27 C
Chennai
Thursday, Nov 14, 2024
67701258a3e9556f0a5676e4f1b5bb0132b0d13 501261910
இளமையாக இருக்க

கர்ப்பிணிகள் அல்லாதவர்களும் படும் பிரச்னை வயிறு வரிகோடுகள்! சூப்பர் டிப்ஸ்…..

பிரசவத்துக்குப் பிறகு உண்டாகும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் அதாவது வயிற்றில் ஏற்படும் வரி வரியான கோடுகள் நாளடைவில் தழும்புகளை உண்டாக்கிவிடும். அழகை விரும்பும் பெண்கள் இந்த தழும்புகள் தெரிந்தால் அவஸ்தைப்படுவார்கள். களிம்புகளைப் பயன்படுத்தியாவது இந்த தழும்புகளை மறைக்க முயலுவார்கள்.

கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமல்ல மிக இளம் வயது தாய்மார்கள், உடல் பருமனிலிருந்து திடீரென்று உடல் எடையைக் குறைத்தவர்கள், ஹார்மோன் பிரச்னை குறைபாடுடையவர்கள், மரபியல் போன்ற காரணங்களால் வயிற்றில் கோடுகள் உருவாகிறது.

கர்ப்பிணி பெண்களை அதிகம் குறிவைக்கும் இத்தகைய தழும்புகள் உருவாக காரணம் கர்ப்பக்காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப வயிறு கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைகிறது.

பிரசவம் முடிந்ததும் இந்த விரிவு சுருங்குவதால் டெர்மிஸ் என்னும் லேயர் உடைந்து கோடுகள் உருவாகிறது.

கருத்தரித்த 8 ஆவது மாதம் முதலே வயிற்றின் மேல்புறம் கோடுகள் விழ தொடங்கும். கருத்தரித்த 5 ஆம் மாதம் முதலே சரும மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தரமான களிம்புகளைப் பயன்படுத்தினால் வரிக்கோடுகள் அழுத்தம் குறையும். சிலருக்கு தழும்புகள் வராமலேயே காக்க முடியும். தொடர்ந்து இந்த களிம்புகளைப் பயன்படுத்துவதால் தழும்புகள் முழுமையாக மறைந்துவிடும்.

களிம்புகள் வேண்டாம் இயற்கையிலேயே இந்த வரிக்கோடுகள் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே தழும்புகளை ஓட ஓட விரட்டலாம். சுத்தமான விளக்கெண்ணைய் இரண்டு டீஸ் பூன் எடுத்து உள்ளங்கையில் தடவி பத்து நிமிடங்கள் வயிற்றுப்பகுதியில் மசாஜ் செய்ய வேண்டும்.

பிறகு மெல்லிய துணியை வயிற்றின் மேல் போர்த்தி ஹாட் வாட்டர் பேகை மெதுவாக ஒத்தடம் போல் கொடுத்தால் சருமத்துளைகளின் வழியே எண்ணெய் செல்லும். பிறகு அரைமணி நேரம் கழித்து குளிக்கலாம். இதே போன்று ஆலிவ் எண்ணெய், இ மாத்திரை வடிவில் கிடைக்கும் வைட்டமின் எண்ணெய், தேங்காய் எண்ணெய், சம அளவு பாதாம் எண்ணெய் சேர்ந்த கலவை எண்ணெய் போன்றவற்றையும் மசாஜ் செய்யலாம்.

தழும்புகள் அதிகம் இருந்தால் எண்ணெயுடன் சர்க்கரை எலுமிச்சைச்சாறு சேர்த்து ஸ்க்ரப் போல் செய்து தழும்புகள் மீது தேய்த்து வந்தால் நாளடைவில் தழும்பு இருந்த இடம் காணாமல் போகும். கற்றாழை சாறை வயிற்றின் மீது தடவி மசாஜ் போல் செய்தால் கோடுகள் மறைந்து சருமம் பொலிவு பெறும். குளிப்பதற்கு முன்பு எலுமிச்சைச்சாறை கோடுகள் உள்ள இடத்தில் தடவி மிதமான வெந்நீர் கலந்து குளியுங்கள். நிச்சயம் பலன் தெரியும்.

இவையெல்லாம் வீட்டிலிருக்கும் பொருள்களைக் கொண்டு செய்யும் சிகிச்சை முறைகள். ஆனால் களிம்புகளைப் பயன்படுத்தும்போது தரமான களிம்புகளை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்துவதே நல்லது. இல்லையெனில் கோடுகள் நீங்காமல் வேறு பக்கவிளைவுகள் உண்டாகவும் வாய்ப்புண்டு.

67701258a3e9556f0a5676e4f1b5bb0132b0d13 501261910

newstm.in

Related posts

பெண்களுக்கு யாரை பிடிக்கும்

nathan

பெண்கள் தனியாக சுற்றுலா செல்லும் போது செய்யக்கூடாதவை!…

sangika

பெண்கள் ‘ஸ்லிம்’ அழகு பெற ஆசைப்பட்டால்…

nathan

இளமைக்குத் தேவை உடல் அல்ல மனம்

nathan

இளமையைப் பாதுகாக்க இரவில் போட வேண்டிய சில ஃபேஸ் பேக்குகள்!!!

nathan

இளமை தோற்றம் தரும் எண்ணெய் மஜாஜ்

nathan

உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்கும் இயற்கை மூலிகைகள்

nathan

இளமையான தோற்றத்தை தரும் எண்ணெய் மசாஜ்

nathan

இளமை நிலைத்து இருக்க இஞ்சி

nathan