இதுவரை ஹேர்கலரிங் செய்யாதவரா நீங்கள்? உங்களுக்கான சுவாரஸ்ய தகவல்கள் இங்கே. உங்கள் தலைமுடி மினுமினுப்பாகவும், உங்கள் தோற்றத்தையே புரட்டிப்போட்டு உங்களை இளமையாக காட்டவும் ஹேர்கலர் உதவிபுரிகிறது.
முதல்முறையாக கலரிங் செய்துகொள்பவர்கள் கடைக்குச் சென்றாலும் சரி, நீங்களே வீட்டில் செய்துகொண்டாலும் சரி, இது குறித்த சில தகவல்களை முதலில் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அடுத்த 3-9 மாதங்களுக்கோ அல்லது உங்கள் வாழ்நாள் முழுவதுமோ இது உங்களுடன் பயணிக்கப்போகிறது.
மென்மையான நிறங்களோ அல்லது அடிக்கும் வகையிலான அடர்த்தியான நிறங்களோ முதல் முறையாக கலரிங் செய்துகொள்பவர்கள் மிரட்டும் வகையில் காட்சியளிப்பார்கள்.
கலரிங் குறித்து தகவல் சேகரிப்பில் ஈடுபடுதல் மூலமாக எந்த கலரை தேர்வு செய்யலாம் என்ற புரிதல் கிடைக்கலாம், உங்களை தயார்படுத்திக்கொள்ளவும் இது உதவும்.
ஹேர்கலரிஸ்ட் ஒருவரிடம் தக்க ஆலோசனை பெற்றுக்கொள்வதும் நல்லதே. அவரிடம் அதிகபட்ச கேள்விகளை முன்வையுங்கள், நீங்கள் செல்லப்போகும், செய்ய இருக்கும் விதம் சரிதானா என்பதை உறுதிசெய்துகொள்ள அது உதவும்.
ஹேர்கலரிங் செய்யும் முன்னர் தெரிந்துகொள்ளவேண்டியவை:
1. உங்கள் வாழ்க்கைமுறை – நீங்கள் பரபரப்பான அல்லது இலகுவான என எந்த வகை வாழ்க்கை சூழலில் இருக்கிறீர்கள்? உங்களது புதிய ஹேர்கலரை பராமரிப்பதில் எந்தளவு நேரமும், பணமும் உங்களால் செலவிட முடியும்? உங்கள் வாழ்க்கைமுறையுடன் ஹேர்கலரிங் இணைப்பாக அல்லது முரணாக என எந்த வகையில் ஒத்துப்போகும்? இவை அனைத்தையும் குறித்து யோசிப்பது கட்டாயமாகும்.
2. உங்கள் தோல் மற்றும் கண்களின் வண்ணம் – உங்களது ஹேர்கலரிங், உங்களது தோல் மற்றும் கண்களின் நிறங்களுடன் ஒத்துப்போக வேண்டும். மென்மையான நிறங்கள் சில நேரங்களில் ஒத்துப்போகலாம், அடிக்கும் வகையிலான நிறங்கள் விகாரமாகவும் தோன்றலாம். உங்கள் விருப்பநிலை எது என்பதில் உங்கள் நிறத்தேர்வு உள்ளது.
3. உங்கள் மனநிலை – உங்கள் வாழ்வில் ஏற்பட்ட பெரிய மாற்றத்தினால், காதல் முறிவால், வேலையிழப்பால் உருவான மன அழுத்தத்தை போக்க ஹேர்கலரிங் செய்கிறீர்களா? உங்கள் முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும்.
4. முடியின் ஆரோக்கியம் – ஹேர்கலரிங் செய்யும் இருக்கையில் அமர்வதற்கு முன் தலைமுடியின் ஆரோக்கியம் குறித்து உங்களுக்கு நீங்களே கேள்விகேட்டுக் கொள்ளுங்கள். ஹேர்கலரிங் செய்யும் போது ஏற்படும் அழுத்தத்தை உங்கள் முடி தாங்குமா? கலரிங் செய்பவர் இது குறித்து உங்களுக்கு ஆலோசனைகள் கொடுக்க வேண்டும்.
இதுவே, ஹேர்கலரிங் செய்வதற்கு முன்னர் நாம் அறிந்துகொள்ளவேண்டிய முக்கிய விஷயங்களாகும். பாதுகாப்பான மூலப்பொருட்கள் உதவியுடன் ஹேர்கலரிங் செய்வதை உறுதிசெய்துகொள்ளவேண்டும்.