24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
470446868c806bcaf78e0c857efffb14cb7fd678
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! தினமும் காலையில தண்ணீர் குடிச்சா இத்தனை நன்மைகளா?

பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உற்பத்தியாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிதும் உதவியாக இருக்கும்.

இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் முறையின் தாயகம் ஜப்பான் . அந்த நாட்டு மக்கள் தான் தினமும் காலையில் முகத்தை கழுவியதும் பற்களை துலக்காமல் கூட , 4 டம்ளர் தண்ணீரை குடிப்பார்கள் . அடுத்த 1 மணிநேரத்திற்கு எதுவும் சாப்பிடமாட்டார்கள் . இதற்கு பெயர் தான் தண்ணீர் தெரபி . இதனால் தான் ஜப்பானிய மக்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கின்றனர் .

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடல் சுத்தமாகும் . தண்ணீர் குடித்தவுடன் , சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும் . இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே , உடலில் உள்ள கழிவுகள் முற்றிலும் வெளியேறிவிடும் . மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுகள் சிறுநீர் மூலமாக வெளியேறிவிடும் . இதனால் உடலில் நச்சுகளிருக்காது .

பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும் . அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால் , உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து , தலைவலியானது குறையும் . காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள் , தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் , அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம் .

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் , உடலின் மெட்டபாலிக் விகிதமானது 24 சதவீதம் அதிகரிக்கும் . இதனால் உண்ணும் உணவானது விரைவில் செரிமானமடைந்துவிடும் . வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் , இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து , இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால் , உடலானது எனர்ஜியுடன் இருக்கும் .

எடையை குறைக்க நினைப்பவர்கள் , அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் , உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன் , உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி , உடல் எடை குறைய உதவியாக இருக்கும் . குடலானது சுத்தமாக இல்லாவிட்டால் , முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும் . இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும் . எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால் , குடலியக்கம் சீராக நடைபெற்று , முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும் .

470446868c806bcaf78e0c857efffb14cb7fd678

Related posts

இதில் ஒரு அறிகுறி இருந்தாலும் உங்கள் கிட்னி பெரிய ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்…

nathan

பெண்களே மின்சாரத்தை மிச்சப்படுத்துவது எப்படி தெரியுமா?

nathan

மாதவிடாய் காலத்தில் பெண்கள் தலைக்கு குளிக்க கூடாதா?தெரிஞ்சிக்கங்க…

nathan

காதலும்.. (இனக்)கவர்ச்சியும் – தெரிந்து கொள்வது எப்படி?

nathan

உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வெளியேற்றுவது எப்படி?

nathan

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கொய்யாப்பழம்

nathan

உடல் பருமனால் ஏற்படும் வியாதிகள்

nathan

கர்ப்ப காலத்தில் தப்பித்தவறி கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க – பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

இப்படி செஞ்சா கூட கோவம் குறையும்னு உங்களுக்கு தெரியுமா!!! படிச்சு தெரிஞ்சுக்குங்க!!!

nathan