26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
ujyujyi
அழகு குறிப்புகள்

முகம் அழகா இருக்கா..? டல்லா இருக்கா?

ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், “முகத்துல ஏன் கருப்புத் தட்டியிருக்கு? கண்ணுக்குக் கீழே கரு வளையமா? சுருக்கமா இருக்கே. என்ன பண்ணலாம்..?” – இப்படி ஏகப்பட்ட கேள்விகள் கவலை ரேகையை அதிகரிக்கும்.

“இதெற்கு எதற்கு கவலை… கைவசம் இருக்கு இயற்கை முறை ஃபேஷியல்”. பழங்களில் ஆன்டி ஆக்ஸைட், நார்ச்சத்து, நீர்ச்சத்து, மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை முகத்துக்குச் சிறந்த பலனையும், பாதுகாப்பையும் தரும். தொடர்ந்து பழங்களைக் கொண்டு ஃபேஷியல் செய்து, திடீரென நிறுத்திவிட்டாலும் எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. அதனால் பயப்படாம செய்யலாம்.

ujyujyiஆப்பிள் பாதி, சிறிது அவகடோ பழம் இவற்றை நன்றாக மசித்து மூன்று டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அரை மணி நேரம் வைத்திருந்து, அதன் பிறகு கழுவ வேண்டும். இது முகத்தில் எண்ணெய் வடிவதைக் கட்டுப்படுத்தும். ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதால், முகம் எப்போதும் பிரகாசமாக மின்னும்.

வாழைப்பழத்துடன், 2 டீஸ்பூன் தேன், கெட்டியான தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். முகத்தில் தடவி 20 நிமிடம் வரை வைத்திருக்க வேண்டும். வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸைடு முகத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கும்.

திருமணம் மற்றும் விசேஷங்களுக்குச் செல்லும்போது, பப்பாளி ஃபேஷியல் செய்துகொள்வது பெஸ்ட். பப்பாளிப்பழக் கூழ், வாழைப்பழக் கூழ், ஒரு கேரட், மூன்று ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்து பிறகு அலசலாம். காலை முதல் மாலை வரை பளிச்சென முகம் பிரகாசமாக இருக்கும்.

Related posts

நடிகர் விஜய் வசித்து வரும் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. நீங்களே பாருங்க.!

nathan

கருவளையம் போக்கும் எளிய மசாஜ்

nathan

கருவளையத்தை நிரந்தரமாக நீக்க எளிய வழி- how to clear dark cycle?

nathan

விருந்திற்கு அழைத்த அண்ணன்!உயிரைவிட்ட சோகம்

nathan

பார்ட்டிக்கான ஷாம்பெயின் ஃபேஷியல்

nathan

தமிழ் வம்சாவளியினரான இளம்பெண் ஒருவருக்கு டைம் பத்திரிகை அளித்துள்ள கௌரவம்

nathan

அழகு குறிப்புகள்:பயத்தம் பருப்பில் பளபளப்பு!

nathan

முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் வாழைப்பழத் தோலை பயன்படுத்தினால்……?

nathan

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான கோடைக்கால ஃபேஸ் பேக்குகள்

nathan