24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
bfad572085f15
அறுசுவைஅசைவ வகைகள்

சிக்கன் தோசை செய்வது எப்படி?

சிக்கன் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி – 200 கிராம்
மைதா மாவு – 250 கிராம்
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
இஞ்சி, பூண்டி விழுது – 2 டீ ஸ்பூன்
காரட் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
bfad572085f15
செய்முறை:

* கோழிக்கறியை எலும்பில்லாமல் தேர்வு செய்து துவையல் பக்குவத்தில் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.

* அதனுடன் மைதா, அரிசி மாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், காரட் துருவல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.

* பின்பு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு மாவை ஊற்ற வேண்டும்.

* மேல் பக்கத்திலும் சிறிது எண்ணெய் விட்டு, நன்றாக வெந்தபின்பு மறுபக்கம் திருப்பி போடவும்.

* இரண்டு பக்கமும் தோசை நன்றாக வெந்ததும் தோசைக் கல்லில் இருந்து எடுத்து விடவும்.

Related posts

தந்தூரி சிக்கன்

nathan

பன்னீர் மசாலா

nathan

தக்காளி மீன் வறுவல்

nathan

கொக்கோ தேங்காய் பர்ஃபி

nathan

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

nathan

ஐயங்கார் புளியோதரை

nathan

இறால் சாதம்

nathan

கோவா க்ரீன் சிக்கன் குழம்பு

nathan

ஸ்பெஷல்-ஈசி மட்டன் பிரியாணி,tamil samayal asaivam

nathan