25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
00.053.800.668.160.90
மருத்துவ குறிப்பு

சூப்பரா பலன் தரும்!! கீல்வாதத்தைத் தடுக்கும் சில எளிய இயற்கை வழிகள் இதோ!

கீல்வாதம் என்பது குருதியோட்டத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கின்ற ஒரு நோயாகும்.

கீல்வாதம் ஏற்பட்ட பாதத்தில் கடுமையான, திடீரென்று ஏற்படும், எதிர்பாராத, எரிச்சலுடைய வலியையும் அதேபோன்று வீக்கம், சிவந்து போதல், வெப்ப உணர்வு, மற்றும் விறைப்பு ஆகியவையும் தோன்றும்.

பொதுவாக இந்த பிரச்சனையால் பெண்களை விட 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

கீல்வாதமானது மூட்டுக்களின் மூட்டு ஒட்டின் நீளுந்தன்மையுள்ள சவ்வில், தசைநாண்களில் மற்றும் சுற்றியுள்ள திசுக்களில் மோனோசோடியம் யூரிக் அமில உப்பின் வடிவில் யூரிக் அமிலப் படிகங்களின் வீழ்படிவின் போது உண்டாகின்றது.

இதிலிருந்து எளிதில் விடுபட சில எளிய இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

தினமும் 3-4 பற்கள் பூண்டை பச்சையாக உட்கொண்டு வருவதன் மூலம், கீல்வாதத்தின் தாக்கத்தில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும்.

கீல்வாதம் இருப்பவர்கள் தினமும் 12 செர்ரிப் பழங்களை உட்கொண்டு வருதன் மூலம், கீல்வாத வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஒரு டம்ளர் நீரில், 3-4 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும்1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, குடிக்க வேண்டும். இப்படி நாள் முழுவதும் இந்த கலவையை செய்து குடிப்பதன் மூலம் கீல்வாத பிரச்சனையில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.

பீன்ஸை அதிகமாக உட்கொண்டு வருவதன் மூலம், கீல்வாத வலி மற்றும் வீக்கத்தில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கடுகைப் பொடி செய்து, அத்துடன் ட்ரிடிகம் பொடி சேர்த்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன் அக்கலவையை கீல்வாத வலி உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால், வலி நீங்கும்.

எப்சம் உப்பை சுடுநீரில் போட்டு கலந்து, வெதுவெதுப்பான நிலையில் அந்நீரில் பாதிக்கப்பட்ட பகுதியை சிறிது நேரம் ஊற வைக்க, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெள்ளரிக்காயை தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால், கீழ்வாதத்தினால் ஏற்படும் வலியைக் குறைக்கலாம்.00.053.800.668.160.90

Related posts

புற்றுநோய் வராமல் தவிர்க்க ஆண்கள் இதை கண்டிப்பா சாப்டணும் தெரியுமா!

nathan

தெளிவான கண்பார்வை வேண்டுமா?

nathan

உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்!

nathan

பித்தப்பை கல் ! அறிகுறிகளை அறிவோம்!

nathan

உங்களுக்கு கல்லீரல் பிரச்சனைகள் இருந்தால் தென்படும் அறிகுறிகள்!!!

nathan

பொறாமை என்ற தீய குணத்தை அழிப்போம்

nathan

உங்களுக்கு தெரியுமா உடலில் கொலஸ்ட்ரால் குறைய நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான்!!

nathan

குழந்தைகள் சேமிக்க பணம் கொடுக்கலாம்

nathan

தொண்டையை பாதுகாக்க 10 வழிகள்

nathan