30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
blackets
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து பிளாக் ஹெட்ஸை போக்க டிப்ஸ்!………

பிளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸ் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து பிளாக் ஹெட்ஸை போக்கி சருமத்தை அழகாக்கலாம்.

பிளாக் ஹெட்ஸை போக்கும் ஓட்ஸ் ஸ்க்ரப்

சருமம் பிரகாசமாக இருக்க நாம் தொடர்ச்சியாக சரும பராமரிப்பில் ஈடுப்படுவது அவசியம். குறிப்பாக ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் சருமத்தை பளிச்சென்று வைத்து கொள்ள பெரிதளவு மெனக்கெட வேண்டும்.

ஆயில் ஸ்கின் உள்ளவர்களை தான் பருக்கள், பிளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் மற்றும் கரும்புள்ளிகள் அதிகம் தாக்கும்.

இந்த பிளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸ் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். மேலும் சருமத்தை சொரசொரப்பாக மாற்றிவிடும். மூக்கு, தாடை, கன்னம் போன்ற இடங்களில் தான் இந்த பிளாக் ஹெட்ஸ் அதிகம் உருவாகும்.

வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து பிளாக் ஹெட்ஸை போக்கி சருமத்தை அழகாக்கலாம்.

blackets

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 1
ஓட்ஸ் – 2 மேஜைக்கரண்டி
தேன் – 1 மேஜைக்கரண்டி

செய்முறை

வாழைப்பழத்தை நன்கு மசித்து வைத்து கொள்ளவும். அதேபோல ஓட்ஸை பொடித்து கொள்ளவும். ஒரு பௌலில் பொடித்து வைத்த ஓட்ஸ் சேர்த்து அத்துடன் தேன் மற்றும் மசித்து வைத்த வாழைப்பழத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி, நன்கு மசாஜ் செய்யவும்.

தொடர்ந்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை இந்த கலவையை கொண்டு ஸ்க்ரப் செய்து பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடவும். பிறகு உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்சுரைசர் பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள துளைகளை மூட உதவும்.

வாரத்தில் இரண்டு முறை இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள பிளாக் ஹெட்ஸ் மறைந்து முகம் பிரகாசிக்கும்.

ஓட்ஸ், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சுத்தம் செய்யும். மேலும் முகத்தில் உள்ள அதிகபடியான எண்ணெயை அகற்றிவிடும். தேனில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டி-மைக்ரோபியல் தன்மை உள்ளது. இது சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும்.

வாழைப்பழமும் சருமத்தை மாய்சுரைஸ் செய்து முகத்திலுள்ள அழுக்குகளை அகற்றி மென்மையாக வைத்திருக்கும். ஆயிலி ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த ஸ்க்ரப் மிகவும் நல்லது.

Related posts

பொலிவு தரும் முகப் பூச்சுகள்

nathan

Periods பற்றி என்ன தெரியும்? சர்வைவரில் ஆண் போட்டியாளர்களை வாயடைக்க வைத்த பெண்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பருக்களால் உண்டான தழும்புகளுக்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆரஞ்சு பழத்தோலை கொண்டு மிருதுவான சருமத்தை பெற….

nathan

புருவம் அடர்த்தியாக வளர இத செய்யுங்கள்!…

sangika

அரிசி மாவ இப்படி யூஸ் பண்ணுங்க. எப்போதும் இளமையான சருமம் வேண்டுமா

nathan

nathan

முகம் பளபளக்க சீரகத் தண்ணீர்!…தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா ஒளிரும் சருமத்தை பெற உதவும் ஜூஸ்

nathan