34.5 C
Chennai
Sunday, Jul 13, 2025
fat
ஆரோக்கியம்

ஜாலியா எப்படி கொழுப்பை குறைக்கலாம்?

உடலில் பழுப்பு கொழுப்பை சரியாக வைத்திருப்பதன் மூலம் உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க சாத்தியமுள்ளது.நீங்கள் எடை குறைப்பது என்பது கலோரியை இழப்பதையே குறிக்கிறது. அதிக எடையைப் பெறுவது தனிமனித உடல் பருமனை அதிகரிக்கும்.

மக்கள் எப்போதும் அற்புதமான மற்றும் கட்டுமஸ்தான உடலமைப்பை பெறவே விரும்புவார்கள். சரியான உணவு கட்டுப்பாடும் வழக்கமான உடற்பயிற்சி இருந்தால் இவை அனைத்தும் சாத்தியமாகும். சமீபத்திய ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் படி,மக்கள் நுகரும் பொருட்களில் உள்ள இரசாயனங்களும் எடை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

fat

கொழுப்பு

ஆராய்ச்சியாளர்களின் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில், பழுப்பு கொழுப்பு அல்லது பழுப்பு கொழுப்புதிசு என்பது ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு மட்டுமே பழுப்பு கொழுப்பு இருக்கும், அதுவும் வயது ஆக ஆக கரைந்துவிடும் என மக்களால் நம்பப்படுகிறது.விஞ்ஞானிகள் கூற்றுபடி, பழுப்பு கொழுப்பு வளர்சிதை மாற்றமாக செயல்படும் ஒரு கொழுப்பு மற்றும் இதற்கு கலோரியை எரிக்கும் திறனும் உள்ளது. இது நல்ல கொழுப்பு வகை என கருதப்படும் நிலையில், உடல் வெப்பநிலையை சரியாக பராமரிக்கவும், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்றவற்றில் இருந்து தப்பிக்கவும் உதவுகிறது.

உடலில் என்ன நடக்கும்?

கலிபோர்னியா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, பழுப்பு கொழுப்பு உற்பத்தியைக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட மரபணுவுடன் கூடிய எலிகள் குறைந்த இரத்த அழுத்த அளவுடன் மிகவும் மெலிதாக உள்ளன. மேலும் அவற்றில் இன்சுலின் எதிர்ப்பும் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மரபணு மாற்றப்பட்ட எலிகளுடன் ஒப்பிடுகையில், இந்த எலிகளின் கல்லீரலில் குறைவாக கொழுப்பு இருப்பதால், இவை ஆரோக்கியமாகவும் உள்ளன. எனவே, பருமனான மனிதர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பழுப்பு கொழுப்பு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பல முடிவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.

வயது

வயது வந்த ஒவ்வொருவருக்கும் அதிகமான அல்லது குறைவான விகிதத்தில் பழுப்பு கொழுப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், அது செயல்படுத்தப்படாவிட்டால், பழுப்பு கொழுப்பிக்கு அதிக நடவடிக்கைகள் இருக்காது. வெவ்வேறு வயதில் இந்த பழுப்பு கொழுப்பும் கூட இழக்கப்படுகிறது. நடுத்தர வயது மற்றும் வயதானவர்கள் எடை அதிகரிப்பதற்கு இதுதான் முக்கிய காரணம். ஆனால் இந்த நோய் பழுப்பு கொழுப்பு அளவை குறைவதால், பல இளம் வயதினரும் கூட உடல் பருமனாக உள்ளனர்.

உடல் பருமன் இல்லாத அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. இப்போது உங்களுக்கு அதிக எடை இல்லை என்றால், பழுப்பு கொழுப்பை செயல்படுத்தல் மூலம் பிற்காலத்தில் உடல் பருமனில் இருந்து பாதுகாக்க உதவும்.

வெப்பநிலையை குறைத்தல்

நீங்கள் வாகனம் ஓட்டும்போது, சாளரத்தை திறப்பதன் மூலம் காரின் உட்புறம் குளிர்ச்சியாக இருக்கும். நீங்கள் இருக்கும் இடத்தில் சில டிகிரிகள் வெப்பநிலையை குறைப்பது மிகவும் முக்கியம். பழுப்பு கொழுப்பை செயல்பட தூண்டுவதற்கு குளிர்ந்த வெப்பநிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பல்வேறு ஆய்வுமுடிவுகள் தெரிவித்துள்ளன.

மேலும் இது திறம்பட கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது.ஆனால் புவி வெப்பமயமாதல் காரணமாக நாம் இயற்கையான சூழலில் குளிரூட்டும் விளைவை பெறுவது கடினம். வாழும் சூழல் வெப்பமானதாக இருந்தால் கலோரி எரியும் திறன் குறைவாகவே இருக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆப்பிள் சாப்பிடுதல்

ஆப்பிள் தோலில் உள்ள உர்சோலிக் அமிலம் என்ற சேர்மம் தான் எலிகளில் பழுப்பு கொழுப்பு மற்றும் எலும்புகள் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. அதிக கொழுப்பு சத்துள்ளஉணவை எலிகள் உண்டாலும், அதிக கலோரி எரிக்கும் திறனும் கொண்டவை. அதனால் அவை மிகவும் குறைவாக எடையுடன், நிலையான இரத்த அழுத்தம் நிலைமையையும், கல்லீரல் கொழுப்பு நோய் இல்லாமலும் உள்ளன.

நீங்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு ஆப்பிள்களை உட்கொண்டால், மெலிதாக இருக்க தேவையான உர்சோலிக் அமிலத்தின் அளவு உங்களுக்கு கிடைத்துவிடும். மேலும் நீங்கள் ரோஸ்மேரி, திமே, லாவெண்டர், பசில் மற்றும் கிரான்பெர்ரி ஆகியவற்றையும் உட்கொள்ளலாம்.

ஹாட் பெப்பர் அதிகம் சாப்பிடுவது

ஹாட்பெப்பர் சாப்பிடுவதன் மூலம் உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை குறைக்கவும் முடியும். நீங்கள் சிலி மிளகு உட்கொள்வதன் மூலம் அது பழுப்பு கொழுப்பு செயல்பாடுகளை தூண்டும். ஹாட்பெப்பரில் உள்ள கேப்ஸினாய்டுகள் நரம்பு அமைப்பிற்கு சமிக்ஞைகளை அனுப்பி பழுப்பு கொழுப்பு உற்பத்தியை தூண்டுகின்றன.

மருத்துவ ஆய்வு ஒன்றில், 9 மில்லிகிராம் கேப்ஸினாய்டுகள் உள்ள கேப்சூல்கள் 10 ஆண்களுக்கு வழங்கப்பட்டன, சிலருக்கு மருந்துபோலி வழங்கப்பட்டது. இதன் விளைவாக சிலி மிளகு காப்ஸ்யூல்கள் உட்கொண்டவர்கள் குளிர்ச்சியாக உணர்ந்தனர். மேலும் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இவர்கள் ஒரு நாளைக்கு 150 கலோரிகள் அதிகம் எரிக்க முடிந்தது.

Related posts

சூப்பர் டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்… !

nathan

கருச்சிதைவின் வெவ்வேறு விதங்கள்

sangika

இந்த பாவங்களுக்கு இவ்வுலக வாழ்க்கை, மறுவுலக வாழ்க்கை இரண்டிலுமே தண்டனைகள் நிச்சயம்!…

sangika

உடல் சிலிம் ஆக வேண்டுமா??? —இய‌ற்கை வைத்தியம்

nathan

ஃபிட்னஸ்ஆர்வம் கொண்ட எல்லோரும் இதனை அறிந்துகொள்வது அவசியம்!…

sangika

எதுக்கலிப்பதற்கான சில பொதுவான அறிகுறிகள்….

sangika

இந்த ஆசன நிலையில் அமர்ந்திருந்தால் சுகப்பிரசவத்திற்கு மிகவும் அனுகூலமாகும்.

nathan

இந்தப் பழம் பல நோய்களில் இருந்து விடுதலை அளிக்கும்…..

sangika

இடுப்பு சதை குறைக்க உதவும் ஜிம் உடற்பயிற்சிகள்

nathan