26.7 C
Chennai
Friday, Mar 13, 2026
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா மலச்சிக்கலை விரட்ட இந்த ஒரு பொருள் போதுமே

பொதுவாக மனிதனுக்கு ஏற்படும் ஒரு உடல் உபாதைகளில் ஒன்று தான் மலச்சிக்கல்.

உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுவதால் மலம் கழிக்கும் போது, மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதற்கு மலமிளக்கிகளை உபயோகிப்பதை தவிர்த்து இயற்கையான முறைகளை மேற்கொள்ளுவதே சிறந்தது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றார்கள்.

இஞ்சியில் இயற்கையாக மலமிளக்கும் தன்மை உள்ளது. எனவே, மலச்சிக்கலின்போது இஞ்சி சாப்பிட்டால் குடலியக்கம் சீராக செயல்படும்.

இஞ்சியில் உள்ள ஜிஞ்செரால் என்னும் பொருள், குமட்டல், சளி, இருமல், மூட்டு பிரச்சனைகள், இதய நோய்கள், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது

மலச்சிக்கலை போக்க இஞ்சியை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
  • இஞ்சியின் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு, நன்றாக மென்று அதன் சாற்றினை விழுங்க வேண்டும். இதன்மூலம் செரிமானம் மேம்படுத்தப்பட்டு, மலச்சிக்கலில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • எலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு, அதனுடன் சுடுநீரை ஊற்றி, தேன் கலந்து தினமும் 3 டம்ளர் குடித்து வந்தால், மலச்சிக்கல் குணமாகும்.
  • கரும்பு ஜூஸில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, தேன் கலந்து குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கலாம்.
  • கொதிக்கும் நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, பின் அதை வடிகட்டி, அதில் தேன் கலந்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராகி, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
  • மரக்கறி சூப் செய்யும் போது, அதனுடன் இஞ்சியை துருவி அதனுடன் சேர்த்து குடித்து வந்தால், மலச்சிக்கல் குணமாகும்.

Related posts

உங்க பற்கள் ஆடினா உடனே அவற்றை பிடுங்க வேண்டாம்!இதை முயன்று பாருங்கள்..

nathan

கர்ப்ப காலத்தில் உங்கள் முடியை நிறம் செய்வது பாதுகாப்பானதா,

nathan

உங்களுக்கு தெரியுமா தாய்ப்பால் அதிகம் சுரக்க வைக்க அம்மாக்கள் என்ன சாப்பிடலாம் !!

nathan

எளிய மருத்துவம்-இய‌ற்கை வைத்தியம்!

nathan

பெண்கள் மீதான வன்முறையை ஒடுக்க வேண்டும்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

nathan

பெண் குழந்தை வளர்ப்பில் தாயின் பங்களிப்பு அவசியம்

nathan

தெரிஞ்சிக்கங்க… நச்சகற்றும் பாத சிகிச்சை! இந்த ஒரு பொருளுக்கு இவ்வளவு சக்தியா?

nathan

உங்களுக்கு தெரியுமா மருத்துவ குணம் மிகுந்த மூலிகைகளும் அதன் பயன்களும்…!!

nathan