28.9 C
Chennai
Monday, May 20, 2024
pimple
அழகு குறிப்புகள்

பருக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கணுமா ?

இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையான முகப்பரு பிரச்சனைக்கானதீர்வு.

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே சரும பிரச்சனைகளை தான். ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக கெமிக்கல் கலந்த செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றுகிறோம்.

pimple

முகப்பரு

இந்த செயற்கை மருத்துவ முறைகளை பின்பற்றுவதால், பல விதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இவற்றை தடுக்க நாம் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றுவதே சிறந்த வழிமுறைகள் ஆகும்.

சரும பிரச்சனைகளில் மிக முக்கியமான பிரச்னை தான் முகப்பருக்கள். இந்த முகப்பருக்கள் எவ்வாறு வருகிறதென்றால், அவை நமது உடலில் உள்ள ஹார்மோன்களால் தான் ஏற்படுகிறது.

மேலும், பொரித்த உணவுகளை உட்கொள்ளுவதாலும், மன அழுத்தத்தில் பாதிக்கப்படுவதாலும், முகப்பரு பிரச்சனைகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் முகப்பருக்கள் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான இயற்கையான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

எலுமிச்சை சாறு

முகப்பரு பிரச்னை உள்ளவர்கள் இரவில் படுக்கும் போது. எலுமிச்சை சாற்றை சிறிது நீரில் கலந்து முகத்தில் தடவி விட்டு, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். அவ்வாறு தடவினால் முகப்பருக்கள் உருவாகி காரணமாக இருக்கும் பாகாடீரியாக்களை கொல்ல உதவுகிறது.

கிரீன் டீ

முகப்பரு உள்ளவர்கள் கிரீன் டீ செய்து, அதனை ஐஸ் கியூப்பில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து ஐஸ் கட்டிகளாக்கி, பின் அதனை முகத்தில் சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இதில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்ட்ஸ் சருமத்தை பாதுகாக்கிறது. மேலும், இது முகப்பருக்களை விரைவில் மறைய பண்ணுகிறது.

லாவெண்டர்

லாவெண்டர் எண்ணெய் முகத்தில் உள்ள பருக்களை மறைய பண்ணுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இது அனைத்து சருமங்களுக்கும் ஒத்து போவதில்லை. சில சருமங்களுக்கு இதை பயன்படுத்தும் போது, சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும்.

முட்டை

முட்டையில் உள்ள வெள்ளைக்கரு சரும பிரச்சனைகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் சருமத்தில் ஏற்படும் முகப்பருக்களை நீக்குகிறது. முகத்தில் முகப்பரு ஏற்படும் பொது, அதில் வெள்ளைக்கருவை பூசி, அது காய்ந்த பிறகு கழுவி வந்தால், முகப்பருக்கள் மறைந்து விடும்.

ஆப்பிள் சைடர் வினிகர்

முகப்பரு பிரச்னை உள்ளவர்களுக்கு ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு சிறந்த தீர்வை அளிக்கிறது. இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீரில் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இப்படி செய்து வந்தால் முகப்பருக்கள் நீங்கி விடும்.

Related posts

ஆயில் சருமத்திற்கான அழகு குறிப்புகள்

nathan

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…

sangika

குடும்ப வாழ்க்கை கசப்பானதாக மாறாமல் இருக்க சில அறிவுரைகள்!….

sangika

இயற்கையாக சருமத்தின் கருமையை போக்க உதவும் மாம்பழ பேஸ் பேக்

nathan

வறட்டு இருமல், இழுப்பு வலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்க….

sangika

வறட்சியான சருமத்தை பராமரிக்கும் முறை

nathan

முகம் பளிச்சிட சில டிப்ஸ்

nathan

இதனால் முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்!…

sangika

எளிய முறையில் காரா சேவ் வீட்டிலேயே செய்வது எப்படி..!

nathan