பொலிவற்ற மற்றும் வறண்ட கூந்தலை சரி செய்ய பெரிதும் உதவுவது எண்ணெய்கள் தான். கூந்தல் பராமரிப்பில் முக்கிய இடம் பிடிப்பது கூந்தலுக்கு எண்ணெய் பூசுவதாகும். தேங்காய் எண்ணெய், பொதுவாக கூந்தல் பராமரிப்புக்கு பெரிதும் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகும். அதே நேரத்தில் கூந்தலை ஆரோக்கியமாக்கி அதற்கு இயற்கையான பளபளப்பை அளிக்கும் மேலும் இரண்டு எண்ணெய்களை பற்றி நாம் இப்போது அறிவோம்.
ஆலிவ் எண்ணெய் கூந்தலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த எண்ணெய் ஆகும்.
இந்த மேஜிக்கல் எண்ணெய் உங்களது கூந்தலை உறுதியாகவும், பளபளப்பாகவும் நீளமாகவும் ஆக்குகிறது. ஆலிவ் எண்ணெயால் கூந்தல் அடையும் நன்மைகள் சிலவற்றை இங்கு காண்போம்:
தலைமுடியை மென்மையாகவும் மிருதுவாகவும் ஆக்குகிறது
தலைக்கு அடிக்கடி குளிப்பது மற்றும் மாசு காரணமாக கூந்தல் பொலிவற்றும் எளிதில் உடைந்தும் காணப்படும். கலரிங் மற்றும் இரசாயன ட்ரீட்மெண்டுகள் ஆகியவையும் கூந்தலை வறண்டு போகச் செய்வதுடன் பலவீனமாக்கிவிடும். வாரம் ஒரு முறை கூந்தலில் ஆலிவ் எண்ணெய் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் தலைக்கு குளித்தால் தலைமுடி மிகவும் மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் காணப்படும். தலைக்கு குளித்து காய வைத்த சுத்தமான கூந்தலில் 2-3 சொட்டுக்கள் ஆலிவ் எண்ணெயை சீரம் போல பூசுவதும் சிறந்த பலனளிக்கும். லீவ் இன் கண்டீஷனரை போல இது செயல்பட்டு தலைமுடியை பட்டுப் போல மென்மையாக்கி விடும்.
பொடுகினை நீக்கும்
ஆலிவ் எண்ணெய் கூந்தல் மற்றும் தலை சருமத்துக்கு ஈரப்பதம் அளித்து பொடுகினை சரி செய்து விடும். பொடுகு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் தலைச் சருமம் வறண்டு போவது தான் மிக முக்கிய காரணமாகும். உங்களது ஸ்கேல்ப்பில் ஆலிவ் எண்ணெயை தடவி 20 நிமிடங்களாவது ஊறிய பின்னர் மென்மையான ஒரு ஷாம்பூவை கொண்டு சுத்தம் செய்து விட வேண்டும்.
முடி வளர்ச்சியை தூண்டும்
ஆலிவ் எண்ணெயில் அதிகபடியாக விட்டமின் ஈ உள்ளதால் அது முடி வளர்ச்சியை பெரிதும் தூண்டுவதுடன் கூந்தலை ஆரோக்கியத்துடன் பராமரிக்கிறது. வறண்டு போவதால் தலைமுடி உடையும் பிரச்சினையையும் அது சரி செய்கிறது. ஈரப்பதம் நிறைந்த கூந்தல் எளிதில் உடைவதில்லை.
கூந்தலுக்கு மிகுந்த நன்மையளிக்கும் மற்றொரு எண்ணெய் கமேலியா எண்ணெய், இது டீ விதை எண்ணெய் எனவும் அழைக்கப்படும். கமேலியா சினென்சிஸ் என்ற செடியில் இருந்து தான் டீ தயாரிக்கப்படுகிறது. இது பெரும்பாலான பியூட்டி பிராடக்ட்களில் பயன்படுத்தப்படுவதுடன், அது மிகச் சிறந்த ஆன்டியாக்சிடென்ட்டும் ஆகும். பாரம்பரியமாக இது கண்டீஷனராக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கமேலியா எண்ணெய்யின் நன்மைகள் குறித்து நாம் இப்போது காண்போம்:
முடியுதிர்வினை குறைக்கிறது
கமேலியா எண்ணெயில் அதிகளவு ஆன்டியாக்சிடென்ட் இருப்பதால் அது முடியுதிர்வுக்கான காரணத்தை சரி செய்து அதனை குறைக்கிறது. மேலும் அது முடியை உறுதியாக்கி கண்டீஷன் செய்கிறது. உறுதியான கூந்தல் எளிதில் உடையாது.
முடியை மிருதுவாக்குகிறது
கமேலியா எண்ணெயை சுத்தமான கூந்தலில் பூசினால் அது கண்டீஷனராக செயல்பட்டு தலை முடியை மென்மையாக்குகிறது. பொலிவற்ற மற்றும் வறண்ட கூந்தலுக்கு அது ஈரப்பதத்தை அளிக்கிறது.
கூந்தலை எளிதில் கையாள உதவுகிறது
கூந்தல் மிருதுவாகவும் ஈரப்பதத்துடனும் இருந்தால் அது சிக்கலின்றி எளிதில் கையாளும் வகையில் இருக்கும்.
ஆலிவ் எண்ணெய் மற்றும் கமேலியா எண்ணெய் கலவை கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளிக்க சிறந்த தீர்வாகும். ட்ரெசமே பொட்டானிக் நரிஷ் & ரிப்ளெனிஷ் ஷாம்பூ & கண்டீஷனர் உங்களது கூந்தலுக்கு ஆலிவ் மற்றும் கமேலியா என இரண்டு எண்ணெய்களின் நற்பலன்களையும் தருகின்றது. இந்த ஷாம்பூ மற்றும் கண்டீஷனர் வகை, ஜீவனற்ற வறண்ட கூந்தலுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. அது கூந்தலுக்கு ஈரப்பதமளித்து மிருதுவாகவும் எளிதில் கையாளும் வகையிலும் ஆக்குகிறது. இதில் பாரபின் மற்றும் டைக்கள் இல்லை. ஆலிவ் எண்ணெய் மற்றும் கமேலியா என்ணெய் ஆகிய உட்பொருட்கள் கலர் மர்றும் கெமிக்கல் ட்ரீட்மெண்ட் செய்யப்பட்ட கூந்தலிலும் பயன்படுத்த பாதுகாப்பானது.
ட்ரெசமே பொட்டானிக் நரிஷ் & ரிப்ளெனிஷ் ஷாம்பூ & கண்டீஷனர் விட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ நிறைந்ததாகும். எனவே அது தலைமுடிக்கு தேவையான வலுவளிக்கிறது. கூந்தலை ஷாம்பூவால் சுத்தம் செய்து பின்னர் கண்டீஷனரை தடவவும். விரைவிலேயே உங்களது கூந்தலில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் கண்கூடாக காணலாம்!