25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
image 1 15
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு முழங்கால் வலி, இடுப்பு வலி ஆயுசுக்கும் வராம இருக்கணுமா?

சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மூட்டுவலி ஏற்பட்டால் நடக்க முடியாது. உட்கார்ந்து எழ முடியாது. இரவில் தூங்கி எழுந்தால் பாதத்தை தரையிலேயே வைக்க முடியாது போன்ற அவஸ்தைகளால் மிகவும் வேதனை ஏற்படும்.

மேலும் அதிக எடை உள்ள பொருட் களை தூக்கினால் தோள்பட்டை, முழங்கை, முழங்கால், கழுத்து, இடுப்பு போன்றவற்றில் வலி அல்லது சுளுக்கு ஏற்பட்டு பாடாய் படுத்திவிடும். ஆகவே இத்தகைய இடங்களில் வலிகள் ஏற்படாமல் இருக்க, ஒரு சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த முழங்கால் மூட்டு என்பது தொடை எலும்பின் கீழ்ப்பகுதியும், முழங்கால் எலும்பின் மேல்பகுதியும் இணையும் இடமே முழங்கால் மூட்டு ஆகும். தொடை முழங்காலுக்கான முக்கிய ‘ஜங்ஷன் இது. நமது உடலில் அமைந்திருக்கும் பெரிய மூட்டும் இதுதான். வயதாக வயதாக தொந்தரவு தரும் மூட்டும் இதுதான்.

தொப்பிபோல் தட்டுப்படுகிறதே அதுதான், knee cap (Patella) எனப்படும் மூட்டுச்சில்லு. முழங்கால் மூட்டின் முக்கிய பகுதிகள் இந்த மூட்டுச்சில்லுக்கு பின்னால்தான் இருக்கின்றன.

தொடை எலும்பு கீழே செல்லச்செல்ல அகன்று தடித்து, கொண்டைபோல் இருக்கும். அதன் கீழ்ப்பகுதி முழுவதையும் குருத்தெலும்பு போர்த்தியுள்ளது. இந்த கொண்டைப் பகுதி இரண்டாகப் பிரிகிறது. அவற்றின் நடுவே உள்ள சற்று பள்ளமான பகுதியில்தான் மூட்டுச்சில்லு அமைந்து மேலும் கீழுமாய் அசைகிறது.

முழங்கால் மூட்டின் உள்ளமைப்பு வித்தியாசமானது. பிணைப்பு நாண்களும் (cruciatel Ligament) மெனிஸ்கஸ் எனப்படும் குஷன்களும் இந்த மூட்டில் உள்ளன. மூட்டை சுற்றி மிக மிருதுவான எலும்புகள் அதிகம் இருக்கின்றன. மேலும் இந்த மூட்டில் சைனோவியம் என்கிற மூட்டுச் சுரப்பிப் படலம் அதிகம் உள்ளது. அதனால் அதை சார்ந்த நோய்களும் மூட்டில் வர வாய்ப்புண்டு. சிறுநீரகத்தில் ஏதாவது தொற்றுநோய் ஏற்பட்டால் கூட இந்த மூட்டில் வீக்கம் ஏற்படலாம். அவ்வளவு ஏன், நம் ஈறுகளிலோ தொண்டையிலோ பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதை எதிர்கொள்ள உடல், ‘காக்கும் எதிர்வினைப்பொருட்களை‘ (Antibodies) தோற்றுவிக்கும். அவை இந்த மூட்டில் வந்து தங்கி வலியை (reactive arthritis) ஏற்படுத்தும்.

நமது எலும்புக்கூட்டில் எலும்புகள் கூடி இருக்கிறதே அந்த இடம்தான் மூட்டுகள். அதில் அசையும் மூட்டு, அசையாமூட்டு என்று இருவகை உண்டு. தலையில் எலும்புகள் கூடி இருக்கும் இடம் அசையா மூட்டு. நாம் பேசும்போது கீழ்தாடை மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு. ஓடுகிறோம். விளையாடுகிறோம். வேலைகளைப் பார்க்கிறோம். இவைகளில் நமது அசையும் மூட்டுகள் அதிக பங்காற்றுகிறது. இந்த மூட்டுகளில் தோள்மூட்டு, முழங்கைமூட்டு, மணிக்கட்டு மூட்டு, இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு போன்றவை முக்கியமானவை. மூட்டுகளில் இத்தனை இருந்தாலும், நாம் முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியைத்தான் பெரும்பாலும் மூட்டுவலி என்று சொல்கிறோம்.image 1 15

முழங்கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டால் மூட்டு வசதியாக மடிந்து கொடுக்காது. கடும் வலி ஏற்படும். வீக்கம் தோன்றும். இடுப்பில் உள்ள மூட்டு சரியாக இயங்கவில்லை என்றால் முதுகெலும்பின் மூலம் ஓரளவு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். மூட்டுவலிக்கு முக்கியமான காரணம் அதில் ஏற்படும் தேய்மானம். இந்த மூட்டுகளில் வழுவழுப்பான திசுக்களான குருத்தெலும்பின் வழவழப்புத்தன்மை குறைந்துவிட்டால் மூட்டை அசைக்கும்போது சோர்வும் வலியும் ஏற்படும். அதைத் தான் தேய்மானம் என்கிறோம். பெண்களுக்குத்தான் இத்தகைய தேய்மானம் அதிகம் ஏற்படுகிறது.

முன்பெல்லாம் 65 வயதுக்கு மேல் எட்டிப்பார்த்த மூட்டு தேய்மானம், இப்போது 35 வயதை கடக்கும்போதே தோன்றி தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. இதுபோன்ற வலியின்றி, நாம் நலமுடன் வாழவும் வழி உள்ளது. சரியான வாழ்க்கை முறை, உணவு முறை,உடற்பயிற்சி போன்றவைகளில் அக்கறை கொள்ள வேண்டும். அதையும் மீறி வலி வந்துவிட்டால் முறையான சிகிச்சை பெற்று மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

தடுக்கும் முறைகள்…
நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு (பச்சையாக) ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.
இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை சாப்பிட வேண்டும். (இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும்). இதை தொடர்ந்து 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். பிறகு 3 வாரங்கள் கழித்து மீண்டும் 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். இதை சாப்பிடும்போது காரமான உணவு, புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.6. ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.உணவுப் பழக்கம்
வாழைப்பழம் அதிகமாக சாப்பிட வேண்டும்.2. காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.3. கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும் தவிர்க்க வேண்டியவை காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.

Related posts

காயத்தால் ஏற்படும் தழும்புகள் மறைய இயற்கை மருத்துவம் -தெரிந்துகொள்வோமா?

nathan

கர்ப்ப காலத்தில் உங்கள் பற்களை எவ்வாறு பாதுகாப்பது?

nathan

உங்கள் மனதுக்கு பிடித்த பெண் உங்களை காதல் செய்யவில்லையா கவலையை விடுங்க இத படியுங்க..!

nathan

பெண்களுக்கு ஏற்படும் ‘வாட்ஸ் ஆப்’ சிக்கல் – தவிர்ப்பது எப்படி?

nathan

இளம்பெண்கள் – இளைஞர்களை தாக்கும் கழுத்து வலி

nathan

30 வயதுக்கு மேல் குழந்தைப்பேற்றை தள்ளிப்போடுவது ஆபத்து

nathan

உங்களுக்கு தலையில் குட்டி குட்டி கொப்புளங்கள் வருதா? அப்ப இத படிங்க!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… மாரடைப்பு வரப்போகிறது என்பதை வெளிப்படுத்தும் விசித்திரமான அறிகுறிகள்!!!

nathan

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா!

nathan