எடையைக் குறைப்பதற்கு மிக அதிகமாக சிரமப்படுகிறீர்களா? ஆனால் உங்களுக்கு எடையை வேகமாகக் குறைக்க வேண்டுமா? நீங்கள் இப்போதுதான் சரியான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள். சிலர் குறைவாக சாப்பிட்டு நிறைய ஓடுவார்கள்.
ஆனால் அது பெரிதாகப் பயன்தராது. அப்போ எப்படி தான் எடையை வேகமாகக் குறைக்கணும்னு கேட்கறீங்களா? இதோ இந்த மாஸ்டர் பீஸ் ஐடியாக்களைப் படிச்சு தெரிஞ்சிக்கங்க.
குறைந்த கார்போ தேர்வு
எடையைக் குறைப்பதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது சர்க்கரையும் ஸ்டார்ச்சும் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது தான். பிரெட், பாஸ்தா, உருளைக்கிழங்கு ஆகியவற்றை தவிர்ப்பது முக்கியம். கலோரிகளை அளந்து சாப்பிடுங்கள். குறிப்பாக குறைந்த கார்போ உணவுகளைச் சாப்பிடுங்கள்.
பசிக்கும்போது
பசிக்கும்போது மட்டும் சாப்பிட்டுப் பழகுங்கள். எப்போதும் கொரித்துக் கொண்டிருக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். நேரத்துக்கு சாப்பிடுவதை விட பசித்த பின் சாப்பிடுவுது தான் நாள். ஏற்கனவே சாப்பிட்ட உணவு முழுமையாக ஜீரணமடைந்த பிறகு தான் அடுத்து நமக்கு பசி எடுக்கும். அதனால் தேவையில்லாத கழிவுகளும் கொழுப்பும் படிவதைத் தடுக்க முடியும்.
இயற்கை கொழுப்பு
இயற்கையான கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொண்டால், தேவையில்லாமல் அதிக கார்போக்கள் எடுத்துக் கொள்வதும் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகளையும் நம்முடைய உடல் இயற்கையாகவே தடுக்கும். அதில் தேங்காய் எண்ணெய், முட்டை, பேகன், கொழுப்புடன் கூடிய இறைச்சி, கொழுப்பு நீக்கப்படாத பால், வெண்ணெய், ஆலிவ் ஆயில், கொழுப்புள்ள மீன் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட ஆரம்பியுங்கள்.
செயற்கை உணவுகள்
இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். செயற்கையாகக் கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். காய்கறிகள், மீன் போன்ற இயற்கை உணவுகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தவிர்த்தால் கவலையை விடுங்க
ஏதேனும் உணவு நேரத்தில் உணவை சாப்பிடாமல் இருந்தால் அதற்காக சிலர் கவலைப்படுவதுண்டு. அப்படி செய்தால் வெயிட் போடும் என்றும் உடலுக்குக் கேடு என்றும் சொல்வதுண்டு. ஆனால் அதற்கெல்லாம் கவலைப்பட வேண்டும். உணவை ஸ்கிப் செய்தால், கவலைப்பட வேண்டாம். பிறகு நன்கு பசியெடுக்கும்.
அளவெடுங்கள்
குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இடுப்பு மற்றும் சதை அதிகம் இருந்த இடங்களில் டேப் கொண்டு அளந்து பாருங்கள்.
பழங்களுக்கு நோ
பழங்கள் சாப்பிட்டால் எடையைக் குறைத்து விட முடியும் என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பழங்களைச் சாப்பிடும் பொழுது, விரைவாகவே பசி எடுக்க ஆரம்பித்து விடும். அதனால் அதிகமாக சாப்பிட ஆரம்பித்து எடையைப் பெருக்கிக் கொள்ளத் தான் செய்வீர்கள்.
பால் பொருள்கள்
பால் பொருள்களை சாப்பிடும் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக நொதித்த யோகர்ட், தயிர் போன்ற புரோ ஃபயோடிக் உணவுகளைச் சாப்பிடுங்கள்.