25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
அழகு குறிப்புகள்உதடு பராமரிப்பு

உதடுக்கு லிப்ஸ்டிக் போடுவது எப்படி?

 

உதடுக்கு லிப்ஸ்டிக் போடுவது எப்படி?

மெல்லிய, தடிமனான, சொப்பு என உதடுகளின் அமைப்பு, நிறம் ஆகியவற்றை பொருத்து லிப்ஸ்டிக் பூசி மேலும் அழகாக்குங்கள். முகத்துக்கு ஏற்ற மாதிரி இல்லாமல் சிறிதாக சொப்பு போன்ற வாய் உள்ளவர்கள் லிப்ஸ்டிக்கை உதடுகளின் இரு முனைகளிலும் சற்று அதிகப்படியாக பூசுங்கள். வாய் சற்று பெரிதாகத் தெரியும்.

தடித்த உதடுகள் உள்ளவர்கள் உதட்டுக்கு உட்புறமாக லிப்ஸ்டிக் போடுங்கள். இயற்கை நிற லிப்ஸ்டிக்கை லேசாகத் தடவினால் போதும். மெல்லிய உதடு உள்ளவர்கள் கீழ் உதட்டில் டார்க் நிறமும் லைட் நிறத்தை மேல் உதட்டிலும் பூசுங்கள். பிறகு உதட்டுக்கு வெளியில் பென்சிலால் கோடு போடுங்கள். தடித்த உதடு என்றால் உட்புறமாக போடுங்கள்.

மாநிற பெண்கள் லைட் ஆரஞ்ச் கலர், கருப்பு நிற பெண்கள் லைட் சிவப்பு, சிவப்பு பெண்கள் லைட் ரோஸ் (பிங்க்) லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். உதடுகளின் ஈரப்பசையை நீக்கிவிட்டு லிப்ஸ்டிக் போட்டால் சீக்கிரம் அழியாது. காலையில் லைட் கலர் லிப்ஸ்டிக்கும், மாலையில் பளிச் நிறத்திலும் போடுங்கள். ஆடைக்கு ஏற்ற நிறத்தைத் தேர்ந்தெடுத்து போடலாம்.

டார்க் கலர் போட்டால் வயது அதிகமாக காட்டும். லைட் கலர் கவர்ச்சியாக இருக்கும். வீட்டில் இருக்கும்போது லிப்ஸ்டிக் வேண்டாம். அடிக்கடி உபயோகித்தால் உதடுகள் கருமையாகிவிடும்.

Related posts

முகத்தில் ஆப்பிள்சாறு

nathan

உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் 5 இயற்கை கண் மாஸ்க்!..

nathan

எப்படி கைகளை சுத்தம் செய்வது?….

sangika

உங்களுக்கு தெரியுமா வாழை இலைக் குளியல் தரும் பலன்கள்?

nathan

மஹத் மகனா இது ? அதுக்குள்ள எப்படி வளந்துட்டார்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் தங்கள் சருமத்தை பராமரித்து கொள்வது எப்படி? இதோ எளிய குறிப்புகள்

nathan

இந்த வயசுலயும் இப்படியா.? – காவ்யா மாதவன் வெளியிட்ட புகைப்படம் …

nathan

நகங்கள் உடைந்து போகுதா கவலையை விடுங்க

nathan

இந்த வயசிலும் செம்ம குத்தாட்டம் போடும் கனிகா

nathan