவும் பொலிவுடனும் இருக்கும்…..

sangika

பழங்கள் அழகும் தரும்

nathan

கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்து வந்த பொலிஸ் அதிகாரி! தங்க கழிப்பறை… தங்க படிக்கட்டு!

nathan

சரும சுருக்கத்தை போக்கும் வோட்கா பேஷியல்

nathan

ஆண்களுக்கு மட்டும், கொழுப்பு குறைக்க

nathan

உங்கள் கால்களையும் கைகளையும் ஒளிரச் செய்ய உதவும் உதவிக்குறிப்புகளை நாங்கள் இக்கட்டுரையின் மூலம் உங்களுக்குக் கொண்டு வருகிறோம்.

nathan

இரண்டாம் கல்யாணம்.. பிரபல நடிகருடன் ரகசிய காதலில் நடிகை சமந்தா..

nathan