யோகர்ட் என்னும் சுவையூட்டப்பட்ட தயிரை அனைவரும் விரும்புகிறோம். சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கிய நோக்கிலும் யோகர்ட் சிறந்ததாகும்.
உங்கள் மேனிக்கு அழகூட்டும் பண்புகளும் யோகர்ட்டுக்கு உண்டு.
புரோட்டீன் என்னும் புரதம், கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து, மெக்னீசியம், வைட்டமின் பி12, உடலுக்கு இன்றியமையாத கொழுப்பு அமிலங்கள் ஆகியவை யோகர்ட்டில் அடங்கியுள்ளன. ஆகவே, உங்கள் சருமத்திற்கும், கூந்தலுக்கும் யோகர்ட் மெருகூட்டும்.
யோகர்ட்
யோகர்ட்டில் லாக்டிக் அமிலம் உள்ளது. சருமத்திலுள்ள இறந்த செல்களை அகற்றி பளபளப்பான தோற்றத்தைக் கொடுக்கும் திறன் யோகர்ட்டுக்கு உண்டு. இதில் இருக்கும் புரோபியாடிக்ஸ் என்னும் நுண்ணுயிர்கள் சருமத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. மயிர்க்கூறுகளை வலுப்படுத்தி கூந்தல் நன்றாக வளர யோகர்ட் உதவுகிறது.
சரும ஆரோக்கியமும் யோகர்ட்டும்
சருமத்தை மிருதுவாக்குகிறது; மீட்சித் தன்மையை அளிக்கிறது; சருமத்தில் முதுமையின் முகவரியை குறைக்கிறது; முகப்பருக்களை ஆற்றுகிறது; பருக்களால் உண்டான தழும்புகளை மறைக்கிறது; கூந்தலுக்கு பளபளப்பை கொடுக்கிறது; கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது; பொடுகை போக்கி, கூந்தல் உதிர்வை தடுக்கிறது
காயங்கள்
தேனுக்கு நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படும் ஆன்ட்டிபாக்டீரியல் பண்பு உள்ளது. ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகளின் இயல்பும் தேனுக்கு உண்டு. ஆகவே, சருமத்திற்கு அழற்சி மற்றும் சரும புண்களை ஆற்றும் திறன் தேனுக்கு இருக்கிறது.
தேவையானவை
யோகர்ட் – 1 மேசைக்கரண்டி
தேன் – 1 மேசைக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில் யோகர்ட்டையும் தேனையும் எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை கழுவி, ஒத்தியெடுத்து (பேட் டிரை) உலர வைக்கவும். யோகர்ட், தேன் கலவையை முகத்தில் பூசவும். பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் காத்திருந்து, வெதுவெதுப்பான நீரால் கழுவவும். பின்னர் முகத்தை ஒத்தியெடுத்து உலரச் செய்யவும்.
தழும்புகள்
முகப்பருக்களால் தழும்புகள் ஏற்படும். எலுமிச்சைக்கு சருமத்தை சுத்திகரிக்கும் பண்பு உண்டு. எலுமிச்சை சாற்றினை யோகர்ட்டுன் கலந்து பயன்படுத்தினால் சருமத்திலுள்ள துளைகளை சுத்தப்படுத்தி, தழும்புகளின் விகாரத்தை குறைக்கிறது.
தேவையானவை
யோகர்ட் – 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு – ½ தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை
யோகர்ட், எலுமிச்சை சாறு இரண்டையும் ஒரே கிண்ணத்தில் எடுத்து, நன்கு கலந்து கொள்ளவும். முகத்தை கழுவி, ஒத்தியெடுத்து (பேட் டிரை) உலர வைக்கவும். முகத்தில் உள்ள தழும்புகள் மேல் இதை பூசவும். பத்து நிமிடங்கள் பொறுத்திருந்து, குளிர்ந்த நீரால் கழுவவும். மீண்டும் முகத்தை ஒத்தி உலர வைக்கவும்.
எண்ணெய் பசை மிக்க சருமம்
முட்டையின் வெள்ளை கருவில் புரோட்டீன் என்னும் புரதம் அதிக அளவில் உள்ளது. அது சருமத்திலுள்ள துளைகளை சுருங்கச் செய்து, எண்ணெய் சுரப்பினை குறைக்கிறது.
தேவையானவை:
யோகர்ட் – 1 மேசைக்கரண்டி
முட்டை – 1 (வெள்ளை கரு மட்டும்)
பயன்படுத்தும் முறை
ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து நுரை வருமளவுக்கு நன்றாக அடித்து கலக்கவும். அதனுடன் யோகர்ட்டை சேர்த்து இரண்டையும் கலக்கவும். இக்கலவையை முகத்தில் பூசி, பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் காத்திருக்கவும். பிறகு நன்றாக கழுவவும்.
வாழைப்பழம், எலுமிச்சை சாறு, தேன், யோகர்ட், பிரஷ்
பயன்படுத்தும் முறை:
வாழைப்பழத்தை கிண்ணம் ஒன்றில் வைத்து கூழாக நசுக்கவும். அதனுடன் யோகர்ட்டை சேர்த்து நன்றாக கலக்கவும். எலுமிச்சை சாறு மற்றும் தேனையும் சேர்க்கவும். பிரஷ் ஒன்றை பயன்படுத்தி இதை எடுத்து தலை மற்றும் கூந்தலில் படும்படியாக தேய்க்கவும். 25 முதல் 30 நிமிடங்கள் விட்டு, ஷாம்பூ பயன்படுத்தி கழுவவும்.
முட்டை, யோகர்ட்
இவை இரண்டு பொருள்கள் மட்டுமே போதும் உங்களுடைய தலையில் உள்ள பொடுகை முழுமையாக நீக்க.
பயன்படுத்தும் முறை
முட்டையை உடைத்து கிண்ணத்தில் ஊற்றி, அதனுடன் யோகர்ட்டை கலந்து நன்றாக அடிக்கவும். இதை தலையில் தேய்த்து அரைமணி நேரம் விடவும். பின்னர் மிருதுவான ஷாம்பூ பயன்படுத்தி கழுவவும்.