25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
27143225
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு சைனஸ் பிரச்னையை விரட்ட வேண்டுமா? இதை மட்டும் இனி செய்யுங்க

சைனஸ் இன்று பலரையும் பாதிக்கும் பிரச்னைகளில் ஒன்று. அடிக்கடி பாடாய் படுத்தும் தும்மல், உடல் சோர்வு, முகமெல்லாம் வீக்கம், மூக்கு சிவந்து போதல் என இதன் பாதிப்பை உணர்ந்தவர்களுக்கே வலி தெரியும். இன்றைய உலகில் 100ல் 15 பேருக்கு சைனஸ் பிரச்னை இருக்கிறது.

சைனஸ் என்பது என்ன?

சுவாசத்தில் கலந்துவரும் கிருமி நச்சுக்களைத் தடுத்து சுத்தமான காற்றை உடலுக்கு செலுத்தும் பணிகளைச் செய்யும் சுவாச சுத்திகரிப்பானே இந்த காற்றறை. அதைத்தான் ஆங்கிலத்தில் சைனஸ் என்கிறோம், இதில் நச்சு பாதிப்பும், எழும்பு வளர்ச்சியில் கோளாறும் எட்டிப் பார்க்கும்போது சைனஸ் பிரச்னை வரும். இதனால் தும்மல் மூக்கில் நீர் வருவது, கண்ணின் புருவத்தில் வலி, தலைவலி போன்றவையும் வரும்.

பனிக்காலத்தில் சைனஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதன் அறிகுறிகளை இனம் கண்டு வீட்டு வைத்தியத்திலேயே தீர்வும் பெறலாம். சைனஸ் ஏற்படும்போது, கொஞ்சம் கருஞ்சீரகத்தை எடுத்து மெல்லிய பருத்தித் துணியில் முடிந்து, அதை அடைத்த மூக்கில் வைத்து உள்ளே இழுத்தால் உடனே பலன் கிடைக்கும். இதேபோல் சைனஸினால் வரும் தலைவலியைப் போக்க, நீலகிரி தைலம் அல்லது பைன் எனப்படும் டர்பண்டைன் ஆயிலை கொஞ்சம் கொதிக்கும் தண்ணீரில் இட்டு, முகத்தை துணியால் மூடி ஆவி பிடித்து வந்தால் அந்த தலைவலி, சைனஸையும் போக்கிவிட்டு ஓடிவிடும்.

ஆலிவ் எண்ணையை மூக்கைச் சுற்றி தடவினால் மூக்கடைப்பும், நீர் ஒழுகுதலும் போகும். சைனஸினால் ஏற்படும் முகவீக்கத்தை போக்க குளிர்ந்த நீர் அல்லது வெந்நீரில் மூக்கைச் சுற்றி ஒத்தடம் கொடுத்தால் முக வீக்கங்கள் ஓடிவிடும். மூச்சுப்பயிற்சியும், உடற்பயிற்சியும் சைனஸ்க்கு வேட்டு வைக்கும்.

சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு சில வீட்டு வைத்தியக் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் செய்யும் போது பின்வருவனவற்றைத் தவிர்க்க வேண்டும். வெந்நீரில் மட்டுமே குளிக்க வேண்டும். சர்க்கரை, பால்பொருள்கள், ஆல்ககால், கேக், மிட்டாய், வறுவல் ஆகியவற்றை விலக்கி வைக்க வேண்டும்.27143225

இனி மருத்துவக் குறிப்புகள் இங்கே….

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை கால் லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி நூறுமில்லி தண்ணீராக சுண்டியதும் அந்த நீரை கொஞ்சம், கொஞ்சமாக குடித்து வந்தால் சைனஸால் வந்த ஜூரம் போகும். இது வியர்வையை பெருகச் செய்து உடலில் நச்சுக் கழிவுகளைப் போக்கும். இதேபோல் ஓரிரு பூண்டு பல்லைப் போட்டு குடித்து வந்தாலும் சைனஸ் போகும். வெந்நீரில் தினமும் இருமுறை ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து குடித்தாலும் மாற்றத்தை உணரலாம்.

வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதற்கு மாம்பலம் பெஸ்ட். அரை லிட்டர் வெந்நீடில் கொஞ்ச,ம் உப்பு, சமையல் சோடா கொஞ்சம் சேர்த்து அந்த நீரை ஒரு மூக்கைப் பொத்திக் கொண்டு, இன்னொரு மூக்கின் துவாரத்தில் இட்டு நகரணும். தொடர்ந்து மூக்கை சிந்தி சளியை வெளியேற்ற வேண்டும். இப்படி இருபுறமும் செய்தால் சைனஸ்க்கு டாடா காட்டி விடலாம்.

கேரட் ஜீஸ் குடிக்கலாம். சின்ன வெங்காயம், பூண்டு அதிகம் சாப்பிடலாம். இதையெல்லாம் பாளோ செய்து பாருங்க…சைனஸ் சைலண்டா உங்களை விட்டு ஓடிடும்…

Related posts

எடைக்குறைப்பு எப்படி உங்கள் சர்க்கரை நோயில் இருந்து எப்படி காப்பாற்றுகிறது தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

வாய்ப்புண்ணை குணமாக்கலாம்

nathan

குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகளின் கவனத்துக்கு 10 விஷயங்கள்!

nathan

குண்டான பெண்கள் கருத்தரித்தால் பின்பற்ற வேண்டியவைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க… மாதவிடாய் இரத்த போக்கின் நிறத்தை வைத்து உங்களின் ஆரோக்கியத்தை அறியலாம்!!

nathan

செல்போன் மூலம் ஆண்களிடம் பெண்கள் சொல்லக்கூடாத 10 விஷயங்கள்..!

nathan

இந்த இடத்தில் இப்படி அறிகுறி இருந்தால் புற்றுநோய் தாக்கியிருக்கும் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உடல், மன, கேச நலம் காக்கும், நோய்களைத் தடுக்கும்… சாம்பிராணி தூபம்!

nathan

ஒரே நிமிடத்தில் எடையை மாற்றலாம்

nathan