24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
oilyfack 1520946066
சரும பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா இந்த உணவுகளையெல்லாம் சாப்பிட்டால் கண்டிப்பாக உங்கள் முகத்தில் எண்ணெய் வடியுமாம்…!

உணவின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகில் பலர் உணவின்றியே வாழ்கின்றனர். மிகவும் வறண்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சாதாரணமாக நீர் கிடைப்பதே மிகவும் கடினமான ஒன்று. அவ்வாறு இருக்க அவர்கள் எவ்வாறு சாதாரண உணவை உண்ண முடியும். அப்படியே உணவு அதிகமாக கிடைத்தாலும் அது சத்தற்றே உள்ளது. உண்ணும் உணவு சத்துக்கள் இன்றி இருந்தால் அதில் எந்த பயனும் இல்லை.

பல வகையான உணவு பழக்கத்தின் விளைவு உடலில் வெவ்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த பதிவில் எந்தெந்த உணவுகளை உண்டால் அது எண்ணெய் பசை சருமத்தை உருவாக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

எண்ணெய் பசை சருமம்... ஒருவருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிந்தால் அதற்கு பல காரணிகளை கூறலாம். முகத்தில் பயன்படுத்தும் கிரீம்கள், ஹார்மோன்களின் மாற்றம், அதிகமான எண்ணெய் உணவுகள், சுற்றுசூழல் காரணத்தால், அதிக மன அழுத்தம்… இப்படி காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதன் தாக்கத்தால் முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிக படியான எண்ணெய் பசையை வெளியிட செய்யும். இதுதான், முகத்தில் எண்ணெய் வடிய காரணம்.

பால் வகை உணவுகள்…
உணவில் அதிகமாக பால் சார்ந்த பொருட்களை சேர்த்து கொண்டால் அது முகத்தில் எண்ணெய் பசையை ஏற்படுத்தும். நிறையுறாத கொழுப்புகளை அதிகம் கொண்ட வெண்ணெய், நெய், பாலாடை கட்டி போன்றவை முகத்தில் எண்ணெய்யை அதிகம் சுரக்க செய்யும். அத்துடன் பாதம் பால் மற்றும் சோயா பால் ஆகியவற்றையும் அதிகம் குடிப்பதால் இது எண்ணெய் வடியும் முகமாக மாற்றும்.

சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்… உணவில் சுத்தம் மிக முக்கியமானதுதான். ஆனால், அதற்காக உணவை முற்றிலுமாக சுத்தம் செய்வதென்பது அவற்றில் உள்ள சத்துக்களை உறிஞ்சி எடுப்பதற்கு சமமாகும். மேலும் அதில் சுத்திகரிக்க, பல வித வேதி பொருட்களும் பயன்படுத்துவதால் அவற்றின் தன்மை மாறி விடுகிறது. பிரட், கேக், பிஸ்கட்ஸ், மிட்டாய்கள் ஆகியவை எண்ணற்ற தீங்கை உடலுக்கு தர கூடும். அதாவது சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் சருமத்தை பாதித்து முகப்பரு, எண்ணெய் வடிதல், அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும்.

வறுத்த பொறித்த உணவுகள்… நம்மில் பலருக்கு சாயுங்காலம் வேளையில் ஏதாவது வறுத்த அல்லது பொறித்த உணவை கோரிக்க வேண்டும் என்பது பழக்கமாகவே மாறி விட்டது. சமோசா, பஜ்ஜி, வடை, பகோடா போன்றவற்றை பெரிதும் நாம் விரும்பி உண்ணுவோம். இதுதான் உங்கள் முகத்தில் எண்ணெய் வடிய முதன்மையான காரணமாகும். அத்துடன் இவை உங்கள் சரும ஆரோக்கியத்தையும் சேர்த்தே கெடுக்கும்.oilyfack 1520946066

இனிப்பை ஓரமாக ஒதுக்குங்கள்… அதிகமாக சர்க்கரை உள்ள தின்பண்டங்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதோடு முக அழகையும் சேர்த்தே கெடுகிறது. உதாரணத்திற்கு இனிப்பு வகைகள், மிட்டாய்கள், ஐஸ் கிரீம்கள் போன்ற உணவு பொருட்கள் உடலில் எண்ணெய் சுரப்பிகளை அதிகமாக சுரக்க செய்கின்றது. இதுதான் முகத்தின் அழகிற்கு தீங்கை ஏற்படுத்துகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்… உணவுகளில் அதிகமாக கெடுதல் தர கூடியது இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்தான். பொதுவாக ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கால அளவு இருக்கும். அந்த கால அளவை தாண்டி அவற்றை உண்டால், உடலுக்கு நன்மையை அது தராது. பதப்படுத்தப்பட்ட மீன்கள், இறைச்சி, தின்பண்டங்கள் போன்ற அனைத்துமே சரும ஆரோக்கியத்தை கெடுக்கும்.

கார்ப்ஸ் தரும் விளைவுகள்… வெள்ளை அரிசி, வெள்ளை பிரட் மற்றும் சில சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் அதிக கிளைசெமிக் இன்டெஸ்(glycemic index,) அளவை கொண்டது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிட செய்யும். உடலில் இதன் அளவு அதிகமானால் எண்ணெய் உற்பத்தியை பெருக்கும். இஃது முகத்தின் எண்ணெய் வடிதலுக்கு வழி செய்யும்.

மது வேண்டாமே… எப்படி பார்த்தாலும் மது உடலுக்கு தீங்கைதான் தருகிறது. மது அருந்துவதால் உங்கள் தோலை டீஹைடிரேட் செய்து வியர்வை வடிதல், எண்ணெய் பசையை உருவாக்குதல் போன்றவை நிகழும். குறிப்பாக முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை உருவாகும். அத்துடன் முகத்தில் உள்ள துவாரங்களை திறக்க செய்து சுரப்பிகளை நன்கு இது சுரக்க செய்யும். இது எண்ணெய் வடிதலை ஏற்படுத்தும்.

தீர்வு காணலாம்… மேற்கண்ட எந்த உணவு வகைகளையும் உங்கள் உணவில் அதிகம் எடுத்து கொள்ள வேண்டாம். இதனை மீறினால் அது உங்கள் முகத்தை கெடுத்து விடும். அதிகமான பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை உங்கள் உணவில் நிறைய எடுத்து கொள்ளுங்கள். இது முக ஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவும்.

Related posts

ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடும்!…அற்புதமான எளிய தீர்வு

nathan

தோலின் நிறமாற்றத்தை போக்க இயற்கை முறையில் கிடைக்கும் ஸ்கின்டேன்

nathan

உங்களுக்கு தெரியுமா அழகுக்காக இப்படியெல்லாமா செய்வார்கள்?

nathan

உங்கள் மீது வியர்வை துர்நாற்றம் வீசுகிறதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!

nathan

உடல் துர்நாற்றத்தை போக்க எளிய இயற்கை வழிகள்!

nathan

சருமம் பார்க்க மிக சொரசொரப்பாக இருந்தால் எளிமையாக சரி செய்ய சில வழி முறைகள்!…

sangika

உங்களுக்கு தெரியுமா எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைக்கும் சக்தி இந்த ஒரே ஒரு பொருளுக்கு உண்டு….!

nathan

குளிர்காலத்தில் சரும அழகை மேம்படுத்த ஆயுர்வேதம் கூறும் சில குறிப்புகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நடிகை காஜல் அகர்வாலின் அழகு ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா?

nathan