26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
kopalam
ஆரோக்கியம்

இப்படி கொப்புளம் வந்தா ஒரே நாள்ல எப்படி சரி பண்ணலாம்?

கால்கள் தான் நாம் நடப்பதற்கு பேருதவியாக இருக்கிறது. கொஞ்சம் யோசித்து பாருங்கள் இந்த கால்கள் ஆரோக்கியமாக இல்லை என்றால் என்னவாகும்? நம்மால் எதையுமே சுலபமாக செய்ய முடியாது அல்லவா? எனவே பாதங்களை ஆரோக்கியமாக வைப்பது நமது கடமை. நம்மளை தாங்கிச் செல்வது இந்த கால்கள் தான்.

சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் பொருத்தமற்ற காலணிகள் கால்களில் வலியை ஏற்படுத்தி கொப்புளங்களை ஏற்படுத்தி விடும்.

இறுக்கமான ஷூக்கள், வியர்வை இவற்றால் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கொப்புளங்களை சாதரணமாக நினைக்க வேண்டாம்.

அப்படியே விட்டு விட்டால் தாங்க முடியாத வலியை ஏற்படுத்த ஆரம்பித்து விடும். அதிலும் சர்க்கரை நோயாளிகள் கால்களில் ஏற்படும் எந்த பாதிப்பையும் அலட்சியமாக எடுக்காதீர்கள்.

பிறகு கால்களை இழக்க வேண்டிய நிர்ப்பந்தம் கூட ஏற்படலாம். எனவே இந்த பாத கொப்புளங்களை உடனே சரி செய்ய வேண்டும். அதற்கு சில வீட்டு முறைகளைக் கையாளலாம். இந்த முறைகள் உங்களுக்கு சிறந்த தீர்வளிக்கும்.

kopalam

எப்படி ஏற்படுகிறது?

இந்த பாத கொப்புளங்கள் பாதங்களில் ஏற்படும் அழற்சி, தொற்று மற்றும் கட்டிகளால் ஒரு இடத்தில் கொப்புளங்களை உருவாக்குகிறது.

இதனால் வலி அல்லது வலி இல்லாமலும் இருக்கலாம். இந்த கொப்புளங்கள் சரியாகாமல் பெரிதாகி கொண்டே சென்றால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

குளிர்ந்த மற்றும் சூடான நீர்

தேவையான பொருட்கள்

சூடான நீர்
குளிர்ந்த நீர்
2 பக்கெட்டுகள்

பயன்படுத்தும் முறை

சூடான மற்றும் குளிர்ந்த நீரை இரண்டு பக்கெட்டுகளில் எடுத்துக் கொள்ளுங்கள்.
முதலில் 10 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் பாதங்களை ஊற வைக்கவும்.

பிறகு 10 நிமிடங்கள் சூடான நீரில் பாதங்களை ஊற வைக்கவும்.
இதை மறுநாள் திரும்பவும் செய்யவும்.

இப்படி சூடான, குளிர்ந்த நீரை பயன்படுத்தும் போது பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து உடனே பாத கொப்புளங்கள் சரியாக ஆரம்பித்து விடும்.

எப்சம் உப்பு

தேவையான பொருட்கள்

1/4 கப் எப்சம் உப்பு
வெதுவெதுப்பான நீர்
1 பக்கெட்

பயன்படுத்தும் முறை

ஒரு பக்கெட்டில் தண்ணீர் முழுவதும் எடுத்துக் கொண்டு அதில் பாதங்களை ஊற வைக்கவும் .

அதில் எப்சம் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

15 நிமிடங்கள் பாதங்களை ஊற வைக்கவும்.

கொப்புளங்கள் சரியாகும் வரை இதை திரும்ப செய்யவும்.

எப்சம் உப்பு அதன் அழற்சி எதிர்ப்பு தன்மையால் வீக்கங்களை குறைத்து விடுகிறது. பாதங்களில் உள்ள அழுக்கு, பாக்டீரியா தொற்று, நச்சு எல்லாவற்றையும் போக்குகிறது.

வினிகர்

தேவையான பொருட்கள்

1/2 கப் வினிகர் அல்லது ஆப்பிள் சிடார் வினிகர்
1 பக்கெட் தண்ணீர்

பயன்படுத்தும் முறை

வினிகரை தண்ணீரில் ஊற்றி 10-15 நிமிடங்கள் பாதங்களை ஊற வைக்கவும்
பிறகு சாதாரண நீரில் பாதங்களை கழுவி விட்டு மாய்ஸ்சரைசர் அப்ளே செய்து கொள்ளுங்கள்

அதே நேரத்தில் 1 டீ ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் சீக்கிரம் கொப்புளங்கள் குணமாகி விடும்.

கொப்புளங்கள் குணமாகும் வரை இதை செய்து வரலாம். இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை பாத கொப்புளங்களை விரைவில் குணப்படுத்துகிறது.

கிராம்பு எண்ணெய்

2-3 சொட்டுகள் கிராம்பு எண்ணெய்
1 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்

பயன்படுத்தும் முறை

இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து பாதங்களில் தடவுங்கள்
இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள்.
படுப்பதற்கு முன் இதை ஒவ்வொரு நாளும் செய்து வாருங்கள்

கிராம்பு எண்ணெய் பாதங்களில் உள்ள அழற்சியை போக்குதல், இரத்த ஓட்டத்தை அதிகரித்தல், வலியை குறைத்தல் போன்ற வேலைகளை செய்கிறது.

ஐஸ் ஒத்தடம்

தேவையான பொருட்கள்

ஐஸ் பேக்

பயன்படுத்தும் முறை

பாதிக்கப்பட்ட பாதங்களில் 10-12 நிமிடங்கள் ஐஸ் பேக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

இதை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வாருங்கள்.

ஐஸ் உங்களுக்கு கொப்புளங்களால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும். விரைவில் பாத கொப்புளங்கள் சரியாகி விடும்.

நீண்ட நேரம் ஐஸ் கட்டிகளை வைக்காதீர்கள். இது பாதங்களில் மற்றும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மிளகாய்

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி
தண்ணீர்
பேண்டேஜ்

பயன்படுத்தும் முறை

மிளகாய் பொடி யுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
இதை கொப்பளங்களில் தடவி பேண்டேஜ் போடவும்.

இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள்.

இதை சில இரவுகள் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

இது எல்லா வகை அழற்சியையும் போக்க கூடியது. எனவே சருமத்தில் ஏற்படும் அழற்சியை போக்கி சீக்கிரம் நிவாரணம் தருகிறது.

கடுகு எண்ணெய்

தேவையான பொருட்கள்

1-2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய்
சாக்ஸ்

பயன்படுத்தும் முறை

எண்ணெய்யை லேசாக சூடாக்கி பாதங்களில் நன்றாக மசாஜ் செய்யவும்
பிறகு சாக்ஸ் போட்டு இரவு முழுவதும் அப்படியே வைத்து கொள்ளுங்கள்
ஒவ்வொரு இரவும் இவ்வாறு செய்து வாருங்கள்.

கடுகு எண்ணெய் பாதங்களின் வெளியே மற்றும் உள்ளே ஏற்படும் கொப்பளங்களின் தீவிரத்தை குறைக்கிறது.

பாத உடற்பயிற்சி

பாதங்களை நீட்டி மடக்குதல், லேசான மசாஜ் போன்றவை இரத்த ஓட்டத்தை அதிகரித்து கொப்பளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

சரியான காலணிகள்

பொருத்தமற்ற காலணிகள் அணிவது, இறுக்கமான காலணிகள் போன்றவை இந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே கால் விரல்கள் நெருக்கமாக இருக்கிற மாதிரி காலணிகள், ஹை ஹீல்ஸ் போன்றவற்றை அணிவது தவறு. எனவே எப்பொழுதும் காலணிகளை அணிந்து பார்த்து பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுங்கள்.

வெறும் கால்களில் நடத்தல்

புல்வெளியில் தினமு‌ம் வெறும் கால்களில் சில நிமிடங்கள் நடந்து வாருங்கள். இது கால்களுக்கு சிறந்த பயிற்சி. பாதங்களுக்கு ரிலாக்ஸாக இருக்கும்.

ஃபுட் இன்ஸ்ர்ட்ஸ்

காலணிகளுக்குள்ளே பொருத்தமான ஃபுட் இன்ஸர்ட்ஸ்களை பயன்படுத்தலாம். இது பாதங்களுக்கு இதமாக இருக்கும். பாதங்களில் அதிக அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும். இதனால் பாத கொப்புளங்கள் வராமல் தடுக்க முடியும்.
என்னங்க இந்த கட்டுரை கண்டிப்பாக உங்களுக்கு பயனளிக்கும் என நம்புகிறோம்.

Related posts

நகம் கடிப்பதால் வரும் செப்சிஸ்!…

sangika

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை வைத்திருக்கும் பெற்றோரா நீங்கள் அப்ப உடனே இத படிங்க…

nathan

சுவையான சமையலுக்கு சின்னதா சில டிப்ஸ்!…

sangika

உப்புசத்தால் உண்டாகும் பிரச்னைகள்!…

sangika

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்க இதை செய்யுங்கள்!….

sangika

மருத்துவ குறிப்புகள்

nathan

இதைச் செய்யும்போது பல நன்மைகள் உடலளவிலும் மனதளவிலும் ஏற்படுகிறது….

nathan

ஸ்ட்ராபெரி

nathan

குடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது எப்படி?

nathan