23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
fhfg
தலைமுடி சிகிச்சை

இயற்கை பொருள் சீயக்காய்!! கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும்..

சீயக்காய் என்பது நம் கூந்தலையும், தலைச்சருமத்தையும் பராமரிக்க காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்றாகும்.

ஏராளமான கூந்தல் பராமரிப்பு பொருட்கள் வந்தாலும், கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு இன்றளவும் பல பெண்கள் சிகைக்காய் பயன்படுத்துவதையே விரும்புகின்றனர்.

சிகைக்காய் கூந்தல் பராமரிப்பு மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு சித்த மருத்துவம் மற்றும் ஆயிர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும். எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது சிகைக்காய் பொடி தேய்க்க தேகத்தில் உள்ள அழுக்கை அகற்றும். சொறி, சிரங்கு முதலியவற்றை நீக்கும்.

தலைக்கு தேய்த்து குளித்து வர கூந்தல் செழிப்பாக வளர செய்யும். பொடுகை நீக்கும். சிகைக்காயை சுட்டு கரியாக்கி நல்லெண்ணெய்யில் குழைத்து மண்டை கரப்பான், தேக கரப்பான் இவைகளுக்கு தடவி வர ஆறும்.
fhfg
மயிர்கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வைட்டமின் டி மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்களை அளித்து, இது தலைச்சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

கூந்தலின் ஆரோக்கியம் மேம்படும் இது மற்ற மூலிகைகளை மற்றும் இயற்கை சாறுகளுடன் நன்றாக ஒன்றி விடும். அதனால் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு பயனாக அமையும்.

முடியின் நிறத்தை தக்க வைக்கும் கூந்தலுக்கு சாயம் போடுவதற்கு முன், அது இயற்கை சாயமாக இருந்தாலும் கூட, கூந்தலை சீயக்காய் கொண்டு கழுவ வேண்டும். இதனால் சாயம் அதிக நேரம் ஊறி, நீண்டு நிலைக்கும். பொடுகை தடுக்கும் பொடுகை எதிர்த்து போராடவும் சீயக்காய் உதவுகிறது.

Related posts

கற்றாழை ஜெல்லைக் கொண்டு பொடுகுத் தொல்லையை விரட்டுவது எப்படி?

nathan

சும்மா பளபளக்கும்… வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா?

nathan

பெண்களே நரைமுடியால் அவதிப்படுகிறீர்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

அழகுக் கூந்தலுக்கு தூயத் தேங்காய் எண்ணெய்

nathan

இயற்கை கலரிங்…

nathan

பெரும்பாலானோருக்கு ஏற்படும் முடிப் பிளவுக்குத் தீர்வு!

nathan

பொடுகு, முடி உதிர்வு மற்றும் முடி பிளவை தடுக்கும் அற்புதமான எண்ணெய்

nathan

உங்க முடி உடையாம கொட்டாம பளபளன்னு இருக்க நீங்க இத செஞ்சா போதுமாம்…!

nathan

கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள இயற்கை கலரிங்

nathan