25.9 C
Chennai
Friday, Mar 13, 2026
71 1459
முகப் பராமரிப்பு

உங்களுக்குதான் இந்த விஷயம் கோடைக் காலத்தில் சருமத்தில் ஏற்படும் கருமையை போக்கும் டிப்ஸ்..!!

கோடைக் காலத்தில் சருமத்தின் நிறம் கருமையாகி, பொலிவிழந்து காணப்படும். கூடவே பிம்பிள் வர ஆரம்பிக்கும். கோடையில் முருவத்தை முறையாக பராமரித்து வந்தால், சருமத்தின் அழகு பாதுகாக்கப்படும்.
4 டேபிள் ஸ்பூன் பால், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, சருமத்தில் வெயில்படும் இடத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். இந்த முறையானது எண்ணெய் பசை சருமத்திற்கு சிறந்தது.

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 3 புதினா இலைகள், சிறிது தயிர் சேர்த்து கலந்து, அதனை நன்கு பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி வட்ட வடிவில் 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அனைத்து அழுக்குகளும் வெளியேறி, சருமம் கருமை அடைவதை தடுக்கும்.
முகத்தின் கருமையை போக்க அரைத்த அன்னாசி பழம், திராட்சை விதை ஆயில், அரைத்த பப்பாளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

முகத்தில் ஏற்படும் பிம்பிளை போக்க 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் சந்தன தூள், புதினா, துளசி இலைகள் சேர்த்து கலந்து அதனை சருமத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள வெப்பம் நீக்கப்பட்டு, சருமம் பொலிவோடு இருக்கும்.71 1459

Related posts

உங்க நெற்றி நீளமா இருக்கா?அப்போ ‘லைட்’டா குறைக்கலாமா??

nathan

பருவால் உண்டான வடு மறைய ஃபேஸ் பேக்

nathan

அம்மா தன் பெண்ணிற்கு சொல்லும் அழகின் ரகசியங்கள்!

nathan

முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள்!

nathan

வெயிலால் முகத்தில் ஏற்பட்ட கருமையை போக்க வீட்டு குறிப்புகள்!

nathan

எளிய இயற்கை அழகு குறிப்புகள்! அடர்த்தியான புருவங்கள் வேண்டுமா?

nathan

உங்களுக்கு அடர்த்தியான புருவம் பெற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

பளிச்சென மின்ன வேண்டுமா?

nathan

முகச்சுருக்கம் ஏற்படாமல் சருமம் பாதுகாக்கப்படும். கேரட் பேசியல்…!

nathan