27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
doctor advice
மருத்துவ குறிப்பு

எச்சரிக்கை! உங்களுக்கு இந்த 9 அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவ பரிசோதிக்க எடுக்க வேண்டும்!

நமது உடலில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் நாம் அதனை பெரும்பாலும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. இது ஆரம்ப நிலையில் எந்தவித பாதிப்பையும் நமக்கு ஏற்படுத்தாது. ஆனால், அதன்பின் பல்வேறு வகையில் மோசமான விளைவுகளை உடலில் உண்டாக்கும். சாதாரணமாக நாம் நினைக்கும் அறிகுறிகள் கூட நமது உடல் ஆரோக்கியத்தை ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும்.

உடலில் ஏற்படுகின்ற சாதாரண காய்ச்சல் முதல் மிக மோசமான வயிற்று வலி வரை எல்லாமே ஏராளமான நோய்களுக்கான வழிகளை ஏற்படுத்தும். ஆதலால், உடலில் எந்த ஒரு அறிகுறி புதுமையாக தென்பட்டாலும் உடனடியாக அதை மருத்துவரிடம் பரிசோதித்து கொள்வது நல்லது. இந்த பதிவில் எந்தெந்த அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை சாதாரணமாக விட்டு விட கூடாது என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

வியர்த்து கொட்டுதல்

அளவுக்கு அதிகமாக உடலில் வியர்த்து கொட்டினால் அதை மிக சாதாரண விஷயமாக எடுத்து கொள்ளாதீர்கள். அதிக அளவில் வியர்த்து கொட்டினால் அவை இதய கோளாறுகள், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் போன்றவற்றை குறிக்கும் அறிகுறியாக கூட இருக்கலாம். ஆதலால், இது போன்று இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

பசியின்னை

எந்த ஒரு காரணமும் இல்லாமல் பசியே எடுக்காமல் இருந்தால் அது நீங்கள் நினைப்பது போல சாதாரண விஷயம் இல்லை. ஏதேனும் தொற்றுகளினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் இது போன்ற ஆபத்துகள் உண்டாக கூடும். அவசியம் இதை பற்றி பரிசோதிக்க வேண்டும்.

உடல் நிலை உங்களது உடலின் தட்பவெப்பம் அதிகமாக இருந்தால் அவையும் மோசமான உடல் நல குறைபாட்டை கொண்டுள்ளது என அர்த்தமாம். தொடர்ந்து தும்பலோ, இரும்பலோ, தலைவலியோ இருந்தால் அதை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். அவற்றை உடனடியாக பரிசோதித்து கொள்ளுங்கள்.

மன அழுத்தம் அதிக அளவில் மன அழுத்தம் இருந்தால் நாளுக்கு நாள் அதன் வீரியம் அதிகரிக்க கூடும். ஆதலால், இதனை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் உடனடியாக மருத்துவரிடம் அணுகுங்கள். சிலருக்கு மன அழுத்தம் கூடினால் மாரடைப்பு போன்ற பலவித பிரச்சினைகள் உண்டாக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

அடிவயிற்று வலி நீண்ட நாட்களாக அடிவயிற்றில் வலி இருந்தால் அதை அவசியம் கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள். அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அதனால் பலவித பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. முக்கியமாக வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளால் உண்டாக கூடிய பாதிப்பாகவும் இருக்கலாம்.

தசை வலி தசைகளில் வலியோ அல்லது சோர்வோ ஏற்பட்டால் அதுவும் சிலபல பாதிப்புகளை உண்டாக்க போகிறதென்று அர்த்தம். உடலுக்கு அதிக ஓய்வு தேவைப்படுகிறது என இந்த அறிகுறி உணர்த்துகிறது. மேலும், இதே நிலை நீண்ட காலமாக இருந்தால் மருத்துவ பரிசோதனை அவசியம்.

அதிக குளிர் இதுவரை இல்லாத அளவில் உங்களது உடல் நலம் குளிராக ஜல்லென்று இருந்தால் அவை மிக மோசமான நிலைக்கு உங்களை தள்ளும். ஆதலால், இப்படி நீண்ட காலமாக உடல் நிலை ஜல்லென்று இருந்தால் அதை பற்றி மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

சோர்வு காரணமே இல்லாமல் அடிக்கடி உங்களது உடல் சோர்வான நிலையை அடைந்து விடுகிறதா? இப்படி இருந்தால் அதனால் மோசமான பாதிப்புகள் கூட உண்டாகும். உடலில் அடிக்கடி சோர்வை ஏற்படுத்தினால் உடல்நல கோளாறுகள் பல உள்ளன என்பதை இது உணர்த்தும்.

மருத்துவ பரிசோதனை பொதுவாக நமது உடலில் புதுவித மாற்றங்கள் நீண்ட நாட்களாக இருந்தால் அதை நிச்சயம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் இது போன்ற அறிகுறிகள் ஆபத்தான விளைவுகளை தரும். ஆதலால், மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது சிறந்த பலனை தரும்.
doctor advice

Related posts

வாய் துர்நாற்றமா? யாரும் பக்கத்துல வரதில்லையா? இத வெறும் 5 நாட்கள் சாப்பிட்டா போதும்!

nathan

இந்த ஒரு எண்ணெய் போதும்..வெரிகோஸ் வெயின் பிரச்சனை உள்ளதா?

nathan

உபயோகமான‌ பாட்டியின் சில‌ வீட்டு மருத்துவக் குறிப்புகள்! இய‌ற்கை வைத்தியம்!

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்களுக்கு ‘கக்கா’ இந்த நிறத்தில் வெளியேறுகிறதா? அப்ப உங்க உடலில் என்ன பிரச்சன இருக்குனு தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா தக்காளி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நோய்கள்?

nathan

ஒரு குழந்தைக்கு நீரிழிவு நோய் உள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

nathan

வாய்வு தொல்லையால் ரொம்ப அவஸ்தைப்படுறீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கர்ப்பப்பை கட்டி (fibroids), மற்றும் என்டோமேட்ரியோசிஸ், ஏன் எதனால் எப்படி வருகிற…

nathan

குழந்தை பெற்றுக் கொள்வதை நினைத்தாலே பயப்படுபவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan