தடுப்பூசி குழந்தை கருவில் இருக்கும் போது துவங்கி, பிறந்து ஒரு வயது வரை பல நோய்களுக்கு தொர்ந்து போடப்படும் மருந்து.
இன்று நம்மில் பத்தில் ஒன்பது பேராவது தடுப்பூசி போடப்பட்டிருக்கும்.
சிலர் தடுப்பூசி போடவில்லை என்றால் அது பல விளைவுகளை உண்டாக்கும். அதாவது மீண்டும் தட்டம்மை உள்ளிட்ட நோய்கள் உலகெங்கும் பரவலாம்.
தற்போது தடுப்பூசி ஏன் போட வேண்டும்? என இங்கு பார்க்கலாம்.
நம்மை பாதுகாக்க ஏதுவாகத்தான் நம் உடல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மோசமான நோய்கள் வரும்போது நமது நோய் எதிர்ப்பு அமைப்பு நோய்யெதிர்ப்பு பொருட்களை உண்டாக்கும். உடலில் நோயெதிர்ப்பு பொருட்கள் செயல்பட கொஞ்சம் கால அவகாசம் எடுக்கும்.
ஒரு முறை அதன் பணி முடிந்ததும் நோய் மீண்டும் வராமல் இருக்க மீண்டும் பணியைச் செய்ய அது தயாராகும்.
தடுப்பூசி போடும்போது இறந்த அல்லது பலவீனமான நோய் கிருமிகள் உடலுக்குள் செலுத்தப்படும். அவை நம் உடல்நிலையை மோசமாக்காது.
இதன் மூலமாக எப்படி நோய்க்கு எதிராக செயல்பட வேண்டுமென்பது நமது உடலுக்கு தெரியும்.
ஒரு இனக்குழுவுக்கு இருக்கக் கூடிய கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறித்து காண்போம்.
நோய் சுலபமாக தாக்கக்கூடிய ஆனால் தடுப்பூசி போட வாய்ப்பில்லாத குழு பாதுகாப்பானது தான்.
தடுப்பூசி போட்டவர்களுக்கு எப்படி நோய்க்ள தாக்காதோ இவர்களையும் தாக்காது.
ஏனெனில் இதற்கு காரணம் நோயற்ற ஒரு குழு அரணாக இருப்பது.
ஒரு குழுவே நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருந்தால் அவர்களுக்கு நோய் பரவாது.
ஒரு குழுவின் நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்ய வேண்டுமென்றால் அதில் கணிசமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் போனால், அந்த குழு பாதுகாக்குமென நம்பமுடியாது.
குழந்தைகள் முதியவர்கள் மற்றும் பலவீனமாக உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
நமது குழுவுக்கு அதிகளவில் தடுப்பூசி போடப்படும்போது சில நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவோம்.