29.8 C
Chennai
Monday, Jun 24, 2024
thyroid treatment at home
மருத்துவ குறிப்பு

மருத்துவர் கூறும் தகவல்கள்! தைரொய்ட் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா……

இன்று பலருக்கும் இருக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த தைராய்டு பிரச்சனையாகும். உடல் எப்போதும் அசதியாக இருப்பது, மாதவிலக்கு சரியாக ஏற்படாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் தைராய்டு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.இன்றைய பெண்களிடம் அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்சினைகளில், தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரக்கும் பிரச்சினை முக்கியமானது. பிறக்கும் குழந்தை முதல் இளம் வயதினர், நடுத்தர வயதினர் என்று பெண்களில் பலரையும் பாதிக்கும் பிரச்சினையாக இன்றைக்கு இது உருவெடுத்துள்ளது. இதை ஆரம்ப நிலையிலேயே கவனித்துச் சிகிச்சை பெற்றுக்கொண்டால், பின்னால் ஏற்படுகிற அறிவாற்றல் குறைவு, மலட்டுத்தன்மை போன்ற பல சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.

தைராக்சின் பணிகள்:

குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி, முழுமையான உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பின் உறுதி, தசையின் உறுதி, புத்திக்கூர்மை எனப் பலவற்றுக்குத் தைராக்சின் ஹார்மோன்தான் ஆதாரம். உடல் செல்கள் பிராணவாயுவைப் பயன்படுத்தி வேதிவினைகள் புரிவதற்குத் தைராக்சின் தேவை.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச் சத்துகளின் வளர்சிதைமாற்றப் பணிகளை ஊக்குவிப்பதும், புரதச் சத்தைப் பயன்படுத்தி உடல் வளர்ச்சியைத் தூண்டுவதும், சிறுகுடலில் உள்ள உணவுக் கூழிலிருந்து குளுக்கோஸைப் பிரித்து ரத்தத்தில் கலப்பதும், ரத்தக் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதும் தைராக்சின் ஹார்மோன் செய்கிற அற்புதப் பணிகள்.இவ்வளவு முக்கியமா?

அதுமட்டுமின்றி, இதயம், குடல், நரம்பு, தசை, பாலின உறுப்புகள் போன்ற முக்கியமான உறுப்புகளின் செயல்பாடுகளையும் தைராக்சின் ஹார்மோன்தான் ஊக்குவிக்கிறது. மனித உடலில் வெப்பத்தை உண்டாக்கி, அதைச் சமநிலையில் வைத்திருப்பது, உடல் செல்களில் பல என்சைம்களைத் தயாரித்துக் கொடுப்பது, பருவமடைவதற்கும் கருத்தரித்தலுக்கும் துணைபுரிவது ஆகியவற்றில் தைராக்சின் முக்கியப் பங்கு வகிக்கிறது.அறிகுறிகள்:

தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரப்பதைக் ‘குறை தைராய்டு’ (Hypothyroidism) என்கிறோம். இதன் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருக்கும். செயல்கள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாது.

முகம் வீங்கும். முடி கொட்டும். இளநரை தோன்றும். தோல் வறட்சி ஆகும். பசி குறையும். ஆனால், உடல் எடை அதிகரிக்கும். அடிக்கடி மலச்சிக்கல் உண்டாகும்.

ஞாபக மறதி, அதிகத் தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கை, கால்களில் மதமதப்பு, கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்சினை, மூட்டுவலி இப்படிப் பல பிரச்சினைகள் அடுத்தடுத்துத் தலைதூக்கும். ரத்தசோகை, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது போன்ற பாதிப்புகள் குறை தைராய்டு உள்ளவர்களிடம் காணப்படும் முக்கியமான அறிகுறிகள்.
எப்படி உருவாகிறது?

நாம் உண்ணும் உணவில் உடலின் தேவைக்கு ஏற்ப அயோடின் சத்து இருப்பதில்லை. தைராய்டு சுரப்பிக்குப் போதுமான அளவு அயோடின் கிடைக்காவிட்டால், தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. இதனால் தைராய்டு ஊக்கி ஹார்மோன் (TSH) அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியை மேன்மேலும் தூண்டும். ஆனாலும், அதனால் போதுமான அளவுக்குத் தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. பதிலாக, அது வீக்கமடைந்து கழுத்தின் முன் பக்கத்தில் ஒரு கழலைப் போன்று தோன்றும். அதற்கு ‘முன்கழுத்துக் கழலை’ (Goitre ) என்று பெயர்.

அயோடின் உப்பு:

குறை தைராய்டு பாதிப்புக்குத் தைராக்சின் மருந்தைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இந்த மருந்தின் அளவு, அதற்கான கால அளவு ஆகியவற்றை மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த மருந்தை நிறுத்தக்கூடாது. அயோடின் குறைவால் வரும் முன்கழுத்துக் கழலை நோய்க்குப் போதுமான அளவு அயோடின் கலந்த சமையல் உப்பைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் பிரச்சினையைக் கட்டுப்படுத்த முடியும்.கடல் உணவுகள்:

நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். கடல் சார்ந்த உணவு வகைகளில் அயோடின் சத்து அதிகம் என்பதால் மீன், நண்டு போன்ற உணவு வகைகள் நல்லது. பால், முட்டை, இறைச்சி சாப்பிட வேண்டியது முக்கியம்.

காய்கறிகள்

பசலைக்கீரை முள்ளங்கி காலிஃபிளவர் முட்டைக்கோஸ் டர்னிப் ஆகியவற்றைக் குறைவாகச் சாப்பிட வேண்டும். சமையலுக்குச் சாதாரண உப்பைப் பயன்படுத்துவதைவிட அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த வேண்டும்.

கோதுமை மற்றும் பார்லி:

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் குளுட்டன் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளுட்டனானது, கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் இருக்கும். எனவே இந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுக்க வேண்டாம்.பாஸ்ட் ஃபுட்:

பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால் இவற்றை தைராய்டு உள்ளவர்கள் சிறிது உட்கொண்டாலும் அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்திக்கு இடையூறு விளைவிக்கும். எனவே பாஸ்ட் ஃபுட் உணவுகள் மட்டுமின்றி எண்ணெயில் பொரித்த உணவுகளையும் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

மயோனைஸ் மற்றும் வெண்ணெய்:

இந்த உணவுகளில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அவை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, அதனால் தைராக்ஸின் ஹார்மோனின் அளவு மேலும் குறையும்.

சோயா மற்றும் திணை:இவற்றில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென் என்னும் தாவர ஹார்மோன் அதிகம் உள்ளது. ஆய்வு ஒன்றில், ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாக இருந்தால் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு தைராக்ஸின் ஹார்மோனின் அளவு குறையும் என்று தெரிய வந்துள்ளது. எனவே ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள், சோயா மற்றும் திணை உண்பதைத் தவிர்க்கவும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு:

சோளம் ஆளி விதை சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றில் சல்பர் அதிகம் உள்ளது. மேலும் இந்த உணவுப் பொருட்கள் தைராய்டு சுரப்பியால் அயோடினை உறிஞ்ச முடியாமல் செய்யும். ஆகவே இவற்றைத் தவிர்ப்பதும் நல்லது.

வெங்காயம் திராட்சை:
மேற்கூறிய உணவுப் பொருட்களும் தைராய்டு சுரப்பியின் இயக்கத்தில் இடையூறு ஏற்படுத்துவதோடு, தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்தியையும் குறைக்கும். ஆகவே ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் இந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

அதிகப்படியான நார்ச்சத்து:
நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் உணவுப் பொருட்களான தானியங்கள், பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் எடுக்கக்கூடாது. அதற்காக முற்றிலும் தவிர்க்கவும் கூடாது. அளவாக உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், செரிமானம் சீராக நடைபெறாமல் போய்விடும்.thyroid treatment at home

Related posts

மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…இளம் வயதிலே மூட்டு வலி வருவதற்கான காரணம் என்ன?

nathan

உடல் எடையை குறைக்க உதவும் வெற்றிலை

nathan

வயதாவதை தடுக்கும் 9 சிறந்த வழிகள்!படிங்க…

nathan

அந்த 3 நாட்களை மாத்திரையால் தள்ளிப் போடலாமா?

nathan

ஆண்களே என்ன செஞ்சாலும் உங்களுக்கு தாடி வளரமாட்டீங்குதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பல் எந்த விதத்தில் நாம் பராமரிக்காததால் நம்முடைய உள்ளுறுப்புகளை பாதிக்கும்….

sangika

ஆண் அல்லது பெண் குழந்தையை விரும்பும் பெண்களுக்கான உணவுகள்

nathan