25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
87441362e15b132ad719f6154c824b7989a00109
மருத்துவ குறிப்பு

உங்க ஒற்றைத் தலைவலிக்கு என்னதான் தீர்வு? படியுங்க…

உங்க ஒற்றைத் தலைவலிக்கு என்னதான் தீர்வு?வலி என்றாலே அவதிதான். உடலில் எந்த பாகத்தில் வலி உண்டானாலும் அது உபாதைதான். தனக்கு வந்தாதான் தெரியும் தலைவலியும் வயிறுவலியும் என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் தலைவலியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களைக் கேட்டால் எதிரிக்கு கூட தலைவலி வரக்கூடாது என்று புலம்புவார்கள். அத்தகைய கொடூரமிக்கது தலைவலியிலும் வலிமிக்க ஒற்றைத் தலைவலி.

மண்டையைப் பிளக்கும் வலி. இலேசாக மங்கும் பார்வை, வாந்திக்கான அறிகுறி, கண்களைக் கூச செய்து வலியை அதிகப்படுத்தும் விளக்கு வெளிச்சம் இவை எல்லாமே தீவிர ஒற்றைத்தலைவலிக்கான அறிகுறிகள். எந்த மாத்திரைகளுக்கும் கட்டுப்படாத வலி ஒன்று உண்டு என்றால் அது ஒற்றைத் தலைவலி என்று நிச்சயமாக சொல்லலாம்.

குறிப்பிட்ட நேரங்களில் வரும் என்று சொல்ல முடியாத இந்த வலி குறிப்பிட்ட நேரம் வரை வலியை அதிகரித்துவிட்டே செல்லும். சிலருக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் வரை வலி இருக்கும். வலியை அனுபவிக்கும் ஒவோரு நிமிடமும் மரண அவஸ்தைதான். இந்த ஒற்றைத் தலை வலிதான் மைக்ரேன் என்று அழைக்கப்படுகிறது.

மக்களின் ஆரோக்யம் குறித்த பிரச்னையைப் பற்றி 195 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் இரண்டாவது இடம் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலிக்குத்தான். மருத்துவ ஆய்வுகளில் முக்கியமாக கருதப்படும் இந்த தலைவலிக்கு காரணம் இதுதான் என்று இன்றுவரை உறுதியாக கண்டறி யப்படவில்லை. ஹார்மோன் பிரச்னையாக இருக்கலாம். பரம்பரையாகவும் இருக்கலாம். மூளையின் செயல்பாடுகள் அசாதாரணமாகும் போதும் இந்த வலி உண்டாகலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் எதுவுமே உறுதி செய்யப் பட வில்லை.

ஒற்றைத்தலைவலி இருபாலரையும் அவஸ்தைக்குள்ளாக்குகிறது என்றாலும் ஆண்களை விட பெண்களையே இது அதிகம் பாதிப்புள்ளாக்குகிறது. சிலருக்கு மைக்ரேன் தலைவலியாக இருந்தாலும் சற்று அவஸ்தையைக் கொடுத்த பிறகு சரியாகிறது. ஆனால் பலருக்கு மண்டையை பிளக்கும் அளவுக்கு வலியை உண்டாக்குகிறது. பணிக்கு செல்வோர் தங்களது பணிகளை கவனத்துடன் செய்ய இயலாமல் தடுக்கும் ஆரோக்ய குறைபாட்டிற்கான காரணத்தை பட்டியலிட்டிருக்கும் உலக சுகாதார அமைப்பு அவற்றில் ஒன்றாக ஒற்றைத் தலை வலியையும் சேர்த்திருக்கிறது.

மைக்ரேன் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாற்றத்தை உண்டாக்குகின்றன. சிலருக்கு சோர்வு, சிலருக்கு தலைசுற்றல், சிலருக்கு கண் பார்வை மங்குதல், சிலருக்கு சீரற்ற பேச்சு போன்றவை அறிகுறியாக இருக்கிறது. ஒற் றைத் தலைவலி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. ஆனால் எந்த வேலை யையும் செய்ய விடாமல் தடுக்கச் செய்யும். இத்தருணத்தில் வலி நிவாரண மாத்திரைகள் வலியை கட்டுப்படுத்த மட்டுமே. தீவிர வலியைக் கொண்டி ருப்பவர்களுக்கு இந்த மாத்திரைகளும் உதவாது என்பதை கவனிக்கவேண்டும்.

உணவு பொருள் ஒவ்வாமை, மன அழுத்தம், வேலைப்பளு இவைகள் கூட ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக அமைகின்றன. அதீத மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் மூன்றில் ஒருவர் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஆய்வு ஒன்று. பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய், கருப்பை பிரச்னைகள், மெனோபாஸ் காலங்களிலும், ஆண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம், மது போன்றவற்றாலும் ஒற்றைத் தலைவலி உண்டாக வாய்ப்புண்டு.

வலி அதிகமாகும் போது மருத்துவரிடம் சென்று அவருடைய ஆலோசனையின் பெயரில் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். மேலும் மனதை இலேசாக வைத்துக்கொள்வதோடு வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொள்ள வேண்டும். தலைவலி துவங்கும் போதே ஆழ்ந்து தூங்கினால் ஒற்றைத் தலைவலியின் ஆயுள் அதிக மணித்துளிகள் நீடிக்காது. இதுதான் எளிய தீர்வும் கூட என்கிறார்கள் மருத்துவர்கள்.

87441362e15b132ad719f6154c824b7989a00109 573655537

newstm.in

Related posts

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்காமல் இருக்கிறீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் இந்த பூ….இருந்த தடமே தெரியாதாம்

nathan

நீங்கள் உடைத்தெறிய வேண்டிய 13 கெட்ட பழக்கங்கள்!

nathan

பிரசவத்தின் போது முதுகில் மயக்க மருந்து கொடுப்பது ஏன்? தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு இரவில் வறட்டு இருமல் அடிக்கடி வருதா? சூப்பர் டிப்ஸ்…..

nathan

சத்தான சைடு டிஷ் சன்னா பாலக்

nathan

பற்களில் கூச்சம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்!!!

nathan

அன்றாட பழக்கவழக்கம் உங்கள் விந்தணு உற்பத்தியை பாதிக்கிறதா??

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கர்ப்ப கால நீரிழிவு பற்றி உண்மைகள்?

nathan