29.4 C
Chennai
Wednesday, Jun 26, 2024
10 1541
மருத்துவ குறிப்பு

பதற வைக்கும் தகவல்! இந்த வினோத அறிகுறிகள் உடலில் இருந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது..!

கால மாற்றத்தால் பல்வேறு நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு ஒரு வகையில் நாம் தான் காரணம், என்றாலும் அதனால் ஏற்பட கூடிய விளைவையும் நாம் தான் கையாள வேண்டும். அந்த வகையில் நமக்கு ஏற்படுகின்ற பல வகையான உடல் மாற்றங்கள் இதில் அடங்கும்.

உடலில் ஏற்படுகின்ற மாற்றத்தை நாம் சாதாரணமாக கருத கூடாது. ஏனெனில், ஒரு சிறிய செல்களின் மாற்றம் கூட நமது உயிரையே பறிக்க கூடும். எந்தெந்த மாற்றங்கள் உடலில் ஏற்பட்டால் நாம் அபாயகரமான நிலையில் உள்ளோம் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பாதுகாப்பு அவசியம்..! நமது உடலில் ஏற்பட கூடிய மாற்றங்கள் நமக்கு பல்வேறு விளைவுகளை தர கூடியதாகும். உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஏராளமான மாற்றங்கள் நமக்கு ஏற்படுகிறது. அவை அத்தனையும் நாம் கவனத்தில் எடுத்தியது கொள்ள வேண்டும். இவை பெரிய அளவில் வருவதற்கு முன்பே இவற்றை சரி செய்து விட்டால் மிகவும் சிறப்பு.

புருவ முடி கொட்டுதா..? சாதாரணமாகவே முடி உதிர்ந்தால் அது பல்வேறு நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம். அதே போன்று, உங்களின் புருவ முடி கொட்டுவதும் சற்றே மோசமான அறிகுறியாகும். கண்ணாடி பார்க்கும் போது உங்களின் புருவ முடியில் மாற்றம் தெரிந்தால் அவை தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். மேலும், வேறு சில ஹார்மோன்களின் குறைபாடாகவும் இருக்கலாம்.

வறண்ட பாதங்கள் சரும வறட்சியோ அல்லது தோலில் ஏதேனும் வறட்சி ஏற்பட்டால் அதற்கு காரணம் வைட்டமின் குறைபாடாக சொல்வார்கள். ஆனால், பாதங்களில் வறட்சி ஏற்பட்டு வெடிப்பு போன்று வந்தால் உடலில் உள்ள சில முக்கிய சுரப்பிகள் பாதிப்பான நிலையில் உள்ளது என அர்த்தமாம். அத்துடன் இவை தொற்றுகளினாலும் ஏற்பட கூடும்.

சிவந்த முகம் சிலருக்கு கோபத்தால் முகம் சிவக்க கூடும். ஆனால், இது அவ்வளவு பெரிய ஆபத்து கிடையாது. மாறாக, காரணமே இல்லாமல் உங்களின் முகம் சிவந்தால் கட்டாயம் அதனை கவனமாக எடுத்து கொள்ளுங்கள். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்புகள் இருந்தால் மோசமான நோயாக கூட இருக்கலாம்.

வடிவம் கூட மாறுமா..? பெரும்பாலும் உடல் உறுப்புகளின் வடிவம் மாறினால் பல வகையான ஆபத்துகள் ஏற்பட கூடும். குறிப்பாக உங்களின் கால்களின் வடிவம் மாறினால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில், இது எலும்பு சார்ந்த பாதிப்பாக இருக்க கூடும். சிலர் ஹை ஹீல்ஸ் அணிவதாலும் இந்த பிரச்சினை ஏற்படும்.

தொண்டை வலி
தொண்டை கரகரப்பாக இருந்தால் நாம் சளி அல்லது இரும்பல் என்றே எண்ணுவோம். இதுவே பல நாட்களாக நீடித்தால் குரலில் மாற்றம், தொண்டை வலி, அரிப்பு போன்றவை ஏற்படும். இவை புற்றுநோயாக கூட இருக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே, தொண்டையில் நீண்ட நாட்களாக ஏதேனும் மாற்றம் தெரிந்தால் பரிசோதனை பெறுங்கள்.

பற்களில் வெள்ளையா..?
நீண்ட நாட்களாக பற்களில் பாதி பகுதியில் மட்டும் வெள்ளையாக இருந்தால் கண்டு கொள்ளாமல் விடாதீர்கள். இவை ப்ளூரின் அதிகமாக உடலில் இருப்பதால் ஏற்பட்டிருக்க கூடும். இந்த நிலை நீடித்தால் பற்கள் சொத்தையாக மாறி விழ தொடங்கும்.
வறண்ட உதடுகள் சிலருக்கு உதடுகள் வறட்சி பெற்று, எப்போதும் தோல் உரித்தலாகவே இருக்கும். இது போன்று இருந்தால் கண்டு கொள்ளாமல் இருக்காதீர்கள். வைட்டமின் சி, எ, ஈ போன்றவற்றின் குறைபாடாக கூட இருக்கலாம். மேலும், சில மோசமான தொற்றுகளினால் கூட இப்படி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, இது போன்ற இருந்தால் மருத்துவரை சந்திப்பது நல்லது.
10 1541
நகம் உடைதல் உடலின் ஏற்பட்டுள்ள அபாயகரமான மாற்றத்தை குறிக்கும் விதமாக இந்த நக உடைதலை நாம் எடுத்து கொள்ளலாம். நகம் உடைந்தாலோ, வெள்ளையாக இருந்தாலோ, மஞ்சள் நிறமாக மாறினாலோ எண்ணற்ற பாதிப்புகளை இது தருமாம்.

முடி உதிர்தல் முடி உதிர்ந்தால் நம்மில் பலர் முடியை சார்ந்த விஷயமாக மட்டுமே பார்க்கின்றோம். ஆனால், இவை சற்றே ஆபத்தான அறிகுறியாகும். சிலருக்கு தோல் வியாதி, தைராய்டு குறைபாடு, இரும்பு சத்து குறைவு, புற்றுநோய் போன்ற காரணத்தால் அதிக அளவில் முடி கொட்ட கூடும். எனவே, ஜாக்கிரதையாக இதனை கையாளுங்கள்.

வறண்ட கைகள் உங்களின் கைகள் மற்றும் தோல் மிகவும் வறண்டு காணப்படுகிறதா..? அப்போ உங்களின் சருமத்தில் ஈரப்பதம் இல்லை என்று அர்த்தம். அத்துடன் இவை சர்க்கரை நோய், ஞாபக மறதி, தைராய்டு பிரச்சினை போன்றவையாக கூட இருக்கலாம். மேற்சொன்ன அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உங்களின் உடலில் நீண்ட காலம் இருந்தால், மருத்துவரை கட்டாயம் அணுகுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பிறருடனும் பகிரவும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாவதற்கு முன்பே இதை செய்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்!

nathan

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது – ஏன் தெரியுமா?

nathan

பாதத்தில் அடிக்கடி எரிச்சல் உண்டாகிறதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் இந்த பூ….இருந்த தடமே தெரியாதாம்

nathan

குழந்தை நோய்களும் -ஹோமியோ மருத்துவமும்

nathan

உங்களுக்கு அசிங்கமாக இருக்கும் குதிகால் வெடிப்பை போக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகளின் உடலைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!!!

nathan

மரு, கட்டியை குணப்படுத்தும் இரணகள்ளி

nathan

மர்ம & விஷ காய்ச்சல் ஏன் வருகிறது ?

nathan