பச்சைப்பயறு என்னும் பாசிப்பயறு உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.
● முளைகட்டிய பயறு:
பச்சைப் பயறை நன்கு சுத்தம் செய்து 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். எட்டு மணி நேரம் கழித்து நீரை நன்றாக வடித்து,
ஒரு பருத்தித் துணியால் கட்டி வைத்து, அடுத்த எட்டு மணி நேரத்தில் பச்சை பயிறு நன்கு முளை விட்டிருக்கும்.
அவற்றை உண்ண பல நன்மைகள் நமக்கு உண்டாகும்.
● நன்மைகள்:
* உடல் பருமனை குறைக்கும்.
* ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
* உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைக்கும்.
* சரும புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்.
* நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும்.
* உடலுக்கு வலிமையும் ஆற்றலும் தரவல்லது.
* ஊளைச் சதைகள் உண்டான தொப்பையை விரைவில் குறைக்கும்