தலைமுடி சிகிச்சை

இளநரைக்கு எளிய வீட்டு வைத்தியம்

* நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி ஆகியவை தலா 10 கிராம்- இவை அனைத்தையும் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்கவைக்கவும்.

இந்தக் கலவையை நான்கு நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சூரியக் கதிர்கள் பட்டு எண்ணெயில் சாரம் இறங்கும். பின்பு வெள்ளைத் துணியில் அதை வடிகட்டவும். குளிக்கும் முன் தலையில் தேய்த்து வந்தால் நரை குறையும். செம்பட்டை முடி கருமையாகும்.

* செம்பருத்தி பூ, அவுரி விதை, காயவைத்த நெல்லிக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். நரைமுடிக்குத் தேவையான அளவு அந்தக் கலவையைத் தண்ணீரில் கலந்து ஒரு இரும்பு பாத்திரத்தில் நான்கு மணி நேரங்கள் வைக்கவும். வெள்ளை முடி உள்ள இடங்களில் அதைத் தடவி அரை மணி நேரத்தில் அலசிவிடவும். இது முடியைக் கருப்பாக்கும். வெள்ளை முடி அதிகமாகாமல் தடுக்கும்.

* 50 கிராம் அளவுக்கு மருதாணிப் பொடியில் ஒரு முட்டை, 5 மி.லி. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், 2 டேபிள்ஸ்பூன் தயிர், 2 டேபிள்ஸ்பூன் காபி (சிக்கரி கலக்காதது) அல்லது டீ டிகாக்‌ஷன், எலுமிச்சைச்சாறு 5 முதல் 8 சொட்டு, தேவைக்கேற்ப வெதுவெதுப்பான நீர் சேர்க்கவும். இவற்றை ஒரு இரும்பு பாத்திரத்தில் 4 மணி நேரம் ஊற வைக்கவும். தலையில் ஆயில் மசாஜ் செய்த பின் கொஞ்சம் கொஞ்சமாக முடியை எடுத்து எல்லா பக்கமும் பரவும்படி இதைத் தடவிக் கொண்டை போடவும். வெறும் பளபளப்பு மட்டும் வேண்டுமானால், அரை மணி நேரத்தில் குளிக்கவும். கலர் வேண்டுமானால் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைத்துக் குளிக்கவும். சுருட்டை முடி உள்ளவர்கள் ஹென்னா போடுவதை தவிர்க்கலாம்.
305dd262 a8a0 4a43 ab50 4fda0183beca S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button