இன்டர்நெட்டும் கணினியும் இதோடு ஸ்மார்ட் போன்களும் நம் வாழ்க்கையை சுற்றி வளைத்துக் கொண்டதன் பலனாய் நம்மில் பலருக்கும் கிடைத்த வியக்கத்தகுப் பரிசு உடல் பருமன். நம்மில் பலருக்கு உடல் பருமன் அதிகரிக்கிறதே தெரிவதில்லை. திடீரென ஒருநாள் நமது பேன்ட் இருக்கமானாலோ, கண்ணாடி முன்பு நின்று தலைவாரும் போது தொந்தி கொஞ்சம் எட்டிப் பார்த்தாலோ தான் நமக்கே தெரிகிறது நமது உடல் பருமன் அதிகரித்துவிட்டது என்று.
பொதுவாக ஒரு பழமொழி உண்டு, ” எதையும் உருவாக்குவது கடினம், ஆனால் அழிப்பது சுலபம்” என்று. இதற்கு பின் மாதிரியாய் அமைவது தான் தொந்தி. தொந்தியை உருவாக்குவது எளிது, ஆனால் குறைப்பது கடினம். எதையும் வரும் முன் காப்பது நன்று என்பதை நாம் ஐந்தாம் வகுப்பு பயிலும் போதே கற்றுக் கொடுத்துவிட்டனர். அதனால், தொந்தி தொங்கட்டும் குறைத்துக் கொள்கிறேன் என்று இருக்காமல்.
தொந்தி உருவாகும் போதே அதை அறிந்து கட்டுப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். சரி, தொந்தி வருவதை அறிந்து கொள்ள ஏதாவது ஒரு அறிகுறி இருக்கிறதா? என கேட்கிறீர்களா. ஒன்று இல்லை, பத்து இருக்கிறது. இதை சரியாக அறிந்து நீங்கள் செயல்பட்டாலே தொந்தி வருவதை தடுத்துவிடலாம்.
சோர்வு நீங்கள் எப்போதும் செய்யும் வேலைகளை செயும் போது கூட ஏதோ அதிக வேலைகளை செய்தது போல அடிக்கடி உடல் சோர்வு ஏற்படும். இதுதான் உங்கள் எடை அதிகரிக்கிறது என உங்களுக்கு நினைவூட்டும் முதல் அறிகுறி.
அடிக்கடி பசி அடிக்கடி பசிக்கும், ஏதாவது நொறுக்கு தீனி, தின்பண்டங்களை அசைப்போட்டுக் கொண்டிருக்க மனம் ஏங்கும். எவ்வளவு சாப்பிட்டாலும். திரும்ப மேலே ஏதாவது உள்ளே தள்ள முடியுமா என கண்கள் தேடும். இது உங்கள் உடல் பருமன் அதிகரிக்கிறது என்பதற்கான இரண்டாவது அறிகுறி.
இரத்தக்கொதிப்பு உங்கள் உடலில் திடீரென இரத்த சர்க்கரையின் அளவோ அல்லது இரத்தக்கொதிப்போ அதிகரிக்கிறது என்றால் அதுதான் உடல் எடை அதிகரிக்கிறது என்பதற்கான சரியான அறிகுறி. நீங்கள் இனி உணவு அளவில் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.
இடுப்பின் சுற்றளவு மற்றவை எல்லாம் நீங்கள் கண்கூடப் பார்க்க இயலாத போதிலும், உங்களது இடுப்பின் சுற்றளவை எளிதாக நீங்கள் பார்க்க இயலும். உங்கள் இடுப்பின் சுற்றளவு அதிகமானால், உங்களது உணவின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.
மூட்டு மற்றும் முதுகு வலி உங்களது கால் மூட்டுகளில் காரணமின்றி அடிக்கடி வலி வந்தால், உங்களது உடல் எடை அதிகரிக்கிறது என அர்த்தம். மற்றும் உடல் எடை அதிகரிக்கும் போது முதுகு வலி ஏற்படும்.
மூச்சுவிடுவதில் சிரமம் கொஞ்சம் தூரம் நடந்தாலோ, அல்ல சில படிகளை தொடர்ந்து ஏறினாலோ, மூச்சுவாங்க சிரமமாக இருந்தால், உங்கள் உடல் பருமன் அதிகரிக்கிறது என பொருள். உங்கள் உடல் எடை அதிகமடையும் போது இதயத் தசைகளில் அழுத்தம் அதிகமாகும். இதனால் இரத்த ஓட்டத்தின் சுழற்சி வேகம் குறையும். இதனால் தான் உடல் எடை அதிகரிக்கும் போது மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது.
உடல் சார்ந்த வேலைப்பாடுகளைத் தவிர்ப்பீர்கள் உதாரணமாக, படிக்கட்டுகள் இருந்தாலும் லிப்ட்டை தேடுவீர்கள். எழுந்து நடக்க முயற்சிக்காமல் உட்கார்ந்த இடத்திலேயே வேலையை செய்து முடிக்க நினைப்பீர்கள். இவை எல்லாம் உங்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கிறது என்பதனை நினைவூட்டும் அறிகுறிகளாகும்.
குறட்டை மற்றவர்களை தூங்கவிடாமல் நச்சரிக்கும் கெட்ட அலாரம் தான், உங்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கிறது என அறிவுறுத்தும் அலாரம். ஆம், குறட்டை கூட உடல் பருமன் அதிகரிப்பின் ஓர் காரணம் தான் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தோல்களில் இறுக்கம் குறையும் சாதாரணமாக இருக்கும் தோலின் இறுக்கம் குறைந்து, உங்களுக்கு சதை தொங்க ஆரம்பிக்கும். உங்களது சதைப்பிடிப்புகளில் இறுக்கம் குறைவது என்பதே உடல் எடை அதிகரிக்கிறது என்பதற்கான முக்கிய அறிகுறி ஆகும்.
கால் பாதங்களில் வெடிப்புகள் காரணங்கள் இன்றி உங்களது கால் பாதங்களில் வெடிப்புகள் தோன்றினாலே உங்கள் உடல் பருமன் அதிகரிக்கிறது என அர்த்தம் தான். இவை எல்லாம் தான் உங்களது உடல் பருமன் அதிகரிக்கிறது என நினைவூட்டும் அலாரங்கள். எனவே இதை அறிந்து உங்கள் உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது உங்கள் உடல்நலத்திற்கு நல்லது.