narai
தலைமுடி சிகிச்சை

நரைமுடியை கருமையாக்கும் சில டிப்ஸ்…!

இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவது என்று யோசியுங்கள். இங்கு வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவது என்று ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

narai

தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.

கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும்.

இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும். ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.

நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.

வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.

நெய் கூட வெள்ளை முடியை மறைய வைக்கும். அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படி நன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று தாமதமாக கிடைக்கும். இருப்பினும் இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்க முடியும்.

1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.

Related posts

அலுமினியத்தாளை தலையில் சுற்றிக் கொள்வதால் பெறும் நன்மை பற்றி தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா முடி உதிர்வு, பொடுகு, அடர்த்தியின்மை இதுக்கெல்லாம் சிறந்த தீர்வு தரும் ஒரு பொருள் !!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தலைமுடி வளர்ச்சிக்கு மாயங்களை செய்யும் சக்தி வாய்ந்த சில வீட்டு சிகிச்சைகள்!!!

nathan

உங்களுக்கு தலைமுடி அதிகமா உடையுதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ஈஸ்ட் வாங்கி வச்சுக்கோங்க! வாரம் 2 நாள் யூஸ் பண்ணினா உங்க முடி நீளமா, அடர்த்தியா மாறும் தெரியுமா!!

nathan

என்ன பண்ணாலும் முடி வளர மாட்டீங்குதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு நல்ல அடர்த்தியான முடியைப் பெற வேண்டுமா…!அப்ப இத படிங்க!

nathan

கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள இயற்கை கலரிங்

nathan

நரைமுடி, கூந்தல் உதிர்வை தடுக்க சீகைக்காய் போட்டு குளிக்க

nathan