இயற்கை மாஸ்க்குகள்:
1) கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, தேனையும் சேர்த்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
2) கற்றாழையின் ஜெல்லை தினமும் தடவி மசாஜ் செய்து கழுவினால், நாளடைவில் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்கலாம்.
3) முட்டையை உடைத்து, தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
4) சந்தனப் பொடியுடன், மஞ்சள் தூளையும், நீரையும் சேர்த்து பேஸ்ட் பதத்தில் முகத்தில் தடவி 20 -25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
5) வேப்பிலை : வேப்பிலையை நீரில் போட்டு ஆவிப்பிடித்து, முகத்தை நல்ல சுத்தமான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் போய்விடும்.
6) கனிந்த பப்பாளியை மசித்து, அதில் பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து அலச வேண்டும்.
7) பாதாமை இரவில் பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைய அரைத்து முகத்தில் தடவி பத்து நிமிடம் மசாஜ் செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.