பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை இந்த தொடை இடுக்கில் வரும் கறுப்பு தான். நடக்கும் போது இரண்டு தொடைகளும் உரசி இந்த கறுப்பு அடையாளம் வரும்.
சிலருக்கு இதனால் புண் கூட வரும். சரி இதற்கு என்ன செய்வது என பார்க்கலாம். உங்கள் வீட்டில் கசகசா இருக்கும்.
இதனை ஊற வைத்து அரைப்பதற்கு பல மணி நேரங்கள் வேண்டும் என்பதால் இலகுவாக பயன்படுத்தக் கூடிய முறையை சொல்லித் தருகிறேன். முதலில் கசகசாவை மிக்ஸியில் போட்டு தூளாக்கிக் கொள்ளுங்கள். இதனை கண்ணாடி போத்தலில் போட்டு பாத்திரப் படுத்திக் கொள்ளலாம்.
சிறிய பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் கசகசா பொடி 2 கரண்டி போட்டுக் கொள்ளுங்கள். அதில் ஒரு கரண்டி காய்ச்சிய பால் சேருங்கள், அத்துடன் உருளைக்கிழங்கு சாறு ஒரு கரண்டி சேருங்கள். இப்போது மிக்ஸ் செய்யுங்கள். ஓரளவு பேஸ்ட் பதம் வரும் வரை பால் கலந்து மிக்ஸ் செய்யலாம். இப்போது பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்.
உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி அதனை மிக்ஸ் செய்து வைத்துள்ள கலவையில் தொட்டு செய்து தொடையில் கறுப்பு அடையாளம் உள்ள பகுதியில் மெதுவாக தேயுங்கள். அதன் பின் 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின் கழுவுங்கள் தொடங்கு மூன்று நாட்கள் செய்யும் போதே மாற்றத்தை உணர்வீர்கள்..!!