பொதுவாக நம் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்துவம் கொண்டவையாக இருக்கும். சில உறுப்புகள் இருந்தாலும் உயிர் இயங்கும். ஆனால், சில உறுப்புகள் இல்லாமல் இருந்தால் உயிர் இயங்காது. ஒவ்வொரு உறுப்பும் பலவித இயக்கங்களை கொண்டது.
அதே போன்று சில முக்கியமான உறுப்புகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு விதமான செயல்பாடுகளை தரும். ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை சில உறுப்புகளின் அமைப்பை வைத்தே நம்மால் கண்டறிய இயலும் என ஆய்வுகள் சொல்கின்றன. இது எப்படி சாத்தியம் என்பதை பற்றி இனி அறிந்து கொள்ளலாம்.
உயரம்
பொதுவாக உயரம் அதிகம் கொண்டவர்கள் மிகவும் ஸ்மார்ட்டாக இருப்பார்கள். அத்துடன் இவர்களின் புத்தி கூர்மையும் அதிகமாகவே இருக்குமாம். எல்லா விதத்திலும் இவர்கள் தனித்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
மார்பு
பெண்களில் மிக சிறிய மார்பை கொண்டுள்ளவர்களை காட்டிலும், பெரிய அளவு மார்பை கொண்டோர் அதி புத்திசாலியாக இருப்பார்களாம். மேலும், இவர்களின் திறன் மற்றவர்களை கவர கூடிய அளவில் இருக்குமாம்.
பெரிய தலை
நம்மை சுற்றி இருக்கும் சில நண்பர்களுக்கு தலையின் அளவு சற்று அதிகமாகவே இருக்கும். இது தான் அவர்கள் எந்த அளவுக்கு அறிவு ஜீவியாக இருக்கிறார்கள் என்பதை குறிக்கிறதாம். மேலும், இவர்களின் மூளையின் செயல்பாடும் மற்றவர்களை காட்டிலும் அதிகமாவே இருக்கும்.
உதடு
உதடு பார்ப்பதற்கு சிறியதாகவும் மிகவும் கவர்ச்சியாகவும் இருந்தால் அவர்களின் செயல்திறன் மற்றவர்களை காட்டிலும் தனித்துவமாக இருக்குமாம். இப்படிபட்டவர்கள் எப்போதுமே அறிவு ஜீவியாக தான் செயல்படுவார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன.
முடி
உடலில் அதிகமான அடர்த்தியான கருமையான முடிகள் கொண்ட ஆண்கள் மிகவும் திறன் வாய்ந்தவர்களாக இருப்பார்களாம். இவர்களின் புத்தி கூர்மையும் பல மடங்கு அதிகமாகவே இருக்கும். பெண்களுக்கும் இப்படிப்பட்ட ஆண்களை தான் மிகவும் பிடிக்குமாம்.
ஆள்காட்டி விரல்
நீண்ட ஆள்காட்டி விரலை கொண்டோருக்கு அந்த அளவுக்கு மூளையின் திறன் இருக்காதாம். இதுவே ஆள்காட்டி விரல் சிறியதாக இருந்தால் அவர்கள் மிகவும் புத்திசாலி தன்மையுடன் இருப்பார்களாம்.
இடது கைப்பழக்கம்
உங்கள் நண்பர்கள் யாருக்காவது இடது கைப்பழக்கம் இருந்தால் அவருக்கு உங்கள் அனைவரையும் விடவும் புத்தி கூர்மை அதிகமாக இருக்குமாம். மேலும், கற்பூரம் மாதிரி எதையுமே கப் என்று பிடித்து கொள்வார். இவர்கள் அந்த அளவிற்கு திறன் வாய்ந்தவர்களாக தான் இருப்பார்களாம்.
மூக்கு
மூக்கின் நடுவில் சற்று மேடாக இருந்தால் அவர்கள் தனித்துவம் பெற்றவர்கள் என ஆய்வுகள் சொல்கின்றன. இப்படிப்பட்டோர் பெரும்பாலும் வாழ்வில் பெற்றவர்களாக இருப்பார்களாம். மேலும், பல்வேறு கலைகளில் திறன் பெற்றவர்களாக இருப்பார்களாம்.
source: boldsky.com