கூந்தலை கலர் செய்வது ஒருவரின் ஒட்டுமொத்த தோற்றத்தில் மிகப் பெரிய மாறுதலை கொண்டு வரும்! பர்கண்டி, பிரவுன், ரெட் அல்லது பிங்க் அல்லது டச் அப் செய்து கொள்வதாக இருந்தாலும், ஹேர் கலர் செய்து கொள்வது முகத்துக்கு பொலிவினை தருவது என்னவோ நிஜம் தான்.
கலர் செய்த அல்லது டை செய்த கூந்தல் பார்க்க அழகாக இருந்தாலும், இந்த வகையான செமிக்கல் சிகிச்சைகள் கூந்தலின் தன்மையை மாற்றிவிடுகின்றன. எனினும், தலைமுடிக்கு போதிய பராமரிப்பினை வழங்கினால் பாதிப்புகள் குறைந்து கூந்தல் ஆரோக்கியமாக காணப்படும்.
கலர் செய்த கூந்தலை பராமரிக்க உதவும் மூன்று சிறந்த வழிகளை இங்கு நாம் காண்போம்:
1. சரியான பிராடக்டுகளை பெறுங்கள்
கலர் செய்த கூந்தல் எளிதில் பாதிப்படைவதுடன் அதிக சென்சிடிவ் ஆகவும் இருக்கும். உங்களது அருமையான ஹேர் கலர் அதிக நாட்கள் நீடிக்க வேண்டுமென்றால் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக திகழ வேண்டுமென்றால், உங்கள் கூந்தலுக்கேற்ற சரியாக பிராடக்டுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பாரபின் மற்றும் டைக்கள் அல்லாத மற்றும் இயற்கை உட்பொருட்கள் நிறைந்த ஒரு ஷாம்பூவே கலர் செய்த கூந்தலுக்கு மிகவும் ஏற்றது. கடுமையான ஷாம்பூ கூந்தலில் உள்ள இயற்கையான எண்ணெய்களை நீக்கி விடுவதுடன் கலரையும் மங்க செய்யும். உங்களது கூந்தலை மிகவும் மிருதுவான இயற்கை ஷாம்பூ கொண்டு அலசவும். பின்னர் இயற்கை உட்பொருட்கள் நிறைந்த ஒரு கண்டீஷனரை பயன்படுத்தவும். அது கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை லாக் செய்து உங்களது கூந்தல் ஆரோகியமாக திகழ உதவும். ஜின்செங் கொண்ட ஒரு பிராடக்டை பயன்படுத்தலாம். அது உங்களது ஸ்கேல்ப்பை தூய்மையாக்கி போஷாக்களிக்கும்.
2. கண்டீஷனிங் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்
கூந்தலை கலர் செய்யும் போது, அது பல்வேறு மாற்றங்களை எதிர் கொள்கிறது! வேர்க்கால்கள் திறந்து கொள்வதனால் கலர் எளிதாக பரவுகிறது. டீப் கண்டீஷனிங் சிகிச்சைகள் கூந்தலை மிருதுவாக்கி பளபளப்பை தருகிறது. வீட்டிலேயே எளிதாக நீங்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பல உள்ளன. அதில் ஒன்று ஆயில் மசாஜ் ஆகும். தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் எடுத்து அதனை லேசாக சூடாக்கி, கூந்தலில் மசாஜ் செய்யவும், முடியில் வேரிலிருந்து நுனி வரையில் பூசி ஒரு மணி நேரமாவது ஊற விடவும். பின்னர் நேச்சுரல் ஷாம்பூ கொண்டு அலசினால், அற்புதமான மாற்றத்தை கண்கூடாக நீங்கள் காண முடியும்! கலர் செய்த உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைக்க இதனை அடிக்கடி செய்து பாருங்கள்.
இதர எளிமையான சிகிச்சைகளுக்கு தயிர், அவகாடோ, தேன், வாழைப்பழம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இவை அனைத்துமே கூந்தலுக்கு அதிக போஷாக்களிக்கக் கூடியவை.
வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய ஹேர் மாஸ்க் ஒன்று இதோ:
பாதி வாழைப்பழம்
1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
1 தேக்கரண்டி தேன்
இவை அனைத்தையும் பிளெண்டரில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையை முடியின் வேர் முதல் நுனி வரை பூசவும். அதனை அப்படியே 30 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் ஒரு மென்மையான ஷாம்பூ கொண்டு அலசி விடவும். வேம்பு மற்றும் ஜின்சிங் கொண்ட ஷாம்பூவை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் அது மிகச் சிறந்த பலனளிக்கும்.
DIY சிகிச்சைகளை உங்களால் செய்ய முடியாவிட்டால், கலர் செய்த கூந்தலுக்காகவே கிடைக்கும் ஹேர் மாஸ்குகளை வாங்கி பயன்படுத்தலாம்.
இந்த சிகிச்சையை வாரத்துக்கு ஒரு முறை செய்யலாம்.
3. ஹீட்டில் இருந்து பிரேக் எடுங்கள்
ஹீட் ஸ்டைலிங் கருவிகளை அடிக்கடி பயன்படுத்துவதால் தலைமுடி பாதிப்படையும். அதுவும் கலர் செய்த கூந்தலில் அதனை பயன்படுத்தும் போது பாதிப்பு மேலும் அதிகரிக்கும். உங்கள் கூந்தலை கலர் செய்த பின்னர், இயற்கையாக உலர விடுங்கள். புளோ ட்ரை செய்ய வேண்டாம். ஹீட் இல்லாத வகையில் கர்ல்ஸ் மற்றும் வேவ்ஸ் செய்யும் முறைகளை பின்பற்றுங்கள். அதிகப்படியான ஹீட் கருவிகளுக்கு அவசியமில்லாத கூந்தல் அலங்காரங்களை செய்து கொள்ளுங்கள். ஆக மொத்தத்தில் கலர் செய்த கூந்தலை ஹீட் ஸ்டைலிங் கருவிகளிடம் இருந்து தள்ளியே வையுங்கள். அக்கருவிகளால் கூந்தலுக்கு ஏற்படும் பாதிப்புகளே அதிகம்.
கலர் செய்த பின்னர் முடியை பாதுகாப்பது உங்கள் கடமையாகும். கலர் செய்த பின்னர் உங்களது கூந்தலின் ஆரோக்கியத்துக்காக கொஞ்சம் அதிக நேரத்தை நீங்கள் செலவிடத் தான் வேண்டும். அப்போது தான் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். அழகான கூந்தலை பெறுவது உடனே நடக்கும் செயல் அல்ல, அது ஒரு பயணம். மென்மையான மற்றும் இயற்கையான பிராடக்டுகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் அந்த பயணம் மேலும் இலகுவாகும்.