கலரிங் செய்யப்பட்ட தலைமுடி பார்ப்பதற்கு அழகாகவும், ட்ரெண்டியாகவும் உள்ளது என்றால் நிச்சயம் அதற்கு கூடுதலான பராமரிப்பு தேவைப்படும். கலரிங் என்பது ரசாயன முறை என்பதால் அது முடியில் உள்ள இயற்கையான ஈரப்பதம் மற்றும் நீர்ச்சத்தை குறைத்துவிடுகிறது. முடியில் அதிகமான கலர் மற்றும் சூடான ஸ்டைலிங் சாதனங்களை பயன்படுத்தப்படும் போது அதிகளவிலான கவனிப்பும் முடிக்கு தேவைப்படுகிறது. கலரிங் செய்த முடி அழகாக தெரியவேண்டுமெனில் அது பளபளப்புத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். சிக்கல் நிறைந்த கலரிங் செய்யப்பட்ட முடியானது அழகை கெடுக்கவே செய்யும்.
கலரிங் செய்யப்பட்ட முடியில் பளபளப்புத்தன்மையை நீடிக்கச் செய்வது எப்படி என தெரிந்துகொள்வோம்!
1. தலைமுடிக்கான வீட்டு சிகிச்சை முறைகள்:
தலைமுடிக்கான சிகிச்சையில் வீட்டில் தயாரிக்கப்படும் முறை எளிதானதாகவும் பலன்தரக்கூடியதாகவும் இருக்கும். இயற்கை மூலப்பொருட்களானது முடி மற்றும் தலையின் மேல்பகுதி ஆகியவற்றிற்கான ஊட்டச்சத்தை வழங்குகிறது.
இந்த விதத்தில் இயற்கை பொருளான தேங்காய் எண்ணெயை பரிந்துரைக்கிறோம், இது முடியின் வளர்ச்சியை தூண்டச்செய்து, முடி சிக்கலையும் போக்குகிறது.
தேங்காய் எண்ணெய்யை லேசாக தலையின் மேற்பகுதியில் தடவி, லேசாக மசாஜ் செய்து கொடுக்க வேண்டும், பின்னர் ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும்.
பின்னர் இயற்கை மூலப்பொருட்கள் நிறைந்த ஷேம்பூவை பயன்படுத்தி முடியை அலசவும். கலரிங் முடியை சுத்தம் செய்ய கடினமான மூலப்பொருட்கள் நிறைந்த ஷேம்பூவை பயன்படுத்துவது மிகவும் மோசமான நிலைக்கு எடுத்துச்செல்லும்.
இயற்கை பொருட்களான வெட்டிவேர், வேம்பு ஆகியவற்றை மூலப்பொருட்களாக கொண்ட ஷாம்பூவை பயன்படுத்தும் போது முடி மற்றும் தலையின் மேல்பகுதியை வறண்டுவிடாமல் சுத்தம் செய்யும்.
2. கண்டிஷன் கண்டிஷன் கண்டிஷன்
நீங்கள் கலரிங் செய்திருந்தால், ஒவ்வொரு முறை முடியை அலசும் போதும் கண்டிஷன் செய்யுங்கள். இப்படி செய்வதால் அது முடியை மென்மையாக்கி, சிக்கலை குறைத்து, வளவளப்பாக்குகிறது.
டை மற்றும் பிரிசர்வ் செய்த பொருட்கள் இல்லாத ஷாம்பூவை பயன்படுத்துவதம் மூலம் இயற்கையான முறையில் முடியை பாதுகாக்கலாம்.
3. குளிர்ந்த நீரில் அலசுதல்:
முடியை அலசி, கண்டிஷன் செய்த பின்னர் இறுதியாக குளிர்ந்த நீரில் ஒரு முறை அலசிவிடுங்கள். இதன் வாயிலாக முடியின் வெளிப்புற பகுதியின் பளபளப்பு மேலும் அதிகரிக்கும்.
குளிர்காலத்தின் போது மிதமான சூடு கொண்ட தண்ணீரால் முடியை அலசினாலும் இறுதியாக ஒரு முறை குளிர்ந்த நீரில் அலசுவதை உறுதி செய்யுங்கள்.
4. அதிகம் சாப்பிடுங்கள்
பச்சை காய்கறிகள், உலர் பழங்கள், புரோட்டீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
5.முடி ஈரமாக இருந்தால் பிரஷ் பயன்படுத்தாதீர்கள்
காய்ந்த முடியை காட்டிலும் ஈரமான முடிக்கு உடையக்கூடிய தன்மை அதிகம். எனவே முடி ஈரமாக இருந்தால் அதிக உடையும்தன்மையும், சிக்கல் நிலையும், குறைந்த பளபளப்புமே எஞ்சும்.
எனவே குறைந்தபட்சம் 80% அளவிற்கு முடி உலர்வாக இருந்தால் மட்டுமே பிரஷ் பயன்படுத்துங்கள்.
உங்களது சீப்பானது அதிக இடைவெளி கொண்டதாகவும், கடினமற்றதாகவும் இருக்கட்டும்.
6. அவ்வப்போது முடியை ஒழுங்கமைத்துக்கொள்ளுங்கள்
முடியை வெட்டாமல் சிறிது காலம் விட்டுவிட்டால் அது உடையும்தன்மை மற்றும் முடி பிளவுக்கு வழிவகுக்கும்.
இதன் மூலம் முடிசிக்கல் மட்டுமல்லாது முடி உடையவும் செய்யும் எனவே 2-3 மாத கால இடைவெளியில் முடியின் அடிப்பகுதியை ட்ரிம் செய்துகொள்ளுங்கள், அதிலும் முக்கியமாக கலரிங் செய்யப்பட்டிருந்தால் ட்ரிம் செய்வதை தவிர்க்க வேண்டாம்.
7. அதிகம் அலச தேவையில்லை
முடியின் வேர்கால்களில் இயற்கையான எண்ணெய் தங்கிவிடுவது நல்லதே, எனவே அடிக்கடி முடியை அலசுதல் தேவையில்லாதது.
8. சிறிது இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள்
உங்கள் முடி அளவிற்கு அதிகமாக சேதம் அடைந்திருந்து, சிக்கலாகி, மந்தமாக இருந்தால் கலரிங் செய்வது, சூடான ஸ்டைலிங் சாதனங்களை பயன்படுத்துவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
முடியானது தன்னைத் தானே சரிசெய்துகொள்ள கால அவகாசம் கொடுங்கள்..
மேற்கூறிய முறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் முடி மீண்டும் பளபளப்பதை பார்க்கமுடியும்.
இந்த கட்டுரையை பகிர்வதன் மூலம் உங்கள் நண்பர்களின் முடி பிரச்சனைக்கும் தீர்வளிக்க உதவலாம்!