29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
KATRALAI
தலைமுடி சிகிச்சை

முடி தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய 9 மூலிகைகள் !…..

நமது வாழ்நாள் முழுதும் தலைமுடிக்கு எண்ணற்ற பிரச்சனைகள் வந்துகொண்டுதான் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. முடி உதிர்தல், நரைமுடி, பொடுகு, உச்சந்தலை அரிப்பு, வறட்சி, மந்தநிலை என முடியுடன் தொடர்புடைய பிரச்சனைகள் பல. வாழ்வுமுறை மாற்றத்தால் வரும் ஹார்மோன் சரிசமமற்ற நிலை, பருவமாற்றத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் போன்ற பலவும் தலைமுடிக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இருப்பினும் நூற்றாண்டுகளாக இந்தியாவில் எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகை பொருட்கள் முடி மற்றும் உடல் குறித்தான பிரச்சனைகளுக்கு அதிசயிக்கத்தக்க வகையில் நிவாரணம் அளிக்கின்றன.

முடி தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய 9 இந்திய மூலிகைகள் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்

1. வேம்பு:

சிறந்த கிருமிநாசினியாகவும், நுண்ணுயிரிகளை எதிர்த்து போரிடும் தன்மை கொண்டதாகவும் அறியப்படுவது வேம்பு. பாரம்பரிய இந்திய மருத்துவத்தின் மிக முக்கிய மூலப்பொருளான வேம்பு, பல்வேறு வகையான தோல் மற்றும் உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. முடிக்கு இதனை பயன்படுத்துவதனால் பொடுகு, அரிப்பு, பூஞ்சை தொற்று ஆகிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. முடி உதிர்தல் மற்றும் இளநரை ஆகியவற்றை போக்கி முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது வேம்பு எண்ணெய்.

KATRALAI

2. கற்றாழை

தோலுக்கு கற்றாழை சிறந்த ஒன்று என்பதை பலரும் அறிவோம், ஆனால் முடியை வலுப்படுத்தி, உச்சந்தலையை ஆரோக்கியமாகவும் மாற்றுவதில் கற்றாழை பங்கு உள்ளது என்பது நாம் அதிகம் அறியாத ஒன்று.

முடியின் வளர்ச்சியை தூண்டுவதுடன், முடியின் வேர்கால்களின் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்தும் அமினோ ஆசிட், புரோட்டியோலிடிக் நொதிகள் கற்றாழையில் நிறைந்துள்ளது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு சக்திகள் உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்கிறது. காரகாடித்தன்மை சமநிலையையும் கற்றாழை பாதுகாக்கிறது.

3. கரிசலான்கண்ணி

சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்த கரிசலான்கண்ணி, முடி உதிர்தல், இளநரையை போக்கி, முடியின் வேர்களை பலப்படுத்துகிறது. முடியின் ஆரோக்கியத்தை காப்பதில் இது ஒரு அருமருந்தாகும்.

4. கறிவேப்பிலை

இறந்த மயிர்கால்களை போக்க ஆண்டிஆக்ஸிடெண்ட்கள் நிறைந்த கறிவேப்பிலை கைகொடுக்கிறது. மயிர்கால்களை வலுப்பெற இது உதவுகிறது. முடி உதிதலை தடுத்து முடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் பீட்டா கரோடீன், புரோட்டீன்கள் இதில் நிறைந்துள்ளது.

5. நெல்லி

முடியின் உற்ற நண்பனாக நெல்லி விளங்குகிறது. இதில் உள்ள வைட்டமின்-சி வறட்சியை போக்கி, அரிப்பை தடுத்து, பொடுகை நீக்குவதுடன் ஆரோக்கியமான உச்சந்தலைக்கு உத்திரவாதம் தருகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இது இயற்கையான கண்டிஷனராகவும் செயல்படுகிறது.

6. வெந்தயம்

வெந்தய விதைகளை முடியில் பயன்படுத்தும்போது முடியின் வளர்ச்சி தூண்டப்படுவதுடன், பளபளப்புத்தன்மையும் அதிகரிக்கச் செய்கிறது. இதில் புரோட்டீன் சத்து நிறைந்துள்ளதால் முடி உதிர்தலை குறைக்கிறது. உச்சந்தலை எரிச்சல் மற்றும் பொடுகை குறைப்பதிலும் இது முக்கிய பங்காற்றுகிறது.

7. எலுமிச்சை

சுத்தமான, பொடுகில்லாத முடிக்கு கிருமிநாசினியான, பூஞ்சை தடுப்பு சக்தி நிறைந்த எலுமிச்சை கைகொடுக்கிறது. வைட்டமின் c, B சத்துகள் நிறைந்துள்ளதால் முடி வலிமைக்கு உதவுகிறது. முடியின் வேர்களில் எண்ணெய் சத்தை தக்கவைக்கவும் இது உதவுகிறது.

8. சீயக்காய்

ஆண்டாண்டு காலமாக இந்தியாவில் சீயக்காய் பயன்பாடு இருந்து வருகிறது. கண்டிஷனராகவும், முடி அலசவும் இயற்கை முறையில் உதவும் சீயக்காய் காரகாடித்தன்மை பாதுகாத்து பொடுகு தொல்லையையும் சீராக்குகிறது.

9. பிரம்மி

மன மேம்பாட்டை அதிகரித்து, நரம்பு மண்டலத்தை பாதுகாப்பதில் பிரம்மியின் பங்கு அளப்பரியது. முடி தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்வதில் பல ஆண்டுகளாகவே இந்தியாவில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. முடி வளர்ச்சிக்கும், பளபளப்புக்கும் நீண்ட கால அடிப்படையில் இது கைகொடுக்கிறது.

மேற்கூறிய 9 மூலிகைகள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பை அளிக்கின்றன. பொடுகு, முடி உதிர்தல் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த மூலிகைகளின் பங்கு முக்கியமானது. நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களில் இந்த மூலிகைகள் இருந்தால் அது சிறந்த தேர்வாக இருக்கும்!

Related posts

உடனே செய்யுங்க ! ஹேர் மாஸ்க்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது.

nathan

கூந்தல் வேகமாய் வளர என்ன செய்ய வேண்டும்??

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த காய்கறிகள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்

nathan

கூந்தலுக்கு போடும் சாயம் பக்க விளைவை ஏற்படுத்துமா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…நரை முடியால் மீண்டும் கருமையாக மாற முடியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உங்களுக்கு முடி நீளமா வளரனும்மா? அப்ப இந்த இந்திய ரகசியங்கள ஃபாலோ பண்ணுங்க…!

nathan

முடி கொட்டுவதை தடுக்கும் நெல்லிக்காய் தைலம்! மருத்துவ டிப்ஸ்!!

nathan

முடி உதிர்வை தடுக்க இந்த 3 பொருட்களைக் கொண்டு ஒரு சிகிச்சை முறை தெரியுமா!!

nathan

சொட்டை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் சில ஆயுர்வேத வழிகள்!

nathan