கடந்த சில வருடங்களில் இல்லாத ஒரு அளவிற்கு கொடூரமான வெயிலான அதிகளவு தனது தாக்கத்தை காட்டி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நேரத்தில் பாணி புயலில் தமிழகத்திற்கு மழை இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில்., ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலத்திற்கு பரந்த பாணியின் காரணமாக நிலப்பரப்பில் இருந்த ஈரப்பதம் அனைத்தையும் கடத்திக்கொண்டு சென்றது.
இந்த நிலையில்., கடந்த நான்காம் தேதியில் இருந்து இம்மாத இறுதியில் 29 ம் தேதி வரை அக்னி நட்சத்திரமானது தனது கோர தாண்டவத்தை காட்டவுள்ளது. இந்த சமயத்தில் அடிக்கும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் கடுமையான வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு வழியை தேடி அலைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உள்ள எளிய முறைகள் குறித்து இனி காண்போம்.
பொதுவாகவே வெயில் காலங்களில் உடலில் இருந்து அதிகளவு வியர்வையானது வெளியேறும். உடலில் இருக்கும் நீர் சத்தின் அளவும் வெகுவாக குறைவதால்., அதிகளவு நீரை குடித்து வந்தால் பெரும்பாலான பிரச்சனையில் இருந்து தப்பிக்க இயலும். வெளியே செல்லும் சமயத்தில் தண்ணீர் பாட்டிலில் நீரை எடுத்து செல்லுதல் மற்றும் குளிர்ந்த நீர்., குளிர்பானங்கள் மற்றும் தேநீர் அருந்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த சமயத்தில் மண்பானையில் நீரை ஊற்றி குடித்தால்., மோர் குடித்தால்., இளநீர் மற்றும் பதநீர்., சர்பத் குடித்தால் போன்றவை மூலமாக உடலின் வெப்பமானது அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். இந்த நேரத்தில் ஏற்படும் வியர்க்குரு பிரச்னையை தவிர்ப்பதற்கு காலை மற்றும் மாலை வேளைகளில் குளிக்க வேண்டும்., வியர்க்குரு ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில் அதனை சொறியாமல்., அதற்கான களிம்புகளை போட்டு குணப்படுத்த வேண்டும். .
இதற்கு அடுத்தபடியாக வியர்வை நாற்றம் அனைவரும் ஏற்படும் பெரும் பிரச்சனையாக உள்ளது. உடலின் அக்குள் மற்றும் அந்தரங்க பகுதியில் இருக்கும் உரோமத்தை நீக்குவதன் மூலமாக உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை குறைக்கலாம். இதன் மூலமாக அக்குள் பகுதியில் வரும் பாக்டீரியாக்களை தடுக்க முடியும். இதுமட்டுமல்லாது ஆன்டி-பாக்டீரியல் சோப்புகளை பயன்படுத்தி பாக்டீரியாக்களை பயன்படுத்தலாம்.
முடிந்த அளவிற்கு காலை சுமார் 10 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வத்தையும்., வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு சன் கிளாஸ் அணிவதையும் கையாளலாம். மேலும்., அதிக நேரம் புறஊதா கதிர்கள் நம்மை தாக்கும் பட்சத்தில் சருமம் தொடர்பான பிரச்சனைகள் வரும். இதன் காரணமாக வெயில் காலத்தில் உடலை மறைக்கும் ஆடைகளை அணிவித்து செல்வது நல்லது. பருத்தி ஆடைகள் அணிவது நல்லது.