செயற்கை கிறீம்களை தவிர்த்து நம்மை இளமையுடனும், பொலிவோடும் வைத்துக் கொள்ள சில ஜூஸ்களும் உள்ளன.
இது நமது முகத்தினை இயற்கையாகவே வெள்ளையாக்க உதவி செய்கின்றது.
அந்தவகையில் இந்த ஜூஸை தினமும் குடித்து உங்களை அழகாக வைத்துக் கொள்ள முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
சருமம் சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கும். அதுமட்டுமின்றி, கேரட் ஜூஸ் சருமத்தை இளமையுடனும் வைத்துக் கொள்ளும்.
மாதுளை ஜூஸ் புதிய செல்களை உருவாக்கவும், பாதிக்கப்பட்ட செல்களை புதுப்பிக்கவும் உதவும். எனவே இந்த ஜூஸை குடிப்பதன் மூலம் சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்து, முதுமை தடுக்கப்படும்.
திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது மற்றும் திராட்சை ஜூஸை தினமும் குடிப்பதன் மூலம் சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் காணப்படும்.
செர்ரிப்பழத்தில் ஜூஸ் போட்டு குடிப்பதால், சருமத்தில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறுவதோடு, சருமத்தின் அழகும் அதிகரிக்கும். உடலினுள் உள்ள தொற்றுக்களை நீக்கி, பொலிவிழந்து காணப்படும் சருமத்தை பொலிவோடு காட்டும்.
தக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஏராளமாக நிறைந்துள்ளது. இது அனைத்து ப்ரீ ராடிக்கல்களையும் வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு மாற்றும். மற்றும் திறந்த சரும துளைகளை சுருங்கச் செய்து, முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.
வெள்ளரிக்காய் ஜூஸ் உடலில் உள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றும். இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடல் சுத்தமாகி, சருமத்தின் அழகு தானாக அதிகரிக்கும்.
ஆரஞ்சு ஜூஸில் சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சரும செல்களை சரிசெய்யும் வைட்டமின் சி உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜெனை உற்பத்தி செய்யும் மற்றும் சரும சுருக்கங்கள் மற்றும் இதர முதுமைக்கான அறிகுறிகள் தடுக்கப்பட்டு, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.