22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
957800 5266
சரும பராமரிப்பு

பாதவெடிப்பை நீக்கி பாதங்களை மென்மையாக வைத்திருக்க உதவும் சூப்பர் டிப்ஸ் …!

சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை. இதனாலும் பாத வெடிப்புகள் வரும். அதை போக்க எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.
கடுகு எண்ணெயை தினமும் கால், கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும். முதல் நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு உள்ளங்காலில் தேய்க வேண்டும். மறுநாள் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள்.

தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர, பாதம் மெத்தென்று ஆகும். வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் அப்பி பின் தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.

வாழைப் பழத்தை மசித்து உங்கள் பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து பாதங்கள் மிருதுவாகும். பாதத்தில் உண்டாகும் சுருக்கங்கள் மறையும்.
மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.

உருளைக்கிழங்கை காய வைத்து பவுடராக்கி பின் அதை தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.

பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெது வெதுப்பான தன்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு சொரிக்கல்லை பயன்படுத்தி பாதத்தில் உள்ள இறந்த செல்களை, மெதுவாக தேய்த்து எடுக்கவும். பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவி, 20 நிமிடங்கள் வரை, அவை பாதங்களில் நன்றாக ஊறும் படி செய்யலாம்.957800 5266

Related posts

சரும பள பளப்பிற்கான -சித்த மருந்துகள்

nathan

முதுமையிலும் இளமையாக தெரியனுமா

nathan

வயதானாலும்… இளமையை தக்க வைக்கும் டிப்ஸ்..தெரிந்துகொள்வோமா?

nathan

குளிர் காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க..

nathan

வறண்ட சருமப் பிரச்சனையா? இதோ இந்த டிப்ஸ் யூஸ் பண்ணுங்க

nathan

அழகுக்காக பயன்படுத்தும் கஸ்தூரி மஞ்சளில், இவ்வளவு மருத்துவ குணங்களா? படியுங்க..

nathan

தோல் வறண்டு போவது ஏன், அதை தவிர்ப்பது எப்படி?

nathan

உங்கள் சருமத்திற்கு மெருகூட்டும் பிபி, சிசி, டிடி க்ரீம் பற்றி தெரியுமா? தெரியலைன்னா தெரிஞ்சுக்கோ

nathan

அழகுக்கு தடைபோடும் அலர்ஜி

nathan