Nail Care
அழகு குறிப்புகள்

நகங்கள் உடைந்து போகிறதா…நகங்கள் அழகாக, நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்…

பெண்கள் தங்கள் முக அழகுக்கு செலவிடும் நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ செலவிடுவதில்லை. விரல்கள் அழகாக காட்சியளிக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும். நகங்கள் அழகாக, நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்…

* தரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண் டும். அப்போது தான் நகத் திற்கு எவ்வித பாதிப்பும் வராது. நெயில் பாலீஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து தேர்ந் தெடுங்கள்.

* சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.

* நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.

* நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.

* தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

* தினமும் நெயில் பாலீஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும். எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நெயில் பாலீஷ் உபயோகிக்காமல், இருப்பது நல்லது.
Nail Care
* ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.

* கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

* ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.

* மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.

* நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

* நெயில் பாலீஷ் போடும் போது, பிரஷ் ஷினால், நகத்தின் அடிப்பகுதியில் நுனி வரை ஒரே தடவையாக போட வேண்டும். அப்போது தான் அவை பளபளப்பாக எவ்வித திட்டுக்களும் இன்றி அழகாக காட்சியளிக்கும்.

Related posts

நயன் அனிகாவை ஓரம் கட்டும் சூர்யாவின் ரீல் மகள் யுவினா பார்த்தவி!

nathan

அடேங்கப்பா! அடையாளம் தெரியாத அளவு குண்டாக மாறிய கவீன்! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

nathan

அழகு குறிப்புகள்:மாசு மருவற்ற முகம் வேண்டுமா?

nathan

உதட்டு வறட்சியை போக்க வேண்டுமா?

nathan

முகத்தில் பேசியல் செய்வது எப்படி

nathan

இந்த இரண்டு பொருட்களைக் கொண்டே உங்கள் முகத்தை இயற்கையாக ஜொலிக்க வைக்க முடியும். ….

sangika

வெளிவந்த தகவல் ! நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து வெளியேறினாரா நடிகர் செந்தில்

nathan

உங்களுக்கு தெரியுமா சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இதை முகத்துல தடவினா போதும்…!

nathan

ரொம்ப நாளாக மறையாமல் உள்ள தழும்புகளுக்காக!…

sangika