வெயில் காலம் வந்துவிட்டாலே முகத்தில் அதிகப்படியான வறட்சி ஏற்படுவது இயல்பான ஒன்று. வெயில் காலத்தில் அன்றாடம் ஏற்படும் சருமம் பிரச்சனைகளை வீட்டிலேயே சரி செய்ய முடியும்.
வெயிலில் ஏற்படும் சரும கருமையை போக்கும் பேஸ் பேக்
வெயில் காலம் வந்துவிட்டாலே முகத்தில் அதிகப்படியான வறட்சி ஏற்படுவது இயல்பான ஒன்று. வெயில் காலத்தில் அன்றாடம் ஏற்படும் சருமம் பிரச்சனைகளை வீட்டிலேயே சரி செய்ய முடியும்.
சன்டேனிங் பேக்குகள்:
முல்தானிமெட்டி – 2 டீஸ்பூன், தேன் – ஒரு டீஸ்பூன், பட்டை – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 8 சொட்டு.
இவற்றைச் சுத்தமான பவுல் ஒன்றில் ஒன்றாகக் கலந்து முகத்தில் பேக் போட்டுக்கொள்ளவும். 20 நிமிடத்திற்குப் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ கருமை நீங்கி முகம் பிரகாசமாய் இருக்கும்.
கடலை மாவு – ரெண்டு டீஸ்பூன், தேன் – ஒரு டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – ஒரு சிட்டிகை, க்ளசரீன் – சில சொட்டு, தயிர் – ஒரு டீஸ்பூன், பால் – ஒரு டீஸ்பூன். சுத்தமான காட்டன் துணியை பாலில் நனைத்து முகத்தை ஒரு முறை சுத்தம் செய்து கொள்ளவும். பின் பேக்கிற்காக மேலே கொடுத்துள்ள எல்லாப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் பேக்காக அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ முகம் டால் அடிக்கும்.
கற்றாழையின் சதைப்பகுதி – 2 டீஸ்பூன், ரெட் ஒயின் – 2 டீஸ்பூன் இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்தால் ஜெல்லி பதம் கிடைக்கும். அதை முகத்தை அப்ளை செய்து 10 நிமிடத்திற்குப் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ இறந்த செல்கள் உதிர்ந்து முகம் பளிச்சென்று இருக்கும்.
புதினாச் சாறு – 2 டீஸ்பூன்.கஸ்தூரி மஞ்சள் – 2 டீஸ்பூன், அரிசி மாவு – 4 டீஸ்பூன் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ முகம் ஃப்ரெஷாக இருக்கும்.
பேக் போட நேரம் இல்லையென நினைப்பவர்கள் வெயிலில் போய் வந்தவுடன் பால் – 4 டீஸ்பூன்,தேன் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன் கலந்து சுத்தமான பஞ்சால் முகத்தைத் துடைத்து எடுக்க அழுக்குகள், இறந்த செல்கள் உடனடியாக நீங்கும்.
அன்றாடம் பேஸ் பேக் போட முடியாது என்பவர்கள்… தக்காளி விழுது – ஒரு டீஸ்பூன், தயிர் – ஒரு டீஸ்பூன், முல்தானிமெட்டி – 2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – கால் டீஸ்பூன் நான்கையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் அப்ளை செய்து கால் மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவ வெயிலினால் கறுத்த உங்கள் முகம் தகதகவென மின்னும்.