25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
77 1
மருத்துவ குறிப்பு

எச்சரிக்கை! தும்மல் போட்டாலே கருப்பை இறங்குமா?

அடி இறக்கம் என்றாலே பெண்கள் அச்சப்படுவார்கள். ஆம், அடி இறக்கம் என்பது கர்ப்பப்பை தளர்வு ஆகும். இந்தப் பிரச்னை பெண்களுக்கு ஏற்படும்போது, எப்படிப்பட்ட அறிகுறிகள் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

சாதாரண இடுப்புவலி போல இருக்கும். அதேநேரம்  பின்புறம் இடுப்பில் கை வைத்து நின்றால் வலி குறைந்துவிட்டது போன்று தோன்றும். ஏதோ சதைப்பந்து பெண்களின் அடிப்பாகத்தில் கீழ்ப்பாகத்தில் இடிப்பது போன்று இருக்கும். பெண்களுக்கு எப்போதும் வெள்ளைப் போக்கு அதிகமாக இருப்பதுடன்,  பெண்ணுறுப்பில் உலர்ந்த தன்மை காணப்படும். பெண்ணுறுப்பு மற்றும் அதனை சுற்றி  அடிக்கடி ஏற்படும் அரிப்பு ஏற்பட்டு,  புண் உருவாகிவிடும். சிலருக்கு இரும்பினால், தும்மினால், முக்கினால் கருப்பை இறங்குவது போன்ற உணர்வு இருக்கும்.

கருப்பை பிரச்னையால் மாட்டிய பெண்களுக்கு அடிக்கடி சீறுநீர் வெளியேற்றம் இருக்கும். அத்துடன்  சிறுநீரை அடக்க முடியாத நிலை இருக்கும். தன்னை அறியாமல் சிரித்தால் கூட சிறுநீர் வெளியேறும் நிலை தோன்றலாம். அதேபோன்று  அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது போன்ற உணர்வும் கருப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.

நாம் இங்கே கூறியிருக்கும் ஒருசில அறிகுறிகள் இருந்தாலே, உடனடியாக  மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். விரல் வைத்துப் பார்த்தே மருத்துவர் நிலைமையை சொல்லிவிடுவார் என்பதால் அச்சப்பட அவசியம் இல்லை.77 1

Related posts

குழந்தைகள் சரியாக தூங்கவில்லையென்றால் சந்திக்கும் பிரச்சனை என்ன?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையின்மை – காரணங்களும் தீர்வும்

nathan

முதுகு வலி விலகுமா?

nathan

மூளையை பாதிக்கும் செயல்கள்

nathan

நாளைய வெற்றியை உறுதிபடுத்த நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 உண்மைகள்!!!

nathan

உங்கள் குழந்தை உங்களிடம் எதிர்ப்பார்ப்பது என்னவென்று தெரியுமா?

nathan

காதுக்குள் எறும்பு எப்படி எவ்வாறு?

nathan

தெரிஞ்சிக்கங்க…பல நன்மைகளை கொண்ட Aloe Vera-வில் மறைந்திருக்கும் தீங்குகள் என்ன தெரியுமா?

nathan

உப்பு தண்ணியில வாய் கொப்பளிக்க ஆரம்பிங்க… சூப்பர் டிப்ஸ்

nathan